Advertisement

'டவுட்' தனபாலு

பிரதமர் நரேந்திர மோடி: காங்கிரஸ் ஆட்சியின்போது, ரபேல் போர் விமானம் வாங்க, பேச்சு நடந்தது; ஆனால், அது கைவிடப்பட்டது. இதற்கு, தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் மாமா தான் காரணமா... மைக்கேல், வேறொரு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கிடைப்பதற்காக முயற்சித்ததால் தான், 126 ரபேல் போர் விமானங்கள் வாங்குவது கைவிடப்பட்டதா?

டவுட் தனபாலு: நியாயமான, 'டவுட்' தான்... அதேநேரத்தில், பொதுவெளியில் மட்டும் ரபேல் குறித்து பேசுவது ஏன்... 'ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்பதால், பார்லிமென்டுக்கு வரவே, பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார்'னு, ராகுல் குற்றஞ்சாட்டுகிறாரே... நேருக்கு நேர் இதைப் பற்றியெல்லாம் பேச, உங்களுக்கு அப்படி என்ன தயக்கம்...!

---

முதல்வர் பழனிசாமி: தேசிய அளவில், ஒவ்வொரு துறையிலும் விருதுகளை பெற்று, தமிழகம், முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்த சாதனைகளுக்காக, அரசை பாராட்டாமல், ஒரு சிலர், அரசு குறித்து வேண்டுமென்றே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றனர்.

டவுட் தனபாலு: தமிழக அரசை விமர்சிக்கும், பிராந்தியக் கட்சிகளுக்கு இந்த பதிலடியா... இல்லை, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தான், தமிழகத்துக்கு விடிவு பிறக்கும்... வளர்ச்சி, உச்சத்தை எட்டும்'னு, சொல்லி வர்ற, தேசிய கட்சிகளுக்கும் சேர்த்துத் தான் சொல்றீங்களா என்ற, 'டவுட்'டை, கொஞ்சம் வெளிப்படையாக விளக்குங்களேன்...!

---

துணை முதல்வர் பன்னீர்செல்வம்: உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள், குறைந்த கட்டணத்தில் கிடைப்பதால், தமிழகம், மருத்துவ சுற்றுலாவிலும் சிறந்து விளங்குகிறது.

டவுட் தனபாலு: ஜெ., மரண விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், இதுபோன்ற கருத்துகள் தேவையா... 'சிகிச்சைக்காக, வெளிநாட்டுக்கு, ஜெயலலிதாவை அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை என்பது சரிதான்... இட்லி விலையை குறைத்தால், இன்னமும், மருத்துவ சுற்றுலா வளரும்னு, சொல்ல வர்றீங்களா'ன்னு, யாரும், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

    செம நக்கலயா தனபாலு...............இட்லி விலையை ஒரு கோடியில் இருந்து ஒரு ரூபாய்க்கு குறைத்தால் மருத்துவ சுற்றுலா மேம்படும்.........:-)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    பிரதமர் pesa vendiyathu, vilakka vendiyathaiyellaam pothuveliyilum, 'man ki baath' ilium mattumthaan pesuvaar. Avarukkum naadaalumanraththukkum sampalam thavira veru sambandham illai

Advertisement