Advertisement

கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் குவைத்

குவைத்சிட்டி: குவைத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்குஏற்பட்டுள்ளது. எண்ணெய் வளம்மிக்க வளைகுடாநாடான குவைத்தில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் குவைத் நகர் வெள்ளக்கடானாது.


முக்கிய பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்தன. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குடியிருப்பு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தததால் அங்கிருந்த கார்கள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜோர்டான் தூதரகத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.


கனமழையால் குவைத் நகரில் கல்வி நிறுவனங்கள்,அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவமும், தேசிய பாதுகாப்புபடையும் ஈடுபட்டு வருகின்றன.


வெள்ள மீட்பு பணிகளில் முன்னெச்சரிக்கைநடவடிக்கை எடுக்க வில்லை என குவைத் பொது பணித்துறை அமைச்சர் மீது புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (16)

 • sumutha - chennai - Chennai,இந்தியா

  //வெள்ள மீட்பு பணிகளில் முன்னெச்சரிக்கைநடவடிக்கை எடுக்க வில்லை என குவைத் பொது பணித்துறை அமைச்சர் மீது புகார் எழுந்துள்ளது.// நல்ல கேட்டுப்பாருங்க அவரு மோடிப்பேச்சை கேக்கிற பிஜேபி கட்சிக்காரரா இருக்க போறார். அது சரி துபாயில் இருக்கிற பஸ் ஸ்டான்ட் எல்லாம் நல்ல இருக்கா? அதுக்கு எதுவும் சேதாரம் ஆச்சான்னு வடிவேலு கேக்க சொன்னாருங்க.

 • Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா

  குவைத்திலும் மழை பெய்தால் ரோடு நிலை சென்னை தான் , என்ன, அங்கே இதை வைத்து அரசியல் பண்ன திராவிட கட்சிகள் இல்லை. சென்னை நிலைக்கு 50 ஆண்டுகள் ஆண்ட ஆளும் கட்சிகளே தான் காரணம் அவர்கள் செய்திருந்த்தால் இவர்களை குற்றம் சொல்ல வேண்டிய நிலையே இருக்காதே

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  குவைத் சிறு நாடுதான். தினமலர் பிரசுரித்தது போல வெள்ளக்காடு என்பது இல்லை. சில பகுதிகளில் மழை நீர் தேங்கி கார்கள் மிதக்கின்றன. அனைத்து இடங்களும் அப்படி இல்லை. நாட்டின் பல பகுதிகளிலும் பாலம் அமைக்கும் பணிகள் நடப்பதால் பள்ளங்களாக இருப்பதால் தண்ணீர் வெளியேற வழியில்லை. ஆக மொத்தம் பாதிப்பு என்பது ஒரு சில இடங்களில் ( மங்காப், பஹாஹீல் ) மட்டுமே. அதே போல அரசு விடுமுறை நவம்பர் ஆறாம் தேதி மட்டும்தான். ( அதுவும் அன்று காலை மழை பெய்ததால் பள்ளி செல்ல சிரமப்பட்டார்கள்) அதன் பின்னர் விடுமுறை எதுவுமில்லை.

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  ஏற்கெனவே ஈரான் அமைச்சர் ஒருவர் அவிங்க மேகத்தை இஸ்ரேல் திருடிவிட்டதாக குற்றம் சொல்லி இருந்தார் ...இது யார்கிட்ட இருந்து திருடியதோ? இன்டர்போல் போலீசை வச்சு கண்டுபிடிக்கணும்

 • Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா

  இவரல்லவா தன்மானமுள்ள அமைச்சர்.

 • sakthi - Covai,இந்தியா

  அவிங்கல்லாம் ரெம்ப மானஸ்தங்க இங்க இருக்கறதெல்லாம் முற்றும் துறந்த பொறம்போக்குகள்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இங்கே பொழியவேண்டியது அங்கே பொழிகிறது...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  என்றைக்கோ ஒருநாள் தான் மழையை காண்கிறார்கள்..

 • பைத்தியம் சென்னை -

  என்னது அமைச்சர் ராஜினமாவா...அன்னே கொஞ்சம் இங்க வந்து சொல்லிட்டு போங்க...

 • HSR - Chennai,இந்தியா

  அப்பூடின்னா இனிமே ஷேக்கொட எண்ணெய் கிணருல தண்ணிதான் வருமோ?..பொதுவாக பாவிகள் இருக்கும் இடத்தில் மழை பெய்யாதே

 • s t rajan - chennai,இந்தியா

  வறண்ட பாலையிலும் மழை. ஆனால் மக்களை சுரண்டும் சென்னையில் இல்லை.... எப்படிப் பெய்யும். ஆளுபவர்கள் எதிர்ப்பவர்கள் எல்லோருமே கூடிக் கொள்ளையடித்தால். உலகிலேயே துளியும் நேர்மை இல்லா இடம் சென்னை தானோ ?

 • C.Jeyabalan - Shoreline,யூ.எஸ்.ஏ

  என்னடா அதிசயம், குவைத்தில் மழையெல்லாம் பெய்யுதா?

 • nicolethomson - bengalooru,இந்தியா

  அப்படின்னா எங்களுக்கு வர வேண்டிய மழை அங்கே கொண்டுபோகப்பட்டு விட்டதா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement