Advertisement

40 ஆண்டுகளுக்கு பின் பெற்றோரை தேடும் நபர்

கோவை: கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், பெற்றோரை பிரிந்து, டென்மார்க் சென்றவர், தற்போது, கோவையில் அவர்களை தேடி வருகிறார். கோவை, தொண்டாமுத்துார் லிங்கனுாரைச் சேர்ந்தவர் அய்யாவு; இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு, 1975ல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ராஜ்குமார் என பெயர் சூட்டினர். கருத்து வேறுபாட்டால், சரஸ்வதி பிரிந்து சென்றார். அய்யாவுக்கும் பக்கவாதம் ஏற்பட்டது. குழந்தையை வளர்க்க முடியாத நிலையில், 3 வயதான ராஜ்குமார், ஒரு தனியார் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு வந்த டென்மார்க்கை சேர்ந்த, கெல்ட் - பெர்த் ஆண்டர்சன் தம்பதி, ராஜ்குமாரை முறைப்படி, தத்து எடுத்தனர். ராஜ்குமார், கேஸ்பர் ஆண்டர்சனாக மாறினார். டென்மார்க், அல்பர்க் நகரில் வசித்த ஆண்டர்சனுக்கு, தற்போது வயது, 43. பெற்றோர் குறித்த எண்ணம் வந்ததால், தன்னை பெற்றெடுத்த தாய்-, தந்தையை பார்க்க, 40 ஆண்டுகளுக்கு பின், கோவை வந்துள்ளார்.


ராஜ்குமார் கூறியதாவது: டென்மார்க்கில், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் டிசைனராக உள்ளேன். 2015ம் ஆண்டு கோவை வந்தேன். அப்போதும், பெற்றோர் எங்குள்ளனர் என்ற விபரம் தெரியவில்லை. தற்போது, இரண்டாவது முறையாக வந்துள்ளேன். கோவை வந்த உடன், சொந்த ஊரான லிங்கனுார் கருப்பராயன் கோவில் பகுதியில் விசாரித்தேன். ஆனால், பெற்றோர், உறவினர் குறித்த தகவல் கிடைக்கவில்லை. மூதாட்டி ஒருவர், எனக்கு தங்கை உள்ளதாக தெரிவித்தார். இது, மிகவும் மகிழ்ச்சியை தந்தது. என் பெற்றோர் குறித்து தகவல் தெரிந்தால், 94437 24075, 90035 35301, 098222 06485 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இம்முறை கட்டாயம் பெற்றோர், உறவினரை சந்திப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (7)

  • MAKKAL NESAN - chennai,இந்தியா

    பெற்றோரைத் தேடிவரும் இந்த டென்மார்க் நபர் மதுரை ,உயர் நீதி மன்றக் கிளையில் ஆட்கொணர்வு ( ஹேபியஸ் கார்பஸ் ) மனு போட்டால் தேடிக் கோர்ட்டில் ஆஜர் படுத்துமாறு காவல் துறைக்கு கோர்ட் உத்தரவுட்டுத் தேடித்தரும் ஆதார் ஆணையம் அல்லது தேர்தல் ஆணையத்தை அணுகினால் அந்த ரெப்கார்டுகள் மற்றும் டேட்டா மிக எளிதாகத் தேடிக்கண்டுபிடிக்கலாம் தினமலர் இத் தகவலைச் சம்பந்தப்பட்ட நபருக்குத் தெரியப்படுத்தி உதவ வேண்டுகிறேன்

  • MAKKAL NESAN - chennai,இந்தியா

    Yyy

  • kulandhai Kannan -

    40 ஆண்டுகளுக்கு முன்னரே ஆள்பிடி வேலை தொடங்கிவிட்டதா?

  • Giri -

    Ivaru pakkurathukku revenue minister Udhaya kumar mathiri irukkaro!!

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

    இவருடைய பெற்றோர் இவரை பிரியும்போதே பிரிந்துவிட்டார்கள்.இருந்தாலும் ஒரு பெற்றோரையாவது காணும் வாய்ப்பு கிடைக்கலாம் . ..இப்படி தான் தனுஷின் பெற்றோர்கள் உள்ளூரிலியே தனது மகன் தனுஷை தேடி கொண்டிருந்தனர். கண்டுபிடித்தார்களா? என்று தெரியவில்லை.

  • ருத்ரா -

    உங்கள் உறவினர்களுடன் சேர்ந்து மகிழ இறைவனை வேண்டுகிறேன்.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    தேடும் சொந்தங்கள் கிடைத்து, உங்களை வளர்த்த சொந்தங்கள் உடன் மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement