Advertisement

சி.பி.ஐ.இயக்குனர் அலோக்வர்மா ராஜினாமா

புதுடில்லி: பதவியில் இருந்து நீக்கப்பட்ட சி.பி.ஐ.இயக்குனர் அலோக்வர்மா தனது பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார். புதிதாக வழங்கப்பட்ட தீயணைப்பு துறை இயக்குநர் பொறுப்பை ஏற்க மறுத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.


சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டது. மத்திய அரசு, இருவரது பொறுப்புகளையும் பறித்து, கட்டாய விடுமுறையில் அனுப்பியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 'சி.பி.ஐ., இயக்குனராக அலோக் வர்மா தொடரலாம். கொள்கை முடிவுகள் எதையும், அவர் எடுக்கக் கூடாது.
அவரது பொறுப்புகள் குறித்து, பிரதமர் தலைமையிலான, உயர்நிலைக் குழு, ஒரு வாரத்துக்குள் முடிவெடுக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.


சி.பி.ஐ., இயக்குனராக, அலோக் வர்மா, நேற்று முன்தினம் மீண்டும் பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம், வரும், 31ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி, ஏ.கே. சிக்ரி அடங்கிய உயர்நிலைக் குழு, கூட்டம், டில்லியில் நேற்றும் நடந்தது.

சி.பி.ஐ., இயக்குனர் நீக்கம்இதில், 'சி.பி.ஐ., இயக்குனர் பதவியில் இருந்து, அலோக் வர்மாவை நீக்குவது' என, முடிவு எடுக்கப்பட்டது. அலோக் வர்மாவை பதவியில் இருந்து நீக்குவதற்கு, பிரதமர் மோடி மற்றும் நீதிபதி, சிக்ரி ஆதரவு தெரிவித்தனர். ஆனால், கார்கே எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. சி.பி.ஐ., இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளஅலோக் வர்மா, தீயணைப்புத் துறையின் டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். இந்த பொறுப்பை ஏற்க மறுத்த அலோக் வர்மா, தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சி.பி.ஐ.,க்கு புதிய இயக்குனர் நியமிக்கப்படும் வரை, கூடுதல் இயக்குனர் நாகேஸ்வரராவ் இயக்குனர் பொறுப்பில் இருப்பார்.


இதற்கிடையே, தன் மீது லஞ்சம் வாங்கியதாக பதிவு செய்யப்பட்ட, எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி, ராகேஷ் அஸ்தானா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த , டில்லி உயர் நீதிமன்றம், 10 வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (26 + 55)

 • ஆப்பு -

  சி.பி.ஐ தலைமை அதிகாரிக்கு தீயணைப்பு பதவியா...பிரதமர் பதவி போனா டீ ஆத்த போன மாதிரி இருக்கும்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  குழப்பாச்சாரிகளின் ஆட்சியில் இது மட்டுமல்ல இன்னும் தமாஷ்கள் நடக்கும். நாலஞ்சு வருடங்கள் சிபிஐ அனுபவம் உள்ளவருக்கு இனி தீயணைப்பு துறையாம். ஹா ஹா ஹா

 • rama adhavan - chennai,இந்தியா

  His resignation/retirement will not be accepted by government as he is an accused in various cases. He will be more likely suspended on the day of his retirement to face enquiry against his alleged irregularities.

 • Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா

  காங்கிரஸ் கட்சியின் ஊழலுக்கு ஒத்துழைக்க மேலும் ஒரு அரசு அதிகாரியின் ராஜினாமா அவ்வளவுதான்:இந்த அரசு அதாவது பி ஜே பி தேர்தலில் வெற்றி முகம் கண்டவுடன் எத்துணையோ ரெகார்டுகள் காணாமல் போயின:பல தீயில் கருகியது:விசுவாசம் அதிகாரிகளின் கை விசுவாசம் நன்றாகவே தெரிகிறது:

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  சரியான முடிவு. ஓடிப்போகட்டும் துவக்கத்திலேயே இவர் பொருத்தமான தகுதியான ஆளில்லை என காங்கிரஸ் கூறியபோதே நியமனத்தைத் தவிர்த்திருக்கலாம்

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  அலோக் வர்மா பதிவியில் மீண்டும் சேர்ந்து இருக்க கூடாது.பதிவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். இவ்வளவு தொந்திரவு கொடுத்தும் எதற்கு அவர் மீண்டும் பதவியில் சேர வேண்டும்..அதிகாரம் இவர்களை இப்படி கொள்கை இல்லாமல் செயல் பட வைத்து இருக்கிறது..ஒரு நாட்டின் பி.எம் மிக்கு அளாவில்லை அதிகாரம் இருக்கிறது..இது தேவை தான்..அப்போ தான் நாட்டை ஆள முடியும்..ஆனால் அந்த அதிகாரம் சட்ட திட்டங்களுக்கும் , நேர்மையானதாகவும் இருக்க வேண்டும்..அதிகார துஸ்பிரயோகம் செய்தால் மக்கள் அவரை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்..மோடியை தண்டிக்க வேண்டியவர்கள் மக்கள்..ஒரு அரசு அதிகாரி அல்ல..அலோக் சர்மாவுக்கு அவரின் மில்லை தெரியவில்லை போலும்..ஆனால் இந்த எபிசோடால் நினைத்தத்து போல் வெளியே டைரக்டரை இனி மேல் நீக்க முடியாது...

 • Desabakthan - San Francisco,யூ.எஸ்.ஏ

  ஊழல்வாதிகளுக்கு மோடியை கண்டால் பயம். எல்லாம் பயம். இப்போது குறை கூறி எதிரணியில் திரண்டிருக்கும் ஒருவராவது ஊழல் குற்றச்சாட்டில் இல்லை என்று மோடி எதிர்ப்பாளர்கள் கூற முடியுமா? சுயநலவாதிகள் இல்லை, குடும்ப அரசியலில் இல்லை என உத்திரவாதம் கூற முடியாது இன்னும் நிறைய அடுக்கலாம். ஆனால் வாஜ்பாயிக்கு அடுத்து உன்னதமான பிரதமர். குடும்ப, ஊழல், சுயநல மற்ற ஒரு தேசபக்தர். பிரிவினை வாதிகள், இந்து எதிர்ப்பின், கம்மிகள், காங். கைக்கூலிகள், பணத்திற்கு விலைபோனவர்கள் இப்படி பலரும் மிக உயர மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை பணத்திற்கு பல்லிளித்து உழைக்காமல் பாரதத்தை துண்டு போட காத்திருக்கும் வேளையில் இத்தகைய ஒரு பிரதமருக்கு நிர்வாகம் பண்ண எவ்வளவு சிக்கல் கள் வரும். அதையும் மீறி ஓயாது பாடுபட்டு இந்த 5 வருடங்களை முடித்துள்ளார். கையில் பெருக்குமாருடன் அரைக்கால் சட்டை போட்டு, வெள்ளத்தில் நீந்தி மக்களோடு மக்களாக வளர்ந்து வெறும் தேனீர் வியாபாரி எப்படி ஊழல் வாதியாக, சுயநல விவாதியாக இருக்க முடியும். அந்த உடுப்போ பாரம்பரிய உடுப்பு ஆனால் காந்தி பெயரை போலியாக வைத்து கொண்டு போலி மதசார்பின்மை பேசும் தேச துரோகிகளை விரட்ட வேண்டும். வரும் தேர்தலில் 400kum மேற்பட்ட உறுப்பினர்களை மோடிக்கு கொடுக்க அவர் கரத்தை வலுப்படுத்த ஒவ்வொருவராலும் ஆன சிறு முயற்சிகளையும் செய்தால் புண்ணியம் வரும் சந்ததியினருக்கு. சந்ததிகள் வல்லரசு நாட்டில் வாழ்வார்கள் இல்லையேல் சோமாலியாவும் இந்தியாவும் ஒன்றாகி விடும்.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   அலோக் வர்மா ரபேல் விவகாரத்தை ஆய்வு பண்ரார்னு சொல்றாங்களே...

  • S K NEELAKANTAN - chennai 24,இந்தியா

   தேசபக்தன் அவர்களே மிக சிறப்பான கருத்தை வெளியிட்டுளீர்கள். உனக்கிலை போல் பல ஆயிர கணக்கானவர்கள் இதே கருத்தை உடையவர்களாக இருக்கிறார்கள். எல்லாம் வல்ல இறைவன் நம் மக்களுக்கு நல்ல புதிய கொடுத்து மோடிக்கு வோட்டளிக்கும் படி செய்ய வேண்டும். எக்காளத்தை கொண்டும் ஊழல் கனகிராஸ் மற்றும் திமுக கழகம் மத்தியில் ஆட்சியில் அமரக்கூடாது. மீண்டும் தேசம் பின்னுக்கு தள்ள படும்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  நீதிபதி சிக்ரியிடம் மதிப்பு வைத்துள்ளவர்கள் இந்த தீர்ப்பையும் ஏற்றுத்தானாகவேண்டும் அலோக் வர்மா மீதுலால் குற்றச்சட்டுகளுக்கு அடிப்படை ஆதாரமிருப்பதால்தான் சிக்ரி அவரை விளக்கவைத்திருக்கிறார். சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் சி பி ஐ இயக்குனரும்தான். ரபேல் வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்ட ஒன்று .அதனை இப்போது இழுப்பது அந்நிய சதி

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   சிக்ரி எப்படி இங்கு வந்தார் ? ஒரேநாளில் தலைமை நீதிபதியை எடுத்துவிட்டு அவருக்குப்பதில் இவரை எப்படி, யார், எதனால் நியமித்தது ?

  • தேச நேசன் - Chennai,இந்தியா

   தனக்கு பதில் சிக்ரி அவர்களை அனுப்பியதே தலைமை நீதிபதி கோகோய்த்தான் அவர் காங்கிரஸ் குடும்பத்தவர்தான்

  • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

   என்ன தமிழ் வேல் ஜி...சிக்ரி எப்படி வந்தாருங்கறதே மறந்து போச்சா ? அதாவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி,பிரதமர் மற்றும் எதிர் கட்சி தலைவர் கூடி முடிவெடுக்கணும்ன்னு தலைமை நீதிபதி தன் தீர்ப்பில் சொல்றாரு....பின் தான் சொன்ன வழக்கின் தீர்ப்புப்படி தானே பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவருடன் கூடி முடிவெடுப்பது என்பது ஒரு தலைப்பட்சமாகி விட கூடும் என்று நினைத்து இருக்கலாம்...அதனால் அவருக்கு பதிலாக மற்றொரு நீதிபதி சிக்ரி அவர்களை நியமித்து உத்தரவு இட்டார்....

 • suresh - chennai,இந்தியா

  . புது இயக்குநருக்காவது ஆபிஸ் ரூம், டேபிள், சேர் கொடுங்க. அவரையாவது வேலை செய்ய விடுங்க.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   மியூசிக்ல சேர் தானே ?

 • ஆப்பு -

  என்ன நடக்குதேன்னு புரியலை. ஆனா சி.பி.ஐ, அரசு, நீதிமன்றத்தின் காமெடி சூப்பரா இருக்கு.

 • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

  உண்மையில் என்ன நடக்கிறது என்று மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை .

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "நாங்க சொல்கிறபடி கேட்கவில்லையென்றால், இப்படித்தான் தூக்கி அடிப்போம்".

 • Anandan - chennai,இந்தியா

  அலோக் வர்மா மேல் அவ்வளவு பயம். அவர்களின் ஊழல் யாரும் விசாரிக்க கூடாது என்பதில் எவ்வளவு கவனம். கண்டிப்பாக ஆட்சி மாறவேண்டும்

  • Manian - Chennai,இந்தியா

   அலோக் வர்மாவின் பி.ஏ. பேசுகிறார்

  • தேச நேசன் - Chennai,இந்தியா

   அலோக் வர்மா எந்த வழக்கை விசாரிக்கிறேன் என அவரே சொன்னதுண்டா? கற்பனைக்கு அளவேயில்லை

 • blocked user - blocked,மயோட்

  காங்கிரஸ்காரர்களுக்கு ஆப்பு அடிக்க மோடி ஏதோ ஒரு பெரிய திட்டத்துடன் இருக்கிறார் போல தெரிகிறது...

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  . செழுமையான இந்தியாவை பிரிட்டிஷார் நமக்கு விட்டுச்செல்லவில்லை. எழுபது ஆண்டுகளுக்கு முன் மிகப்பெரிய வறுமை இந்தியாவில் இருந்தது. படித்தவர்கள் ஒரு சதவீதம் பேர் மட்டுமே. அவர்கள் எதையும் செய்யவில்லை என்று கூறினால் கூட பரவாயில்லை. காங்கிரஸ் காரர்கள் ஜனநாயகத்தை படுகொலை செய்யவில்லை.

  • தேச நேசன் - Chennai,இந்தியா

   ஓஹோ எமெர்ஜென்சி?அதனை ஜனநாயகத்தைக் காக்கத்தான் கொண்டுவந்தர்களா?

  • Guru Nathan - Chennai,இந்தியா

   emergency என்ற ஒன்றை பற்றி தெரியுமா ? பஞ்சாப் படுகொலை பற்றி தெரியுமா ? இன்று வரை நடந்து கொண்டு இருக்கும் இந்து விரோத நகர்வுகளை பற்றி தெரியுமா ? சுதந்திரத்தின் பொது நமது படிப்பறிவு 17 % . வறுமை இருந்த காலத்தில் கூட யாரும் நாங்கள் இந்தியாவில் இருக்க முடியாது என்று கூற வில்லை.இப்போது உள்ள முஸ்லிம்கள் மற்றும் மத மாற்றி கிருத்துவர்கள் இப்படை கூறி கொண்டு உள்ளார்கள் . ஒன்று இந்தியாவை நேசியுங்கள் இல்லை ஓடி விடுங்கள் . காங்கிரஸ் என்றால் நேசிப்போம் , பிஜேபி என்றால் வெறுப்போம் என்றால் , தொடர்ந்து பிஜேபி வர ஒவ்வொரு இந்துவும் பாடுபடுவோம் . இந்த நடுநிலை மக்கு மூட்டை இந்துக்களை விழிப்புணர்வு கொண்டுவந்தால் இந்தியா ரொம்ப நல்ல நிலைக்கு சென்று விடும் .

  • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

   குரு நாதன் ஜி...தங்கள் கருத்துக்கு ஒரு சபாஷ்...என்னை பொறுத்தவரை நடுநிலை என்பது ஒரு கானல் நீர்...இனியும் அப்படி ஒரு நிலைப்பாட்டுடன் இருப்பது பேராபத்து...

அலோக் வர்மா அதிரடி நீக்கம்: மீண்டும் நாகேஸ்வரராவுக்கு பதவி (53)

 • Vignesh Rajan - chennai,இந்தியா

  மோடி மீண்டும் தான் உண்மையான தேசபக்தர் என்று நிரூபித்து விட்டார்....மோடி மோடி தான் அவரை அடிச்சுக்க ஆள் இல்லை...

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  ராகுல் இனி ஊழல் வழக்கில் தப்ப முடியாது

  • Anandan - chennai,இந்தியா

   சுத்தமா மூளை வேலை செய்யாதா? ராகுல் என்ன ஆட்சியிலயா இருக்காரு?

 • ramu narayanan - Sydney,ஆஸ்திரேலியா

  Rafaele fever modikku, so Alok sacked. No justice, no morality. Fir Modi all are peons, he is the only saviour. He forgot british history.

  • sivan - Palani,இந்தியா

   முட்டாள்தனமான உளறல் மூன்று பேர் கொண்ட டீமில் மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ்காரர் இரண்டாவது ஆள் சிக்ரி.. பரம்பரரை காங்கிரஸ் குடும்ப ..கம்யூனிஸ்ட் எண்ணமுள்ள நீதிபதி ரஞ்சன் கோகோய் நியமித்த நீதிபதி மூன்றில் இருவர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மோடி மட்டும் தனியாக முடிவு எடுக்க முடியாது அலோக் நேர்மை மீது உள்ள புகாரின் தன்மை குறித்து கோகோய்க்கும் தெரிந்து இருக்கும்.. தான் அந்த முடிவு எடுக்கும் குழுவிவில் இருக்க வேண்டாம் என்றுதான் தன்னை தவிர்த்து சிக்ரியை போட்டு விட்டார் இது மோடி மட்டும் எடுத்த துணை முடிவல்ல.மதவெறி கொண்டு அதிகம் பேச வேண்டாம் தனிப்பட்ட கா ழ்ப்புணர்ச்சி உண்மை கண்ணெதிரே இருந்தும் கண்ணை மறைக்கிறதோ தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை தெரிவிக்க இது உங்கள் குடும்ப சமாச்சாரம் அல்ல நாடு மற்றும் நாட்டின் நிர்வாகம் சார்ந்தது உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மோடி மீது காண்பிக்காதீர்

 • ஆப்பு -

  யாராவது சில நீதிபதிகளின் பதவிய பறிமுதல் செஞ்சா நல்லாருக்கும்.

 • ஆப்பு -

  என்னங்கடா நடக்குது அங்கே....நீதிமன்றம், சி.பி.ஐ, மத்திய அரசு, சி.பி.ஐ, தீயணைப்புத்துறைன்னு எல்லாம் காமெடி பீசாயி சந்தி சிரிக்குது. நாளைக்கு சி.பி.ஐ இயக்குனரை அவர் கீழே இருக்கறவன் மதிப்பானா? நீதிமன்றத் தீர்ப்பை மனுசன் மதிப்பானா?

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  rafale ஊழலை சிபிஐ விசாரிக்க ஆரம்பித்தவுடன் சிபிஐ இக்கு கெட்ட நேரம் வந்துவிட்டது .

 • Ambika. K - bangalore,இந்தியா

  2 G யில் CBI சொதப்பினதே இந்த ஆளால் தான் மீண்டும் kaniakka ஆ ராசா திஹார் அழைக்கிறது

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  மோடி நீக்கித்தாரு என்று பதறும் பதறகளா, அந்த குழுவில் ஒரு உச்ச நீதிபதி இடம் பெற்று இருந்தார் அவரும் அலோக் வர்மா எதிராக சீரியஸ் அழலெக்டின்ஸ் இருப்பதாக ஒற்று கொண்டு உள்ளார், என்னப்பா எல்லோரும் பப்பு போல் மூளை உஸ் பண்ணவே மாட்டேறீங்க

  • Anandan - chennai,இந்தியா

   உங்க மோடி கொண்டு வந்த அஸ்தானா கையூட்டு வாங்கிய மாட்டினார் அதை ஒப்புக்கொண்டும் விட்டார் அவரை என்ன செஞ்சீங்க. உங்க ஆள் கொண்டுவந்தர்தானே. உங்க ஆள் கொண்டு வந்த இன்னொரு ஆள் நாகேஸ்வர ராவ் அந்த ஆளும் பெரிய ஊழல்வாதி. நீங்க யோக்கியனுங்கனுங்கண்ணா எப்படி இப்படி ஊழல்வாதிகளாய் பார்த்து கொண்டு வரீங்க.

 • K.n. Dhasarathan - chennai,இந்தியா

  மோடிக்கு ஏன் பயம் ? அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தால் மறுபடி சி பி ஐ பதவியில் தொடரலாம் என்று தீர்ப்பு சொன்னபிறகு ஏன் இந்த கோல்மால்? மோடி தவறு செய்யவில்லை எனில் வர்மாவை ஏன் பதவி மாற்ற வேண்டும் ? அதுவும் இன்னும் 20 நாள் கழித்து ஒய்வு பெறுபவரை இப்படி நடத்துவது சி பி ஐ க்குத்தான் அவமானம் . வர்மாவுக்கு அல்ல. உச்ச நீதிமன்றத்திற்கு பெருத்த அவமானம், அதன் தீர்ப்பு அவமதிப்பு ஆயிருக்கிறது. இங்கு நடப்பது என்ன சர்வாதிகாரி ஆட்சியா ? மக்களாட்சியா ? இப்போது ஒரு பேச்சுக்கு சொல்றேன், வர்மா மறுபடி நீதிமன்றம் போனால் என்ன செய்விர்கள் ?

  • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   உச்ச நீதி மன்றம் அவரை நீக்கிய வழிமுறையை தவறு என்றது தவிர அவரை பதிவியில் நீடிக்க சொல்ல வில்லை அதனால் செலேச்டின் பேனல் அமைத்தது அவர் பதவியில் நீட்டுகினும்மா வேணுமா என்று ஒரு வாரத்தில் முடிவு எடுக்க சொன்னார்கள் , தீர்ப்பை செரியாக புரிந்து கொள்ளவும்

  • Anandan - chennai,இந்தியா

   . அடடா, இப்படி ஒரு அரசியல்வாதியை இந்தியா கண்டதே இல்லை.

 • Balasubramaniam - Tirupur,இந்தியா

  பிரதமர் மோடி தலைமையில் தேர்வுக் குழு இன்று அவரது இல்லத்தில் கூடியது. ஆனால் குழுவிலிருந்து தான் விலகுவதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிவித்தார். அவருக்குப் பதில் நீதிபதி ஏ.கே. சிக்ரி கூட்டத்தில் கலந்து கொண்டார் டெல்லியில் பிரதமர் மோடியின் வீட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் நீதிபதி ஏ.கே. சிக்ரி ஆகியோர் ஆலோசனையை மேற்கொண்டனர். மோடி, கார்கே, சிக்ரி ஆகியோரில் கார்கே மட்டும் அலோக் வெர்மாவை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். நீதிபதி சிக்ரி, அலோக் வெர்மா மீது ஊழல் புகார்கள் இருப்பதால் அவரது நீக்கம் அவசியம் என்று கூறினார். இதையடுத்து 2-1 என்ற பெரும்பான்மை முடிவின் அடிப்படையில் அலோக் வெர்மா பதவி பறிக்கப்பட்டது. ரபேல் ஊழலை வெளி கொணர முயற்சி மேற்கொண்டதாலேயே இது நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு. நெருப்பில்லாமல் புகையுமா

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

   நெருப்பில்லாமல் புகையாது என்பதால் சோனியா ராகுல் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்கிறீரா? அலோக் வர்மா வை நியமித்தபோது காங்கிரஸ் ஏன் எதிர்த்தது? இப்போது ஆதரிப்பது, அவர் காங்கிரஸாரின் ஊழல் வழக்குகளில் மென்மையாக நடந்துகொள்வதாக உறுதியளித்தது என்ற குற்றசாட்டினாலா? இந்த குற்றச்சாட்டும் நெருப்பில்லாமல் புகையாது என்ற உமது கொள்கைப்படி சரியானதுதானா?

 • KumariKrishnan Bjp - chennai,இந்தியா

  அலோக்_வர்மா கட்டாய விடுப்பில் செல்லவேண்டும் என்னும் உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், அலோக் வர்மா சிபிஐ இயக்குனராக நீடிக்கலாம், ஆனால் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடாது ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பணிகளை செய்யலாம் அலோக் வர்மாமீது உள்ள குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படவேண்டும் என்றெல்லாம் சொன்ன நீதிபதிகள், ஒருவாரத்தில் உயர்மட்ட தேர்வுக்குழு கூடி இறுதி முடிவு எடுக்கவேண்டும். என்றார்கள் இப்போது காங்கிரஸ் தலைவர், தலைமை நீதிபதி மற்றும் பிரதமருடன் கூடிய உயர்மட்டக்குழு கூடி, அலோக் வர்மாவை இயக்குனர் பொறுப்பிலிருந்து நீக்குவது என முடிவெடுத்துள்ளது சொகுடு கெலிகாப்டர் ஊழல் வழக்கும், நேசனல் கெரால்டு பத்திரிக்கையின் சொத்தை அபகரித்த வழக்கும், ராகுலின் மைத்துனர் ராபர்ட் வகேராமீது சொத்து அபகரிப்பு வழக்குகளும் சிபிஐயிடம் உள்ளன இந்த அலோக் வர்மாவை கைக்குள் போட்டு தப்பித்துக்கொள்ள, தப்பிக்கும் வகையில் வழக்குபதிவுகளை மாற்றிவிட, சில டாக்குமெண்ட்களை காணாமல் செய்துவிட, இப்போது விசாரணையில் இருக்கும் ராகுலின் கூட்டாளி கிருஸ்டியனை விடுதலை செய்திட ராகுலும் சிபிஐயில் இன்னும் சில அதிகாரிகளும் திட்டமிட்டிருப்பது வெளியில் கசிந்துவிட்ட காரணத்தாலேயே, அலோக் வர்மா உடனடியாக மாற்றப்பட்டுள்ளார் இரண்டு மணிநேர அவகாசத்தில் போர்பஸ் ஊழல் பணத்தை வங்கியிலிருந்து கைமாற்றி எடுத்துக்கொண்டு, போர்பஸ் புறோக்கரும் சோனியாவின் மாமாவுமான ஒட்ரோவிய குட்ரோச்சியுடன் வெளிநாட்டுக்கு ஓடியவர்கள் காங்கிரஸ் காரர்கள் இரண்டுமணி நேரத்திலேயே குட்ரோச்சியிடம் பணத்தையும் எடுத்துக்கொடுத்து அனுப்பியவர்கள், வரும் 31 ம் தேதி ஓய்வு பெறவிருக்கும் அலோக் சர்மாவை வைத்துக்கொண்டு சிபிஐயில் எதை வேண்டுமானாலும் செய்வார்களே உடனே பதவி நீக்கம் செய்யாமல் விட்டு வைத்திருந்தால், குறைந்த அளவு விசாரணையில் இருக்கும் கிருஷ்டியனையாவது விடுதலை செய்திருப்பார் இந்த அலோக் வர்மா ராஜீவின் மனைவியாக இந்திராவின் வீட்டில் சோனியா இருந்தபோது, சோனியா மூலமாக அப்போதைய பிரதமர் வீட்டில் பெரிய சதிவேலை நடப்பதாக சிபிஐ மூலம் அப்போதைய பிரதமர் இந்திராவுக்கு தகவல் வரவே, சோனியாவை வீட்டை விட்டு வெளியேற்றினார் இந்திராகாந்தி இந்த இத்தாலி கும்பலிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் தேச பக்தர் மோடி பிரதமராக இருப்பதால் நாடு காப்பாற்றப்படும் குமரிகிருஷ்ணன்

  • joseph jeyapragash - chennai,இந்தியா

   I agree.

  • Anandan - chennai,இந்தியா

   கொள்கை சார்ந்த முடிவுகளைத்தான் எடுக்கக்கூடாது.

 • southindian - chennai,இந்தியா

  ஊழல் வாதிகளையும் ஊழலுக்கு துணை போகின்றவர்களையும் இது போன்று தூக்கி அடித்து வேலையி விட்டு அனுப்பவேண்டும்

 • Siva - Aruvankadu,இந்தியா

  ராகுல் பாப்பா தான் என்று அவரது கட்சி தலைவர் ஒப்பு கொண்டார்... அதான் பாப்பா ராகுல் அழாமல் இருக்க கார்கே உடனிருந்தார்..

 • KumariKrishnan Bjp - chennai,இந்தியா

  அலோக் வர்மா கட்டாய விடுப்பில் செல்லவேண்டும் என்னும் உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், அலோக் வர்மா சிபிஐ இயக்குனராக நீடிக்கலாம், ஆனால் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடாது ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பணிகளை செய்யலாம் அலோக் வர்மாமீது உள்ள குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படவேண்டும் என்றெல்லாம் சொன்ன நீதிபதிகள், ஒருவாரத்தில் உயர்மட்ட தேர்வுக்குழு கூடி இறுதி முடிவு எடுக்கவேண்டும். என்றார்கள் இப்போது காங்கிரஸ் தலைவர், தலைமை நீதிபதி மற்றும் பிரதமருடன் கூடிய உயர்மட்டக்குழு கூடி, அலோக் வர்மாவை இயக்குனர் பொறுப்பிலிருந்து நீக்குவது என முடிவெடுத்துள்ளது சொகுடு கெலிகாப்டர் ஊழல் வழக்கும், நேசனல் கெரால்டு பத்திரிக்கையின் சொத்தை அபகரித்த வழக்கும், ராகுலின் மைத்துனர் ராபர்ட் வகேராமீது சொத்து அபகரிப்பு வழக்குகளும் சிபிஐயிடம் உள்ளன இந்த அலோக் வர்மாவை கைக்குள் போட்டு தப்பித்துக்கொள்ள, தப்பிக்கும் வகையில் வழக்குபதிவுகளை மாற்றிவிட, சில டாக்குமெண்ட்களை காணாமல் செய்துவிட, இப்போது விசாரணையில் இருக்கும் ராகுலின் கூட்டாளி கிருஸ்டியனை விடுதலை செய்திட ராகுலும் சிபிஐயில் இன்னும் சில அதிகாரிகளும் திட்டமிட்டிருப்பது வெளியில் கசிந்துவிட்ட காரணத்தாலேயே, அலோக் வர்மா உடனடியாக மாற்றப்பட்டுள்ளார் இரண்டு மணிநேர அவகாசத்தில் போர்பஸ் ஊழல் பணத்தை வங்கியிலிருந்து கைமாற்றி எடுத்துக்கொண்டு, போர்பஸ் புறோக்கரும் சோனியாவின் மாமாவுமான ஒட்ரோவிய குட்ரோச்சியுடன் வெளிநாட்டுக்கு ஓடியவர்கள் காங்கிரஸ் காரர்கள் இரண்டுமணி நேரத்திலேயே குட்ரோச்சியிடம் பணத்தையும் எடுத்துக்கொடுத்து அனுப்பியவர்கள், வரும் 31 ம் தேதி ஓய்வு பெறவிருக்கும் அலோக் சர்மாவை வைத்துக்கொண்டு சிபிஐயில் எதை வேண்டுமானாலும் செய்வார்களே உடனே பதவி நீக்கம் செய்யாமல் விட்டு வைத்திருந்தால், குறைந்த அளவு விசாரணையில் இருக்கும் கிருஷ்டியனையாவது விடுதலை செய்திருப்பார் இந்த அலோக் வர்மா ராஜீவின் மனைவியாக இந்திராவின் வீட்டில் சோனியா இருந்தபோது, சோனியா மூலமாக அப்போதைய பிரதமர் வீட்டில் பெரிய சதிவேலை நடப்பதாக சிபிஐ மூலம் அப்போதைய பிரதமர் இந்திராவுக்கு தகவல் வரவே, சோனியாவை வீட்டை விட்டு வெளியேற்றினார் இந்திராகாந்தி இந்த இத்தாலி கும்பலிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் தேச பக்தர் மோடி பிரதமராக இருப்பதால் நாடு காப்பாற்றப்படும்

  • Anandan - chennai,இந்தியா

   கொள்கை சார்ந்த முடிவுகளைதான் எடுக்க கூடாதுப்பா

  • Anandan - chennai,இந்தியா

   இன்னும் எத்தனை நாளைக்கு இந்த இத்தாலி பாட்டு பாடப்போறீங்க.

 • suresh - chennai,இந்தியா

  ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் உர்ஜிட் படேல்,,,ரகுராம் தாமாக பதவி விலகினர்...அயோத்தி வழக்கை விசாரிக்கும் நீதிபதியும் பதவி விலகினார்....அலோக் வர்மாவும் விலகி இருக்க வேண்டும்,,,விலக விட்டால்,,,இதான் கதி...மோடின்ன கொக்கவா

  • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

   அடிப்படை உண்மையே தெரியலை. ரகுராம் ராஜன் அவர் டேர்ம் முடிந்து போனார். விலக வில்லை. அயோத்தி வழக்கை விசாரிக்கும் நீதிபதி விலக வைத்தது காங்கிரஸ் வக்கீல், காரணம் அவர் முன்னப்பு கேசில் கல்யான் சிங்குக்கு வாதாடி இருக்கிறார். இது அயோத்தி கேஸுல் சம்பந்தமே இல்லையென்றாலும் அவர் தானாகவே விலகினார்.

  • Anandan - chennai,இந்தியா

   அவ்வளவு பயம் சுரேஷ். வரலாறு ரொம்ப முக்கியம், நம்மளை நாமளே நல்லவன்னு சொல்லிக்கலைனா வேற யாரு சொல்லுவா. அடிமடியிலேயே கை வச்சா சும்மா இருக்க முடியுமா?

 • amirthalingam - pondicherry,இந்தியா

  அல்க்வர்மாவின் தில்லாங்கடி , காங்கிரஸ் தொடர்பு ஆதாரங்களை மத்திய அரசு அளித்ததால் மல்லிகார்ஜுனவால் ஒன்றும் செய்ய முடியவில்லை . பப்பு மீண்டும் சின்ன பிள்ளை என்று நீருப்பிக்கப்பட்டுள்ளது.

  • Anandan - chennai,இந்தியா

   உங்க ஆளு கொண்டு வந்த அஸ்தானா ஊழலில் சிக்கிவிட்டார் அதை வெளிக்கொண்டு வந்ததும் வர்மாவுக்கு பிரச்சினை இப்போது உங்க ஆளு கொண்டு வந்த நாகேஸ்வர ராவ்வும் ஊழல்வாதிதான் அவர் மேல் பல புகார்கள் வழக்குகள் உள்ளன. அப்போ ஊழல்வாதிகளை மட்டுமே பிடிக்கும் உங்க ஆளுக்கு?

  • amirthalingam - pondicherry,இந்தியா

   அஸ்தான ஊழல் பண்ணவில்லை. ஹெலிகாப்ட்டர் தரகரை கண்டுபிடித்து ரகசியமாக விசாரணை செய்தது தான் . அவரை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சி செய்ததால். சோனியா எங்கே மாட்டிவிடுவார் , நாமும் மாட்டிவிடுவோம் அல்லக்கை வர்மாவின் அஸ்தான ஊழல் குற்றச்சாட்டு புரிகிறதா. அதனால்தான் பப்பு பயத்தில் ரபேல் உளர்கிறது.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  மறுபடியும் முதல்லருந்தாஆஆஆஆ... சீயர்ஸ்

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  காங்கிரஸ் ஆட்சியில் கூண்டுக்கிளியாக இருந்த சி பீ ஐ, இப்பவும் அதே காங்கிரஸ் கையில் கூண்டுக்கிளியாகவே உள்ளது. பாஜக ஒன்றே அதை நடுநிலையான ஒன்றாக மாற்ற முடியும். சூப்பர். வாழ்த்துக்கள்.

  • Anandan - chennai,இந்தியா

   அடிமைனா இப்படித்தான் இருக்கணும்.

 • anand - Chennai,இந்தியா

  மல்லயா மற்றும் ஆயுத தரகர் மைகேல் இவர்களை இந்தியாவுக்கு அழைத்து வராமல் பார்த்து கொண்டார் அலோக் வர்மா..அவர் போன பின்பே நல்லது நடந்தது..

  • Anandan - chennai,இந்தியா

   உங்க ஆளுங்க பொய் மட்டுமே சொல்லுவீங்க ஆனால் இது ரொம்ப சுமார் ராகம் இன்னும் எதிர் பார்க்கிறோம் உங்களிடம் இருந்து.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  நேற்று சுப்ரிம் கோர்ட் அமர்த்தியது. இன்று பிரதமர் வர்மாவை நீக்கிவிட்டார்.

  • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   அன்பு , பிரதமர் + உச்ச கோர்ட் நீதி பதி சேர்ந்து எடுத்த முடிவு , இப்ப என்ன சொல்லுவீர்கள்

  • கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா

   அன்பு...செய்தியை ஒழுங்காக படிக்கவும்....நீக்கியது காங்கிரஸின் மல்லிகார்ஜுன கார்கேவும் தான்....

  • Anandan - chennai,இந்தியா

   சிபிஐ கண்டு பயம், JPC கண்டு பயம், RTI கண்டு பயம், ஏன்? வெறும் பொய் பித்தலாட்டம், எவ்வளவோ முட்டு குடுத்து பார்க்கிறார்கள் இன்னும் எவ்வளவு நாள் காங்கிரஸ், இத்தாலி படம் காட்டுவாங்கனு பார்ப்போம்.

 • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

  “கண்டம்... கண்டம்தான்.... கம்யூட்டர் காமாட்சி சொல்லிட்டா...”....ங்கற கதையா இல்ல இருக்கு...? பாவம்...

 • Pannadai Pandian - wuxi,சீனா

  வேலைய விட்டு டிஸ்மிஸ் பண்ணுங்க…...இவன் ஒரு துரோகி…..

 • Indhuindian - Chennai,இந்தியா

  Congress opposed the appointment of Mr Alok Verma when his appointment was discussed by the ion Committee. Now Congress opposes sacking of Mr Alok Verma whose appointment it opposed earlier. Do not accuse Congress for these things. It is consistent - oppose anything that is approved by NDA. Support corruption in all its manifestations

 • sampath, k - HOSUR,இந்தியா

  Very worst decision. Power Eco. How Superim Court take this issue

 • MIRROR - Kanchipuram,இந்தியா

  ஏன் இவரைக் கண்டு அஞ்சுகின்றனர்

  • Nalam Virumbi - Chennai,இந்தியா

   தேச துரோகம் செய்பவர்களைக் கண்டு அஞ்ச வேண்டும். ஆனால் அவர்களை ஒடுக்க இரும்புக்கரம் உபயோகிக்க வேண்டும்.

 • A.SESHAGIRI - ALWARTHIRUNAGARI,இந்தியா

  ராகுல் வழக்கம்போல் மீண்டும் பெயிலாகிவிட்டார்.சி.பி.ஐ.இயக்குனர் அலோக் வர்மா பிரச்னையை வைத்து ரஃபேல் யை மீண்டும் கிளப்ப முயற்சித்ததற்கு பலத்த அடி.அவரது கட்சியைசேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே விசாரணைக்குழுவில் இடம்வகித்தும் வர்மாவின் பதவியை காப்பாற்ற முடியவில்லை.அந்தோ பரிதாபம்

 • Indhuindian - Chennai,இந்தியா

  Congress has been supporting him. Congress also expresses reservation about CVC. Does any one expect Congress, that is rooted in corruption in every possible way, expect to support to root out corruption. Not even in wildest of dreams

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  என்னையா பப்புவிற்கு வந்த சோதனை ?? பப்பு சப்போர்ட் பண்ண போதே தெரிந்து விட்டது இவரும் பெரிய டூப்புக்குராக இருப்பார்??அலோக் எதிரான CVC ரிப்போர்ட் வெட்ட வெளிச்சமாகி உள்ளது

 • Indhuindian - Chennai,இந்தியா

  Please await the thriller. Suspension, enquiry by CBI, the organisation he headed, would go into the corruption charges.

 • Indhuindian - Chennai,இந்தியா

  As D G of Fire Services, his first and only job during the rest of the tenure is do fire fighting to save his "honour"

 • spr - chennai,இந்தியா

  "பிரதமர் நரேந்திர மோடி, எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் நீதிபதி சிக்ரி அடங்கிய நியமன குழு ஆலோசனை" எப்படியும் இன்னும் ஒரு மாதத்தில் போறவர்தானே என்பதாலா இல்லை ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு உதவுகிறதோ ? இந்த விவகாரத்தில் மட்டும் காங்கிரசுடன் ஏதோ ஒரு இணக்கமான சூழல் உருவாகிவிட்டதா?

 • ravichandran - avudayarkoil,இந்தியா

  சத்யம் வெல்லும்

 • அப்பாவி - coimbatore,இந்தியா

  அடாவடித்தனம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement