Advertisement

பிரபல ஒளிப்பதிவாளர் காலமானால

சென்னை, ரஜினி, கமல் படங்களில் பணியாற்றிய, பிரபல ஒளிப்பதிவாளர், டி.எஸ்.விநாயகம், 78, உடல்நல குறைவால், நேற்று காலமானார்.'கல்துாண், ராஜா சின்ன ரோஜா, வேலைக்காரன், உயர்ந்த உள்ளம்' உட்பட, 70க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், டி.எஸ்.விநாயகம். இவர், ரஜினி, கமல், சிவாஜி நடித்த பல படங்களில் பணியாற்றியுள்ளார். வடபழனி, கங்கையம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தார்.உடல் நலக்குறைவால், தனியார் மருத்துவமனை ஒன்றில், சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி, நேற்று காலமானார். இவருக்கு சாந்தகுமாரி என்ற மனைவியும், ரவிராஜ், பார்த்திபன் என்ற, இரு மகன்களும் உள்ளனர்.லண்டனில் உள்ள பார்த்திபன் சென்னை வந்ததும், நாளை, விநாயகத்தின் சொந்த ஊரான குன்றத்துாரில், அவரது இறுதிச்சடங்கு நடக்கிறது. விநாயகத்தின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement