Advertisement

இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடில்லி: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, பொதுப் பிரிவில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்ட திருத்தம்:பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், பொதுப் பிரிவில், 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா, பார்லிமென்டில் நிறைவேறி உள்ளது. இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து, சமத்துவத்துக்கான இளைஞர்கள் அமைப்பு மற்றும் டாக்டர் கவுசால் காந்த் மிஸ்ரா சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, பொதுப் பிரிவில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பது, சட்ட விரோதமானது. 'இட ஒதுக்கீட்டின் அளவு, 50 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த, 1973ல், உச்ச நீதிமன்றத்தின், 13 நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு, 'இட ஒதுக்கீட்டில் திருத்தங்களை மேற்கொள்ள பார்லிமென்டுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அடிப்படை கட்டமைப்பை மாற்றக் கூடாது' என, கூறியுள்ளது.

தடை:அதன்படி, தற்போது அளிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடானது, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது. அதனால் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என, தெரிகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (26)

 • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

  அளவில்லாமல் ஆளும் அரசு எடுக்கும் எல்லா செயல்பாட்டிற்கும் நீதி மன்றம் தலை இடுவதை தவிற்கலாம். மக்ளாட்சி என்பதின் தத்துவதின்படி எல்லாம் பெருளாதார அடிப்படையிலேயே கொண்டுவருதல் நலம்.ல அப்போதான் நல்ல நிர்வாகம்காணமுடியும். கடவுள் ஏன் ஜாதியை படைத்தான் தெரியாமலா. ஐந்து வகை தொழில் புரியவே. அதைவிட்டு தொழிலையே ஒழித்திட நினைப்பதும் எல்லோரும் ராஜாவாக நினைப்பதும் அபத்தமான செயல். ஒவ்வொரு அரசு பணிக்கும் தகுதி உண்டு திறமையானவனை தேர்வுசெய்தால் நல்லநிர்வாகம் அமையும் . ஜாதியை வைத்து சலுகை காட்டி தேர்வு செய்தால் நல் நிர்வாகம் காணமுடியாது. பூனை எலியைத்தான் பிடிக்கும். அப்படித்தான் கடவுள் படைத்துள்ளான். அது ஆட்டை பிடிக்க ஆசை பட்டால்அது ஆகாதகாரியம். இறைவன் படைப்புபடி வர்ணாசிரமதொழில் வளம்பெற செய்யவேண்டும் . அப்போதுதான் நாடு நல்ல திறமையாளர்களை கொண்டு நிர்வாகத்தை தரமுடியும். திறமையில் கல்வியில் எந்த விதத்திலும் தகுதியை குறைக்கவேகூடாது. கடவுள் ஏன் ஆண்பெண் எனப்படைக்கிறார் ஆணுக்கு பெண் எப்போது இணையாகவே முடியாது. ஆண் செய்யவேண்டியதை ஆண்தான் செய்யனும் பெண்செய்யவேண்டியதை பெண்தான்செய்யனும் அதுதான் நியதி. எப்படி எனில் அரசு உத்தியோகத்தில் எப்படி பணி உள்ளதோ அதுபோல். சம உரிமை எல்லாவற்றிலும் கேட்பது கூடவே கூடாது. பெண் பெண்ணிற்கு உண்டான வேலையையும் ஆண் ஆணுக்குண்டான வேலையையும் செய்து வாழ்ந்தால் மகிழ்வாக வாழலாம் நாடும் வன்முறை பூசல் குற்றங்கள் இல்லாமல் இயங்கும். யாருங்க சட்டத்தை கோர்டை மதிக்கிராங்க .கீழ்கோர்ட் மேல் கோர்ட் என்பதெல்லாம் குற்றவாளி தப்பிக்கவே . அண்ணல் காந்தி மகான் சொன்ன மாதிரி அந்தந்த கிராமத்திலேயே வழக்குகளை தீர்க்க வேண்டும். சோகுசு அறையில் தீர்வு காண்பது நியாயம் தெரியாது. மருத்துவம் கிராம புறங்களில் பார்க்க ஏன் மருத்துவர்கள் அதிகம் விரும்புவதில்லை. அதையும் மாற்றி கிராம புரங்களில் மருத்துவமனைகள் அதிகம் கட்டவேண்டும் . சொகுசு வாழ்க்கை வாழ நினைக்கக்கூடாது. சேவை மனம் வேண்டும். அப்போதுதான் நாடு நலம் பெறுங்க.

 • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

  இந்தியாவில் நடப்பது மக்கள் ஆட்சி. ஜனநாயக ரீதியாக மக்களால் மக்களுக்காக செயல்பட மக்கள் பிரதிநிதிகளை மக்கள் தேர்வு செய்து ஆட்சி நிர்வாகம் நடைபெறுகிறது. ஆட்சியாளர்கள் எடுக்கும் நல்ல முடிவுகளுக்கு எதிரியாக இருந்து சீர் குலைக்க நினைத்து செயல்படும் சக்திகளுக்கு நீதி மன்றம் தலை இடுவது சரியாக தெரியல. நீதி மன்றமே எல்லாவற்றிர்க்கும் தலையிட்டு தீர்ப்பு அளிப்பதற்கு மக்களாட்சியே வேண்டாம். நீதி மன்றத்தையே ஆட்சியாளர்கள்தான் நிர்வகிக்கின்றனர். எனவே ஆடசியாளர் கொண்டுவரும் சீர் திருத்தங்களுக்கு சுதந்திரம் பெற்ற நாள் முதல் பயன் பெற்று வரும் ஜாதிகளுக்கே சலுகை காட்டி வருவது எந்தவிதி சட்டம். பட்டினி கிடப்பவன் பசி ஆற்றுவது அரசின் கடமை. ஜாதியை பார்ப்பதல்ல ஜனநாயகம். இனி பொருளாதாரத்தில் பின் தங்கிவரகளுக்கே சலுகை என்ற நிலையை கொண்டு வரவேண்டும் .ஜாதியை ஒழித்திடல் வேண்டும்.அப்போதான் சம நிலை சமபயன் என்றாகும். நீதி மன்றம் இம்மேல்முறையீட்டூஇதை தள்ளுபடி செய்வேண்டும்.

 • spr - chennai,இந்தியா

  இதுதான் சாக்கு என நீதிமன்றம் பொங்கல் பரிசு தீர்ப்பு போல அதிரடியாக எவருக்குமே ஒதுக்கீடு இல்லை ஆதார் - வருமான வரி இணைப்பின் மூலம் கணிணியைப் பயன்படுத்தி, உண்மையிலேயே பொருளாதார ரீதியில் மத, இன பாகுபாடின்றி ஒதுக்கீட்டை அமுல்படுத்த முடியும் என்பதால் அடுத்த இரண்டு மாதங்களில் அரசு அமுல்படுத்த வேண்டுமென தீர்ப்பு சொன்னால், முன் சொன்ன தீர்ப்புக்கள் அனைத்திலும் செய்த தவற்றை மன்னிப்போம்

 • vns - Delhi,இந்தியா

  Post courtesy : Iyer & Iyengar group. நாங்கள்… அடுப்பங்கரையிலும் அமெரிக்காவிலும், புரோகிதராகவும், பிரொபஷனலாகவும், தமிழ் எழுத்தளாராகவும், நுனி நாவில் ஆங்கிலம் பேசுவராகவும், பழுத்த ஆத்திகராகவும், கம்யூனிஸ்டாக… பல தளங்களில் பரந்து விரிந்தோம். அமெரிக்கா போனாலும் 'ஆத்து' பாஷை. எங்கெங்கு சென்றாலும், உலகெங்கும் தமிழ் சங்கம் வளர்த்தோம். தமிழ் நூல்கள் எழுதினோம். தமிழை 'செந்தமிழ்' முதலில் சொன்னோம். தேடி தேடி பழந்தமிழ் இலக்கியம் சேகரித்தோம். திடீரென ஒருவன் “நீ தமிழனில்லை” என்றான். முதலில் திகைத்து பிறகு சிரித்து சமாளிக்க கற்றோம். அரசாங்க வேலை உன்னதம் என்றே நம்பினோம். வேலையில் உண்மையாய் இருந்தோம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து' என்று எவரும் சொல்லிக் கொடுக்காமலேயே வாழ்ந்தே காட்டினோம். திடீரென ஒருநாள் “உனக்கு அரசு ஊழியம்” இல்லை என்றான். மாற்றுவழி கண்டோம். அரசு ஊதியம் பற்றி கவலை கொள்ளாத, ஏன் விண்ணப்பமும் செய்யாத ஒரு தலைமுறை கண்டோம். ஏன் 45 வயதுக்கு கீழ் அரசு ஊழியத்தில் எவரும் இல்லை என்றே நிலை கண்டோம். சுதந்திர போராட்ட களம் கண்டோம். தியாகிகள் பலரை தந்தோம். துப்பாக்கி ஏந்தினோம்.ரகசிய இயக்கங்களில் இருந்தோம்/நடத்தினோம். அடிபட்டோம், உதைப்பட்டோம். சிறை சென்றோம். இன்று தமிழகத்தின் முக்கிய கட்சிகள் பலவற்றில் எம்.எல்.ஏ.வாக அல்லது அமைச்சராக அல்ல. ஒரு கவுன்சிலர் ஆக கூட தடை இருக்கும். 'நவீன தீண்டாமைக்கு' பழகி கொண்டோம். மகாத்மாவின் வேண்டுகோளுக்கு இணங்க 'அரிஜன சங்கம்' அமைத்தோம். தமிழகத்தின் கோயில் கதவுகளை தாழ்த்தப்பட்டோருக்காக திறந்தோம். 'வைக்கம்' ஞாபகத்தில் இருப்பவர்களுக்கு மதுரையும் சிதம்பரம் கோயில்கள் எவ்விதம்/யாரால் தலித்துக்களுக்கு திறக்கப்பட்டன என்பது தெரியவே தெரியாது. அவைர்களில் சிலர் “ஆரிய” வாதம் செய்யும்போது அமைதியாய் விலகுகிறோம். கணித மேதையை தந்தோம். அறிவியலில் நோபல் பரிசுகள் பெற்றோம். (இந்தியா அறிவியலில் பெற்ற 4 நோபல் பரிசுகளில் 3 தமிழகத்தை சேர்ந்தது) நல் ஆசிரியராய் இருந்தோம்.இந்திய அரசியல் சாசன அமைப்பில் பெரும்பங்கு ஆற்றினோம். கல்வி சாலைகள் அமைத்தோம். அறிவு தளத்தில் பெரும் பங்கு ஆற்றினோம். ஆனால் நாடகங்களிலும் சினிமாவில் 'அறிவு இல்லாத' முட்டாளாக மட்டுமே பிராமணர்களை காட்டும் மூடநம்பிக்கையை கண்டு சிரிக்க கற்றோம். “பார்பார புத்திய காட்டிடேயே” என்ற வசவுகள் வலித்தாலும், சிரிக்கும் முகம் எளிய வாழ்க்கை. உலகில் எந்த தவறு நடந்தாலும் (அட மழை பெய்யாவிட்டாலும்) 'பார்பன அமெரிக்க ஏகாதிபத்திய கூட்டு சதியை முறியடிப்போம்' என சிவப்பு மையில் அடிக்கப்படும் போஸ்டர்களை பார்த்து அடிக்கடி குழம்பி போவோம். எம்மை காரணம் இல்லாமல் வெறுப்பவர்கள் ஒரு நாள் மாறுவர். அதுவரை நாம் காத்திருப்போம். செலவு குறைந்த எளிய உணவு, வேலையில் அற்பணிப்பு. வழியில் கோயிலை பார்த்தால் கன்னத்தில் போடும் பக்தி. அவசர கதியில் காயத்திரி ஜபம். குழந்தைகளின் எதிர்கால கவலை. சாதி சண்டை மற்றும் மத சண்டைகளை படித்தால், மனதில் வருத்தம். எவரையும் விட உயர்ந்தவனும் இல்லை. எவரையும் விட தாழ்ந்தவனும் இல்லை. என் தாய் மொழியையும் நாட்டையும் நேசிக்கும் நாங்கள் எளிய மனிதர்கள். நங்கள் தமிழக பிராமணர்கள் Article by www.brahminsforsociety.com Requests: Our group for serving Tamil nadu Brahmin community. Please forward to the maximum number of your contacts

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  தாழ்த்தப்பட்டோர் இடவொதுக்கீட்டிலாவது நியாயமிருக்கிறது கிட்டத்தட்ட எல்லா கிராமங்களிலும் அவர்கள் ஆதிக்கசாதியினரிடம் அல்லல் படுகிறார்கள் ஆனால் அந்த பஞ்சாயத்துக்களை நடத்துவதே போலி OBC இனத்தர்தான்.நூற்றுக்கு தொண்ணூறு OBCவேலைகளையும் கல்லூரி சீட்களையும் வெகு சில சாதியினரே தொடர்ந்து அனுபவிக்கிறார்கள் . அவர்களுக்கு கொடுக்கப்படும் ஒதுக்கீடு ஆதிக்க மனப்பான்மையையும் வன்கொடுமை மற்றும் ஆணவக்கொலைகொலைகளைத்தான் அதிகரிக்கிறது என்பது வெட்டவெளிச்சம் முக்கால்வாசி சாதியினர் எவ்வித ஒதுக்கீட்டுக்கு ஏற்றவர்களல்ல அவர்கள் தாழ்த்தப்பட்டோரை மணந்தால் இடவொதுக்கீட்டுக்கு பரிசீலிக்கலாம் அதுவும் திருமணத்தை முறிக்காதவரைத்தான் வேலை என்று வைக்கவேண்டும்

Advertisement