Advertisement

புது இன்ஜி., கல்லூரிக்கு இனி அனுமதி இல்லை

சென்னை : 'புதிய இன்ஜினியரிங் கல்லுாரிகள் துவக்க, அடுத்த ஆண்டு முதல், அனுமதி அளிக்க வேண்டாம்' என, மத்திய அரசுக்கு, நிபுணர் குழு பரிந்துரைந்துள்ளது.


உயர் கல்வியின் தரம் மற்றும் இன்ஜி., கல்லுாரிகளின் நிலை குறித்து ஆராய, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், நிபுணர் குழு அமைக்கப்பட்டது. ஐதராபாத் ஐ.ஐ.டி.,யின் தலைவர், மோகன் ரெட்டி தலைமையிலான இந்தக் குழு ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பித்துள்ளது.


அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் சகஸ்ரபுதே கூறியதாவது: பெரும்பாலான இன்ஜி., கல்லுாரிகளில், இடங்கள் காலியாக உள்ளன. மாணவர் சேர்க்கைக்கு அதிகமாக கல்லுாரிகள் உள்ளன. எனவே, அடுத்த ஆண்டு முதல், புதிய கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என, நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.


வழக்கமான மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற பாடங்களுக்கு, மாணவர் இடங்களை அதிகரிக்க வேண்டாம். மாறாக நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப, முப்பரிமாண தொழில்நுட்பம், ரோபாட்டிக்ஸ், சைபர் செக்யூரிட்டி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றுக்கு, புதிய பாடங்களை அனுமதிக்கலாம் என்றும், குழு பரிந்துரைத்துள்ளது.இவ்வாறு கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா

    இந்த எல்லா போலி இன்ஜினீரிங் கல்லூரிகளையும் மூடி விட வேண்டும். இவர்கள் மாணவர்கள் 15 ஸதா வீதம் கூட வேலை கிடைப்பதில்லை. தமிழ் நட்டு பரிதாப நிலை.

  • Gopi - Chennai,இந்தியா

    நல்லா தலைமேல் கொட்டுறா மாதிரி சொல்லுங்க. ஒழுங்கான கட்டமைப்பு இல்லாத எந்த எஞ்சினீரிங் கல்லூரியும் வேண்டாம்

  • Indhuindian - Chennai,இந்தியா

    புதுசா இன்ஜினியரிங் கல்லூரி தொறக்கணுமா? கவலையே விடுங்க இங்கே தமிழ் நாட்டுக்கு வாங்க இங்கே இன்ஜினியரிங் கல்லூரிகளை கூறு போட்டு கூவி கூவி விக்க தயாராக இருக்காங்க யாராவது ஏமாளி ஆப்டுவானானு

  • ஆப்பு -

    காலியா இருக்கிற கட்டிடங்களில் டீக்கடை, பஜ்ஜி, பக்கோடா போட்டு உலகுக்கே உணவு வழங்கலாம்.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இருக்கும் பொறியியல் கல்லூரிகள் இனி திருமண மண்டபமாக மாற்றப்படும்

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    அப்ப, இனி படிக்காத கூமுட்டைகள் கொள்ளையடித்த பணத்தை வைத்து என்ஜினீயரிங் கல்லூரி திறக்க முடியாதா? அய்யகோ.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement