Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'சந்தடி சாக்குல, ஜெயலலிதாவை பாராட்டுறீங்களே... ஸ்டாலின் கோவிச்சுக்க போறார்...' என, எச்சரிக்க தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேட்டி: காவிரியில், மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், 5 கோடி மக்களுக்கு, குடிநீர் இருக்காது. 25 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் அழியும். ஒரு வேளை, உச்ச நீதிமன்றம் அதைத் தடுக்க வாய்ப்பு உள்ளது. அப்படி தடுத்தாலும், தீர்ப்பை மீறி, ரகசியமாக அணை கட்டப்படும் என, நினைக்கிறேன். இதற்கு மத்திய அரசு தான் காரணம். காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா சரியாக செயல்பட்டார். ஆனால், இப்போதைய அரசு, அப்படி செயல்படவில்லை.


'தேர்தல் வருது... ஓட்டுக்கு பணம் தர்ற அளவுக்கு எங்க கட்சியிடம் நிதி வசதி இல்லை... அதனால, எந்த கூட்டணியில நின்னாலும், மக்களா இரக்கப்பட்டு ஏதாவது தயவு செய்யணும்னு, நாசூக்கா கேட்கிறாரோ' என சந்தேகப்பட தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: நாடு முழுவதும் ஊழல் ஒழிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. நல்லவர்கள், நமக்கு நல்லது செய்வர் என நினைத்து தான், மக்கள், அரசியல்வாதிகளுக்கு ஓட்டளிக்கின்றனர். ஆனால், மாநிலங்களிலும் மத்தியிலும் ஆட்சியில் இருப்பவர்களைப் பற்றி, தினம் தினம் ஊழல் புகார்கள் வருகின்றன. காமராஜர் நல்லாட்சி தந்தார். நான் தோற்றாலும், ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது என்றார். ஆனால், சமீபகாலமாக, பணம் தான், தேர்லில் வெற்றியை தீர்மானிக்கிறது. பணத்துக்கு ஓட்டு போடாமலும், தங்கள் கடமையை உணர்ந்து, ஒவ்வொருவரும் பணியாற்றினாலும் தான், ஊழலை ஒழிக்க முடியும். அப்போது தான், மாநிலங்களும், நாடும் வலிமையாக முன்னேறும்.


இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேட்டி: ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம், புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் அழிந்து விட்டது. மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். மரங்கள் விழுந்து விட்டன. நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை. அரசு அறிவித்துள்ள நிவாரணத்தை அதிகரித்து, அனைவருக்கும் வழங்க வேண்டும். சேலம் எட்டு வழிச்சாலைக்காக அகற்றப்படும் தென்னை மரத்துக்கு, 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், புயல் பாதித்த மாவட்டங்களில், 600 ரூபாய் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, நியாயமல்ல.


மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிக்கை: ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், வெளிநாட்டு நிதியுதவியுடன், மொத்தம், 26 காப்பகங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில், 75 காப்பகங்கள் சட்டவிரோதமாக இயங்கி வருபவை. அவற்றில் தங்கியுள்ள சிறுமியருக்கு, பாலியல் தொந்தரவு கொடுப்பது அதிகரித்துள்ளது. இதை அறிந்திருந்தும், ஒடிசா மாநில அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டு, சட்டவிரோத காப்பகங்களை தடை செய்ய, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement