Advertisement

சுத்திகிரியை பூஜைகள் நாளை துவக்கம்; மகரவிளக்கு பாதுகாப்புக்கு 3,000 போலீஸ்

சபரிமலை: சபரிமலையில், மகர விளக்குக்கு முன்னோடியாக, சுத்தி கிரியை பூஜைகள், நாளை துவங்குகின்றன. மகரஜோதி தரிசனத்துக்கு, சபரி மலையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பாதுகாப்புக்காக, 3,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


கேரளாவில், பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலில், மகரஜோதி நாளில் நடக்கும் மகர சங்கரம பூஜைக்கு முன்னோடியாக, சுத்திகிரியை, நாளை துவங்குகிறது. நாளை மாலை, 'பிராசாத சுத்தி' பூஜைகள் நடக்கவுள்ளன.


நாளை மறுநாள், உச்சபூஜைக்கு முன், பிம்ப சுத்தி பூஜைகள் நடக்கும். தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில், மேல்சாந்தி
வாசுதேவன் நம்பூதிரி மற்றும் பூஜாரிகள் இந்த பூஜைகளை நடத்துவர்.


மகரவிளக்கு பாதுகாப்பில், 3,000 போலீசார் ஈடுபடுகின்றனர். எஸ்.பி., அந்தஸ்திலான இரண்டு தனி அதிகாரிகள், சுழற்சி முறையில் பணிகளை கண்காணிக்கின்றனர். சன்னிதானத்தில், போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இங்கு, 24 மணி நேரமும், 100 போலீசார் தயார் நிலையில் இருப்பர். பாண்டித்தாவளம் உட்பட ஒன்பது இடங்களில், ஜோதி தரிசனம் நடத்த, வசதி செய்யப்பட்டுள்ளது.


மகரஜோதி தரிசனத்துக்கு பின், திருவாபரணம் அணிந்த அய்யப்பனை வணங்க, பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும்; இதை சமாளிக்க, மாளிகைப்புறம் நடைப்பந்தலில் இருந்து, மாளிகைப்புறம் மேல்பாலத்துக்கு, புதிதாக இரும்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மத்திய அதிவிரைவு படையினர், பேரிடர் தடுப்பு நிவாரணப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.


மகரவிளக்கு நாளில் இளம் பெண்கள் வந்தால், அந்த பிரச்னையை எதிர்கொள்ள, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பெண்களை தடுக்க, பக்தர் குழுவினரும் தயாராக உள்ளனர்.


பள்ளிவாசலுக்கு செல்ல முயன்ற பெண்கள் சிறையில் அடைப்பு: சபரிமலையில், இளம் பெண்கள் தரிசனம் நடத்தியதற்கு எதிராக, எருமேலி பள்ளிவாசலுக்கு செல்ல வந்த, தமிழகத்தின், திருப்பூர், சுசீலாதேவி, 35, ரேவதி, 39, திருநெல்வேலி காந்திமதி, 51, ஆகிய மூவரும், பாலக்காட்டில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சிற்றுார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில், எருமேலி ஜமாஅத் தலைவர் ஷாஜஹான் கூறியதாவது: பெண்கள் எருமேலி பள்ளி வாசலுக்கு வருவது தவறு இல்லை. எருமேலி பள்ளிவாசலுக்கு, இளம் வயது பெண்கள் வரலாம். சுற்றி வந்து வழிபடலாம். ஆனால், வணக்க அறைக்கு மட்டும் செல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (20)

 • oce - chennai,இந்தியா

  எருமேலி பள்ளிவாசலுக்கு, இளம் வயது பெண்கள் வரலாம். சுற்றி வந்து வழிபடலாம். ஆனால், வணக்க அறைக்கு மட்டும் செல்ல முடியாது. அதற்கு காரணம் கேட்டால் சொல்ல மாட்டான்.

 • oce - chennai,இந்தியா

  ஜமதக்கினி முனிவரின் மகன் பரசுராமன். அவன் மக ரிஷி யல்ல. சபரி மலை கோயில் நிர்வாகம் சொல்லும் பரசுராமன் அவனாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.

 • oce - chennai,இந்தியா

  பரசுராம மகரிஷி தாழ மண் குடும்பத்திற்கு தந்திரம் சொல்லிக்கொடுத்ததாகவும் அந்த தந்திரி வம்சத்தினர் தற்போதுள்ள தந்திரிகள் என்று கூறப்படுகிறது.

 • oce - chennai,இந்தியா

  முதல் படி லாபம்.இரண்டாம் படி நஷ்டம் இப்படியே எண்ணிக்கொண்டு போனால் பதினெட்டு படிகளில் பதினெட்டாவது ஒற்றைப்படை எண் படி லாபத்தில் முடிகிறது. அதற்கு மேல் தளம். பதினெட்டு படிகளால் மேல் தளத்தின் தரையில் உள்ள ஐயப்பனுக்கு சக்தி குறைந்துவிட்டது. அதனால் தான் இந்த பிரச்சினைகள். கோயிலின் லாபம் பதினெட்டாவது படியுடன் முடிகிறது. அதன் சக்தி மூலவர் வரை செல்லவில்லை. பதினெட்டு படிகளை அகற்றவேண்டும்.

 • Saravanakumar - Dindigul,இந்தியா

  அந்த நீதிமன்றதிற்கு எதிராக உச்சநீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்...

 • Saravanakumar - Dindigul,இந்தியா

  பெண்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை சிற்றுார் மாஜிஸ்திரேட் நீதிமன்றமே மீறுகிறதே..... இப்ப அந்த பெண்கள் வந்து குரல் கொடுக்கலாமே. உச்சநீதிமன்ற தீர்ப்பு சரி என்றால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்களை விடுவித்து பள்ளிவாசலுக்குள் (வணக்க அறைக்கு) போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்ல வேண்டும்,,,, இல்லை என்றால் சபரிமலைக்கும் பெண்களை(10-50வயது)அனுமதிக்கக்கூடாது. செய்வாரா கேரள மதசார்பற்ற முதல்வர்.......

 • Saravanakumar - Dindigul,இந்தியா

  பெண்கள் எருமேலி பள்ளி வாசலுக்கு வருவது தவறு இல்லை. எருமேலி பள்ளிவாசலுக்கு, இளம் வயது பெண்கள் வரலாம். சுற்றி வந்து வழிபடலாம். ஆனால், வணக்க அறைக்கு மட்டும் செல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார் ஆமா நாங்களும் அதைத்தான் சொல்கிறோம்.இளம்பெண்கள் மற்ற ஐயப்பன் கோவில்களுக்கு சென்று வழிபடலாம். சபரிமலையை சுற்றிவரலாம்.சபரிமலை சன்னிதானத்திற்குள் மட்டும் வரக்கூடாது. @உங்களுக்கு வந்த ரத்தம் எங்களுக்கு வந்த தக்காளி சட்னியா.....

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  வாவர் மசூதி பற்றி எவரும் வழக்கு போடவில்லை. எந்த இந்து நீதிபதி யும் விபரீத தீர்ப்பு வழங்கவும் இல்லை. அயோத்தி 2.O, வட இந்தியர்களின் சதி. நம் தென்னிந்தியர்களே அதை சாதித்து கொடுத்து விட்டார்கள்.

 • Sangeedamo - Karaikal,இந்தியா

  "எருமேலி பள்ளிவாசலுக்கு செல்ல வந்த பெண்கள் கைது"..... twinkle twinkle little star என மதசார்பின்மை "மிளிர்வதை" பாருங்கள்... clap your hands clap your hands என ஆர்ப்பரித்திட வாருங்கள்...

 • வால்டர் - Chennai,இந்தியா

  எருமேலி ஜமாஅத் தலைவர் ஷாஜஹான் அவர்களே, காரணம் என்ன என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.

 • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

  \\எருமேலி பள்ளிவாசலுக்கு, இளம் வயது பெண்கள் வரலாம். சுற்றி வந்து வழிபடலாம். ஆனால், வணக்க அறைக்கு மட்டும் செல்ல முடியாது.\\ இது வாவர் மசூதிக்கு பொருந்தும். ஆனால் சபரிமலைக்கு பொருந்தாது. அப்படித்தானே. இதுதான் மதசார்பின்மை. ஒரு அரசின் இரட்டை வேடத்தை இதைவிட துல்லியமாக யாராலும் நிரூபிக்கமுடியாது.................

 • karutthu - nainital,இந்தியா

  பள்ளிவாசலுக்கு செல்ல முயன்ற பெண்கள் சிறையில் அடைப்பு:@ செய்தி சபரிமலைக்கு செல்ல போலீஸ் பாதுகாப்புடன் பெண்கள் அனுமதி நல்லா இருக்கே உங்க நியாயம்

  • வால்டர் - Chennai,இந்தியா

   உங்க கருத்தை மறுபடியும் ஒருவாட்டி படிங்க. எதோ சொல்ல வராய்ங்கள்ல. குட் ஜாப் பினராயி & கோ

 • oce - chennai,இந்தியா

  கேரளாவை சுற்றியுள்ள மாநிலங்கள் தமிழ் நாடு கர்நாடகா மற்றும் ஆந்திரா. இந்த மூன்று மாநிலங்களில் தமிழ் நாட்டில் இருந்து செல்லும் பக்தாஸ்கள் அதிகம். இருமுடி அரிசி நெய்வருமானங்களும் அதிகம்.

 • oce - chennai,இந்தியா

  கோயில் என்பது எப்போதும் தூய்மையாக வைத்திருக்க படவேண்டிய இடம். அதற்கு மேல் எதற்கு பிம்ப சுத்தி பிரச்சார சுத்தி பூஜைகள்.இருமுடி பக்தாஸ்களை இழுக்கடிக்கும் வேலை.

 • oce - chennai,இந்தியா

  சபரி மலை கோயிலில் தந்திரி கண்டரரு ராஜீவரரு கண்காணிப்பில் மேல்சாந்தி வாசுதேவ நம்பூதிரி மற்றும் பூஜாரிகள் பிம்ப சுத்தி பூஜைகள் செய்வார்கள்.அங்கு குறுக்கள்கள் எவரும் நியமிக்கவில்லயா. பூஜாரிகளுக்கு l சிறு தெய்வங்களுக்கு தான் பூஜை செய்ய தெரியும்.அவர்கள் பூஜையை ஐயப்பன் ஏற்பாரா.

 • oce - chennai,இந்தியா

  கம்மி இல்லாமல எந்த டம்மி வந்தாலும் கேரளா ஆட்சி இப்படித்தான் இருக்கும்.

 • suresh - chennai,இந்தியா

  3000 போலீசில் ஒரு 30 போலீஸ் அப்படியே பினராயை சுற்றி ரவுண்ட் அப் பண்ணனும். பொம்பளைங்க பின் வாசல் வழியா வருவதற்கு கதவை தொறந்து விட்டுடுவாரு மனுஷன்.

 • ஆப்பு -

  பேசாம ஒரு 2 லட்சம் போலீசாரை மஃப்டில சபரி மலைக்கு அனுப்பிச்சு கூட்டம் சேந்ததா காட்டிரலாம். கூடவெ ஒரு பத்தாயிரம் கம்யூனிஸ்ட் பொம்பளைங்களை தாடி மீசை ஒட்டி அனுப்பிருங்க.

 • blocked user - blocked,மயோட்

  இந்துவிரோத கம்மிகளை டிஸ்மிஸ் செய்தாலும் கூட அது சரியாக இருக்கும்... மசூதியில் பெண்கள் போகலாம் என்று இவர்களால் ஒன்றும் கிழிக்க முடியாது...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement