Advertisement

தமிழக மந்திரி வீட்டில் பல கோடி பறிமுதல்?

சென்னை: சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலின் போது, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் மற்றும் எட்டு பேர் வீடுகளில் நடந்த சோதனையில், 4.71 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ஆர்.கே.நகரில், 2017 ஏப்ரலில், இடைத்தேர்தல் நடக்க இருந்தது. தேர்தலுக்கு முன், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித் துறை சோதனை நடத்தியது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக, அமைச்சர்கள், நிர்வாகிகளின் பெயர்கள் அடங்கிய, பட்டியல் இருந்ததாக, தகவல் வெளியானது. 89 கோடி ரூபாய் என்றும், அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வருமான வரித்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், போலீசில், தேர்தல் கமிஷன் புகார் அளித்தது. இந்தப் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி, உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் வைரக்கண்ணன், தி.மு.க., வேட்பாளர் மருதுகணேஷ் மற்றும் அருண் நடராஜன் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், ஏற்கனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, நரசிம்மன் என்பவர் தொடர்ந்த வழக்கில், பணம் பட்டுவாடா தொடர்பான முதல் தகவல் அறிக்கையை, உயர் நீதிமன்றம் ரத்து செய்து விட்டதாக, அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, மருதுகணேஷ் தரப்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன், ''வருமான வரித்துறையின் அறிக்கையில், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்களில் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அரசு தரப்பும், போலீஸ் தரப்பும் கைகோர்த்துள்ளன. முதல் தகவல் அறிக்கையும், ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்,'' என்றார்.

சி.பி.ஐ., விசாரணை கோரிய கூடுதல் மனுவுக்கு, பதில் அளிக்கும்படி, தேர்தல் கமிஷன், வருமான வரித்துறை, தமிழக அரசு மற்றும் சி.பி.ஐ.,க்கு, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு: அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சிலரை பொறுத்தவரை, 2017 ஏப்ரலில், வருமான வரித்துறையினரின் சோதனை நடந்தது. அப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா அளித்தது தொடர்பான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. மொத்தம், 4.71 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.

விஜயபாஸ்கரிடம், 3 லட்சம் ரூபாய்; சீனிவாசன் என்பவரிடம், 3 லட்சம்; கல்பேஷ் ஷா, 1.10 கோடி; சாதிக் பாட்சா, 6 லட்சம்; கார்த்திகேயன், 8 லட்சம்; சரத்குமாரிடம், 11 லட்சம்; சின்னதம்பி, 20 லட்சம்; டாக்டர் செந்தில்குமார், 15 லட்சம்; நயினார் முகமது என்பவரிடம், 2.95 கோடி ரூபாய், சோதனையின் போது கைப்பற்றப்பட்டது.

சோதனையை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்துக்கு, 2017 ஏப்., 9ம் தேதி, கடிதம் அனுப்பப்பட்டது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் நகல்கள், அவற்றின் ஆங்கில மொழி பெயர்ப்பும், அதோடு இணைக்கப்பட்டது. வருமான வரித் துறைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மறுக்கப்படுகின்றன. பொது மக்களுக்கு, எந்த தகவலையும், உரிய அதிகாரி தான் தெரியப்படுத்த முடியும். சோதனை விபரங்கள் எல்லாம் ரகசியமானவை. மனுதாரர் கூறுவது போல், பொது மையத்துக்கோ, ஊடகங்களுக்கோ, வருமான வரித் துறை தெரிவிப்பதில்லை.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பரிசீலித்த பின், வருமான வரித்துறை உதவி ஆணையரின் மதிப்பீட்டுக்கு, ஒப்படைக்கப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர், ரம்யா, சின்னதம்பி ஆகியோருக்கு, வருமான வரித்துறை அதிகாரி, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளார். ஆய்வு பணி முடிவதற்கு, டிசம்பர் வரை அவகாசம் உள்ளது. இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

சீலிட்ட உறையை, நீதிபதிகளிடம், வருமான வரித்துறை வழக்கறிஞர், ஏ.பி.சீனிவாஸ் தாக்கல் செய்தார். இதையடுத்து, மூத்த வழக்கறிஞர், பி.வில்சன், ''ரகசிய ஆவணங்களையம், அறிக்கையையும், தேர்தல் ஆணையத்திடம் அளிக்க, வருமான வரித்துறை முடிவெடுத்து விட்ட பின், அதை ரகசிய ஆவணம் என கோர முடியாது. இதில், வெளிப்படைத்தன்மை வேண்டும்,'' என்றார். இதையடுத்து, விசாரணையை, வரும், ௧௮க்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (15)

 • kalyanasundaram - ottawa,கனடா

  india unless s very tough punishment for errand politicians / public etc it will be impossible to progress . more over really capable individuals to be recruited for appropriate positions NO RESERVATIONS. really capable persons once for all leave india to foreign countries where their ability is recognised/. lots and lots of films where politicians / police /corrupt public are exposed of their illegal actions never seem to improve their morality.

 • S.P. Barucha - Pune,இந்தியா

  அரசியலில் குற்றவாளிகள், திருடர்கள் இருக்கும் வரை இந்தியா சர்வதேச அரங்கில் முன்னேற முடியாது.

 • karutthu - nainital,இந்தியா

  நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஆர் கே நகர் தொகுதியில் ஊழல் நடந்தது என்பது தெளிவாகிறது .அப்படிப் பார்த்தால் தினகரன் எம் எல் எ பதவியை தானாகவே இழந்து விடுவது போல் உள்ளது .மேலும் தினகரன் குறைந்த பட்சம் ஏழு ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் .

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  பாஜக வாசகர்கள் பார்த்து எழுதவும். பாஜக வின் நாளைய கூட்டாளிகள். இந்த ஆட்சி பெட்டர் னு வேற எழுதறாங்க.

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  இவர் மருத்துவர் . மருத்துவ தொழில் மரியாதையான ,தொண்டுள்ளததோடு செய்யவேண்டிய ஒரு தொழில் அந்த நல்லதொழிலை விட்டு விட்டு இவர் வந்திருக்கிறாரென்றால் ,இவரு அரசியல்வாதியாகி அமைச்சராக வேண்டும் என்று விரும்பி வந்திருக்கிறாரென்றால் கொஞ்சம் வித்தியாசமா சிந்திதிருப்பாற் போலிருக்கிறது ..இவர் தேர்தல் முறைகேடு உட்பட பல வழக்குகள் இருந்தும் இன்னும் ஏன் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள் ?..எப்படியும் உள்ளெ போவார் என்று நம்புகிறேன் ...பாரத்தால் இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போயிருக்கிறார் ...

Advertisement