Advertisement

தி.மு.க.,வுடன் கூட்டணியா? பிரதமர் மோடி பரபரப்பு

புதுடில்லி: ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரக்கோணம், கடலுார் ஆகிய லோக்சபா தொகுதியின், பா.ஜ., பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன், பிரதமர் மோடியின் கலந்தாய்வு கூட்டம், நேற்று நடந்தது.

'நமோ' ஆப், இணையதளத்தில் கேள்வி எழுப்பியதன் அடிப்படையில், தொகுதிக்கு ஒரு பொறுப்பாளர் தேர்வு செய்யப்பட்டு, அவர் கேள்வி எழுப்பினார். அவரிடம், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், பிரதமர் மோடி விளக்கமளித்தார்.

இதற்கு பதிலளித்து மோடி பேசியதாவது: காங்., ஆட்சி காலத்தில், ராணுவ தளவாடங்கள், தொழில்நுட்பங்கள் கொள்முதல், புரோக்கர்கள், இடைத்தரகர்கள் தலையீடு மூலமே நடந்தது. அது போன்றவர்கள், காங்., குடும்பத்துக்கு வேண்டியவர்களாக செயல்பட்டனர். ஆனால், பா.ஜ., பொறுப்பேற்ற பின், உள்நாட்டு பாதுகாப்பில் மாற்றம் ஏற்படுத்தியது.

'லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி' என, கேள்வி எழுப்பப்படுகிறது. தேசிய அரசியலில், 20 ஆண்டுகளுக்கு முன், வெற்றிகரமான கூட்டணியை அமைத்தவர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய். கூட்டணி விஷயத்தில், வாஜ்பாய் காட்டிய வழியை பின்பற்றுவோம்.

கடந்த தேர்தலில், பா.ஜ., தனிப் பெரும்பான்மை பெற்ற போதும், கூட்டணி கட்சிகளை இணைத்தே ஆட்சி அமைத்தது. நாம் அரசியலுக்காகவும், பொறுப்புக்காகவும் கூட்டணி முடிவை ஏற்றதில்லை. தேசத்துக்காகவும், மக்களின் பிரச்னைகளுக்காகவும் கூட்டணியை ஏற்றுள்ளோம்.

மாநிலத்தில் மக்களால் ஏற்கப்படுபவர், மக்கள் பிரச்னைகளுக்காக செயல்படுபவர்களுடனும், மக்களுடனும் கூட்டணி அமைப்போம். நம் திட்டங்கள், செயல்பாடுகள் மூலம் நாம் மக்களை சென்றடையும் போது, யாருடன் நாம் இணையலாம் என்பதை, மக்களே தெரிவிப்பர். கூட்டணிக்கான கதவு திறந்தே இருக்கிறது.

கடந்த நான்காண்டுகளில், தேசிய அளவிலான மிகப்பெரிய திட்டங்கள் அனைத்தும், தமிழகத்துக்கும் வழங்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் காக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி காணப்பட்டு உள்ளது.

ஸ்மார்ட் சிட்டி, தொழில் நுட்ப வளர்ச்சி திட்டங்களில், தமிழகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டம், செயல்பாட்டால், தமிழகம் வளர்ந்துள்ளதை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள். இவ்வாறு பிரதமர் பதில் அளித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (29)

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  என்ன சொன்னாலும் சரி மோடிஜி .. தமிழ்நாட்டில் தங்களுடன் பேசியவர்கள் மட்டுமே பிஜேபிக்கு ஓட்டுபோடுவார்கள். தமிழ் நாட்டில் முதலில் ஒரு பஞ்சாயத்தை தனியாக பிடித்துவிட்டால் நீங்கள் பிரதமரானதற்கு சமமாகவும் இருக்கலாம் ..

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  நோட்டாவுடன் மட்டுமே உங்கள் கூட்டணி.. ஏன் உங்க மானங்கெட்ட அடிமைகளின் அசிங்கம் உங்களுக்கே வெறுப்பாக உள்ளதா? கூட்டணி வெச்சித்தான் பாரேன்.. அட்ரஸ் இல்லாமே போகப்போறீங்க..

 • kadhiravan - thiruvaroor,இந்தியா

  என்ன பண்றது மக்களுக்காக ஆட்சிசெயதிருந்தால் இப்படி வாஜ்பாயி காலம்..,நேருஜிகாலமுன்னு கூட்டணிக்காக அலயத்தேவை இருந்திருக்காது..,தமிழ்நாட்டுல பி.ஜே.பி இன்னு சொன்னா...,கிடைக்கிற ஓட்டும் போய்டுமோன்னு எல்லா அரசியல் கட்சியும் அலறிஅடிச்சிகிட்டு ஓடுறாங்க..,தனியா நின்னு நோட்டாவை முந்தபாருங்க...,தமிழ்நாடு மட்டுமில்ல ஏறக்குறைய அனைத்துமாநிலத்திலும் இதுதான் நிலவரம்..,

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  நூல் விட்டு பார்க்கிறார்கள். கதவு திறந்து இருக்கிறது. வாஜ்பாய் பாணி என்றெல்லாம் சொல்லி பார்க்கிறார். பாவம். யார் முதுகில் ஏறி நாலஞ்சு எம்.பி. தேத்தலாம்னு பார்க்கிறார் பாவம்.

 • Krish Sami - Trivandrum,இந்தியா

  அன்று தமிழகத்தில் கூட்டணி சேர்ந்தவர்களை - பா ம க , தே மு தி க, எம் டி எம் கே போன்றவை - ஆட்சியில் இணைத்துக்கொண்டிருந்தால், இன்று தமிழ் நாட்டில் கூட்டணிக்கு அலைய வேண்டாமே. வைகோ விஜயகாந்த் பிரேமலதா போன்றவர்கள் எத்தனை நேர்மையாக தமிழ் நாடு முழுவதும் அணிக்கு பிரச்சாரம் செய்தார்கள்?

Advertisement