Advertisement

அங்கன்வாடி மையத்தில் நெல்லை கலெக்டரின் மகள்

திருநெல்வேலி : நெல்லை கலெக்டரின் 3 வயது மகள் அங்கன்வாடி மையத்தில் பயில்கிறார்.


தமிழகத்தில் பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகளை ஆங்கில பள்ளிகள், ‛கிட்ஸ் ஸ்கூல்'களிலோ தான் சேர்க்கின்றனர். பின்தங்கிய பகுதி குழந்தைகள்தான் அங்கன்வாடிகளுக்கு வருகின்றனர். அனைத்து தரப்பு குழந்தைகளும் அங்கன்வாடி மையங்களுக்கு வரவேண்டும் என்பதற்காக புதிய பாடத்திட்டங்கள், உணவுமுறைகள், நர்சரி பள்ளியை போல சீருடை போன்றவை வழங்கப்படுகிறது.


திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இரண்டாவது குழந்தையான 3 வயது கீதாஞ்சலி, ஆயுதப்படை வளாகத்திற்கு அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சககுழந்தைகளுடன் அமர்ந்து படிக்கிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (11)

  • Ramanujam Veraswamy - Madurai,இந்தியா

    A GOOD EXAMPLE - WORTH EMULATING, BY ALL GLAMOUR ON HIGH COST ENGLISH MEDIUM PRIVATE SCHOOLS.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    பாராட்ட வேண்டும். பாப்பா நல்ல நிலைக்கு வருவார்.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    தனியார் பள்ளி மோகத்திற்கு இது ஒரு சம்மட்டி அடி

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    இந்த முன் உதாரணத்தை எல்லா மாவட்ட ஆட்சியாளர்களும் பின்பற்றுவார்களா

  • Madhavan Parthasarathy - Chennai,இந்தியா

    குழந்தைக்கு அழகாக கன்னத்தில் பொட்டு வைச்சு தமிழ்மணம் மாறாமல் அழைச்சுண்டு வந்திருக்கிற தாயாரை போற்ற வேண்டும்

  • Prasanna Varadhan R -

    dear madam, let us not find shortfalls in everything. instead we will appreciate good things also is my humble request

  • metturaan - TEMA ,கானா

    மன்னிக்கணும்.... அந்த குழந்தையை படிக்க தானே சேர்த்தினார்கள் பாடம் நடத்த இல்லையே ? பின் எதற்காக அனாவசிய விளம்பரம் .?. ஊடகங்கள் முதலில் திருந்த வேண்டும் பிறகு ஊரை திருந்தட்டும்

  • MaRan - chennai,இந்தியா

    குழந்தை சேர்ந்த அன்று எடுக்கப்பட்ட போட்டோவாக இருக்கலாம்,,கிரிஜா வின் புலனாய்வு முடியல ,,,நல்ல மாற்றங்களுக்கு இதுபோன்ற செயல்கள் தான் அடித்தளம்

  • Bhaskaran - Chennai,இந்தியா

    ஆட்சியர் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார்

  • Girija - Chennai,இந்தியா

    குழந்தை சீருடை எங்கே ? அலங்கார பொருட்கள் எதற்கு? சொல்லுங்க

    • Gopi - Chennai,இந்தியா

      கிரிஜா நீங்க என்ன கோபாலபுரம் டைரக்ட் ரிட்டனா ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement