Advertisement

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்

சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி சவரன் தங்கம் 24 ஆயிரத்து 608 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவரை அமெரிக்க டாலர்களில் பணத்தை கொட்டிய முதலீட்டாளர்கள் தற்போது, தங்கமாக வாங்கி குவிப்பதால் ஒரே நாளில் எட்டு கிராமிற்கு 200 ரூபாய் எகிறியுள்ளது.

நம்நாட்டில், தங்கம் பயன்பாட்டில், தமிழகம், முன்னணி மாநிலமாக திகழ்கிறது. இதனால், திருமணம், பண்டிகை சீசன் மட்டுமின்றி, எப்போதும், நகை கடைகளில், கூட்டம் காணப்படுகிறது. சர்வதேச நிலவரங்களால், 2018ல், தங்கம் விலை அதிகரித்த வண்ணம் இருந்தது. அந்த ஆண்டு ஜனவரி, 1ல், கிராம் ஆபரண தங்கம், 2,807 ரூபாய்க்கும்; சவரன், 22 ஆயிரத்து, 456 ரூபாய்க்கும் விற்பனையானது. இவற்றின் விலை முறையே, டிசம்பர், 31ல், 3,017 ரூபாய்; 24 ஆயிரத்து, 136 ரூபாயாக இருந்தது.

இதையடுத்து, ஓராண்டில், தங்கம் விலை கிராமுக்கு, 210 ரூபாயும்; சவரனுக்கு, 1,680 ரூபாயும் உயர்ந்தது. இருப்பினும், 2012 நவம்பர், 26ல் இருந்த விலையான, கிராம், 3,068 ரூபாய்; சவரன், 24 ஆயிரத்து, 544 ரூபாய் என்ற, உச்சத்தை தாண்டவில்லை. சென்னையில், நேற்று முன்தினம், கிராம், 3,051 ரூபாய்க்கும்; சவரன், 24 ஆயிரத்து, 408 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 42.80 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 25 ரூபாய் உயர்ந்து, 3,076 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 200 ரூபாய் அதிகரித்து, 24 ஆயிரத்து, 608 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு, 30 காசு உயர்ந்து, 42.80 ரூபாயாக இருந்தது. அதாவது, ஆறு ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்களுக்கு பின், தற்போது, தங்கம் விலை, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

அமெரிக்கா அச்சம்:இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர், ஜெயந்திலால் சலானி கூறியதாவது: அமெரிக்க நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வர்த்தக குறியீடுகள் சரிவை சந்தித்துள்ளன; அந்நாட்டின் அதிபர் டிரம்ப், சமீபத்தில் வெளியிட்டுள்ள, சில அறிவிப்புகளால், அங்குள்ள தொழில் துறை பாதிக்கும் அபாயம் இருப்பதாக, சர்வதேச முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.

இதனால், அவர்கள், அமெரிக்க டாலருக்கு பதில், தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றனர். அமெரிக்க டாலரின் மதிப்பு, சர்வதேச சந்தையில் உயர்ந்து கொண்டே இருந்ததால், அதில், அதிக முதலீடுகள் செய்து வந்தனர். தற்போது, அந்நாட்டு அரசின் அறிவிப்பால், டாலர் மதிப்பு குறையும் என்ற அச்சம் எழுந்துள்ளதால், தங்கத்தில் முதலீடு செய்ய துவங்கி உள்ளனர்.

இதன் காரணமாக, சர்வதேச சந்தையில், தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன் தாக்கத்தால், இந்தியாவிலும், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விரைவில், சவரன் தங்கம், 25 ஆயிரம் ரூபாயை தாண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (12)

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  இதற்கும் காங்கிரஸ் காரணம் என்றால் முடிந்தது ( ஏற்கனவே உள்ளதை cut copy பேஸ்ட் முடிந்தது )

 • T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா

  சிதம்பரம் அவர்கள் நிதி அமைச்சராக இருந்த போது உலக சந்தையில் அவுன்ஸ் ஒன்றுக்கு1900 டாலர்கள் என்ற அளவில் உயர்ந்து அப்போது நம்நாட்டில் சுத்த தங்க விலை ரூ 3250 ஆபரண தங்கவிலை ரூ3028.

 • T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா

  பங்குச்சந்தையில் வர்த்தகம் நடைபெறும் தங்கமுதலீட்டு கம்பெனி களில் விலைமலிவாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.கம்பெனி பெயர் ஆக்ஸிஸ்கோல்டு,ரிலையன்ஸ் கோல்டு,எஸ்பிஐகோல்டு,ஐசிஐசிஐ கோல்டு,குவாண்டம் கோல்டு.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  தங்கமுதலீட்டை எந்த நிதி ஆலோசகரும் நல்லது என சொல்வதில்லை ஏனெனில் Standard Gold prices soared to Rs.32,336 per 10 grams on 6th July 2016, (ஆதாரம் BankBazaar ) இப்போதோ 31880.செய்கூலி சேதாரம் என ஆட்டயப்போடப்படுவது வழக்கம்தான் . இதனைவிட சாதாரண சேவிங்ஸ் பேங்கே மேல். முன்புபோல இளைஞிகளிடம் தங்க மோகமில்லை என்பது கூடுதல் தகவல்

 • ravisankar K - chennai,இந்தியா

  2012 இல் தங்கத்தின் விலை கிராமுக்கு 3105 தான் . தங்கத்திற்கு பதிலாக கோல்ட் பாண்ட் (கடன் பத்திரம்) இந்தியா அரசாங்கம் இப்போது விற்கிறது. தங்கத்திற்கு பதிலாக இதை வாங்கலாம் . பத்திரம் மீட்கும் போது தங்கம் அப்போது என்ன விலையோ அதை கொடுப்பார்கள் . உலகில் எந்த மத்திய வங்கியிலும் இல்லாத தங்கம் இந்தியாவில் உள்ளது. சேமிப்பு அத்தனையும் தங்கமாக வைத்திருப்பது முட்டாள்தனம் . வங்கியில் கடன் பெற முடியாதவர்கள் அவசர செலவுக்கு உதவுவது தங்கம்தான் . வட்டி கடை சேட் எப்போதுவேண்டுமானாலும் தங்கத்திற்கு அதிக வட்டிக்கு கடன் கொடுப்பார். ரூபாய் மதிப்பிழக்கும்போதும் தங்கம் பாதுகாப்பு .

Advertisement