Advertisement

ராகுலுக்கு அழைப்பு; மோடிக்கு இல்லை!

மும்பை: மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி தலைவர், ராஜ் தாக்கரே மகனின் திருமண அழைப்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் உட்பட, பல மூத்த தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும், பிரதமர் நரேந்திர மோடிக்கு, அழைப்பு விடுக்கப்படவில்லை.


மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.
சிவசேனா கட்சியின் நிறுவனர், மறைந்த, பால் தாக்கரேவின் உறவினரான ராஜ் தாக்கரே, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற கட்சியை நடத்தி வருகிறார்.


இவரது மகன் அமித் தாக்கரேவுக்கு, 27ல், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் திருமணம் நடக்கஉள்ளது. அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு, திருமண அழைப்பு வழங்கப்பட்டு வருகிறது.


மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி உட்பட, பல மூத்த, பா.ஜ., தலைவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. காங்., தலைவர் ராகுலுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. ஆனால்,

பிரதமர் நரேந்திர மோடிக்கு, அழைப்பிதழ் வழங்கப்படவில்லை.


இதையடுத்து, லோக்சபா தேர்தலில், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுடன், காங்., கூட்டணி அமைக்கப் போவதாக பேச்சு எழுந்தது. 'திருமண அழைப்பிதழ் வழங்கியதற்கும், கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என, காங்., தரப்பு விளக்கம் அளித்து உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (16)

  • சிற்பி - Ahmadabad,இந்தியா

    மகிழ்ச்சி

  • kadhiravan - thiruvaroor,இந்தியா

    மோடியை சுத்திசுத்தி அடிக்கிறாங்க..,இது காலத்தின் கட்டாயம்.

  • balaji - chennai,இந்தியா

    If boo supports then poli crowd will shout that bbl is supporting religion parties. If religion parties ignore bbl, then these people praise raj Thakre. Ennangadaa ings nyayam

  • Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா

    நல்லதுதான், மோடி தப்பித்தார்

  • மார்கண்டேயன் - Chennai,இந்தியா

    நவ நிர்மாண சபையின் நட்பை சம்பாதித்ததால் காங்கிரஸ் ஒரு மத சார்புடைய கட்சி... இதை சொல்லிதானே பிஜேபி யை வம்புக்கு இழுதீர்கள்?

  • bal - chennai,இந்தியா

    திருடன் வீட்டுக்கு திருடன் தான் அழைக்கப்படுவான்....அதனால் ராஜ் மற்றும் ராகுல் ஒன்றுதான்...இது பற்றி மோடி கவலைப்பவேண்டியதில்லை.

  • Shekar Raghavan - muscat,ஓமன்

    அவுரு நம்ம ஊர் உளுத்து போன அரசியல்வாதி மாதிரி................சவுண்ட் ஜாஸ்தி சரக்கு இல்லாத வெத்துவேட்டு

  • கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா

    கல்யாணத்திலும் அரசியல் கல்யாண அழைப்பிதழ் கொடுப்பதிலும் அரசியல் இவர் நம் மாநில நாத்திக அரசியல்வாதிகளிடம் நன்றாக பாடம் படித்து இருப்பார்.

  • masthan sombu - korukku pettai ,இந்தியா

    . ராகுல் அப்படியா ?

  • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

    மாணமுள்ளவன்

  • sahayadhas - chennai,இந்தியா

    ராகுலின் வளர்ச்சிக்கு இது ஒரு உதாரணம்.

  • Mithun - Bengaluru,இந்தியா

    "மோடி நஹி, குஜராத் நஹி" என்று கூறிய பால்தாக்ரேயின் பேரை சொல்லி கட்சி நடத்தும் இவர், நம்ம தம்பிதுரையை போன்றவர்.

  • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

    வட போச்சே தலைவரே?

  • blocked user - blocked,மயோட்

    நவநிர்மாண் சேனா இன்னுமொரு இந்து விரோதக்கட்சி...

    • தலைவா - chennai,இந்தியா

      ஆமாம் ஆமாம் ராஜ் தாக்ரே இனி இஸ்லாமியர்.

  • அன்பு - தஞ்சை,இந்தியா

    புறக்கணிப்பவர்களை புறக்கணிப்பது நலம்.

    • MUDIYATTUM VIDIYATTUM - TAMIL NADU,இந்தியா

      அதை தான் தாக்ரே செய்துள்ளார்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement