Advertisement

இலங்கை பார்லி.கலைப்பு: 2019 ஜனவரி 5-ம் தேதி தேர்தல்

கொழும்பு : இலங்கை பார்லிமென்ட் கலைக்கப்பட்டுள்ளதாக அதிபர் சிறிசேன அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதையடுத்து 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி பார்லி. தேர்தல் நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே நீக்கப்பட்டு, மகிந்தா ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றார். இவர் 14ம் தேதி, பார்லிமென்ட்டில் பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் பார்லிமென்ட் கலைக்கப்பட்டுள்ளது.


விரைவில் தேர்தல் :இலங்கை பார்லிமென்டில், அதிபர் சிறிசேன கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தினாலேயே, பார்லிமென்ட்டை கலைத்துள்ளதாகவும், அங்கு ஜனவரி மாதத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பிருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.


தகர்ந்தது கனவு :பிரதமர் பதவி என்ற கனவு, ராஜபக்சேவிற்கு தகர்ந்துள்ளது. சிறிது நாட்களுக்கு முன்னர், தமிழ் செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த மகிந்தா ராஜபக்சே, தான் மீண்டும் அதிபர் ஆவதை காட்டிலும், பிரதமர் ஆவதையே விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார். சொல்லிவைத்தாற்போல, சில நாட்களுக்கு முன், பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே நீக்கப்பட்டு, ராஜபக்சே பிரதமர் பதவியேற்றார். இந்நிலையில், பார்லிமென்ட் கலைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை பார்லி.க்கு 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி தேர்தல் நடக்கும் எனவும் புதிய பார்லி. ஜனவரி 17-ம் தேதி பதவியேற்கும் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (13)

 • sumutha - chennai - Chennai,இந்தியா

  இலங்கை அதிபர் சிரிசேனா அவர்களே உங்களுக்கு தைரியமிருந்தால் துணிச்சல் இருந்தால் நீங்கள் ஒரு நெஞ்சுரம் மிகுந்த ஆண்மகனாக இருந்தால் இங்கே தமிழ்நாட்டில் நடந்துவரும் ஆட்சியை களையுங்களேன் பார்ப்போம். அப்படி கலைத்து எங்க தலய ஆட்சிகட்டில்ல ஓக்காத்தி அழகு பார் பார்ப்போம். அவங்க அப்பா போர் சமயத்தில் எப்படியெல்லாம் ஒங்களுக்கு உதவினார். நெஞ்சில் உங்களுக்கு ஈரம் இருந்தால் நன்றி உணர்ச்சி இருந்தால் இதை செய்யுங்கள் பார்ப்போம். சிரிசேனா:- என் ஓங்க தலயாலே இதை செய்ய முடியலையா? தொண்டன்:- யோவ் கடந்த ஒண்ணரை வருஷத்து பேப்பர எடுத்து படிச்சி பாருயா. எப்படியெல்லாம் சாபம் கொடுத்து ஜோசியம் சொல்லி எப்படியெல்லாமோ போராடி பார்த்தும் முடியலை யப்பா. பிளீஸ் நீயாவது ஒன்னோட செல்வாக வச்சி கையோட கலைச்சி விடுப்பா. ஒனக்கு புண்ணியமா போகும்.

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  சிறிசேனா பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர் ராகுலை போன்று பதவி வெறி பிடித்தவர் இலங்கை பாராளுமன்றத்தை முடக்கிய சர்வாதிகாரி . தமிழ் மக்களை அரவணைத்துச் செல்லும் அரசு இலங்கையில் அமைவது நல்லது.

 • Balaji Elumalai - chennai,இந்தியா

  இடைக்கால பிரதம மந்திரி என்ற ஒரு நடைமுறை அங்கு இல்லையா அப்படி இருந்தால் யார் இடைக்கால பிரதம மந்திரி. எப்படிப் பார்த்தாலும் இலங்கையை இந்தியாவிடம் இருந்தும் சீனாவிடம் இருந்தும் காப்பாற்ற அங்கு இருக்கும் தமிழர்களால் மட்டுமே முடியும். இது வேடிக்கை அல்லல்ல நான் நம்பும் நிஜம்.

 • Rohini Tharmakulasingham - Jaffna,இலங்கை

  இலங்கை சனநாயகம் பதுக்கப்படவேண்டும் என்ற கோசம் போடுபவர்கள் சில ஆதிக்க நாடுகள் இலங்கையில் உள்விவகாரங்களில் தலையிடுவதட்கு மட்டுமே. இலங்கை இந்தியா சீனா நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை பேணி வருகிறது. சிலர் சீன பூச்சாண்டி காட்டுகின்றனர் undefined பொதுத்தேர்தலில் மக்கள் தீர்மானிப்பார்கள்.

 • kovai Tamilian - Kovai,இந்தியா

  அப்பாவிகளாக இறந்த தமிழர்களின் சாபம் சும்மா விடுமா அந்த நாட்டை. இன்னும் இருக்கு நிறைய வேடிக்கை.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஜனாதிபதியா நெறைய சுருட்டமுடியாது பிரதமரா வானளவு சுருட்டலாம்

 • Muruga Vel - Chennai,இந்தியா

  விளங்கிடும் …. ஐந்தாண்டுக்கு ஒரு முறை தான் தேர்தல் நடக்கணும் ..

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  ராஜபக்சே அல்லது ரணில் விரமசிங்கே இதில் யார் வந்தாலும் இப்போதைய ஜனாதிபதி மைத்திரி பாலாவுக்கு சங்குதான். இருவரும், ஒருவர் 2015 ஆண்டு விரட்டியடிக்கப்பட்டவர், மற்றவரை கடந்த மாதம் விரட்டியடிக்க முயட்சி செய்யப்பட்டவர், இருவருமே மைத்திரிபாலாவின் மீது பழி தீர்ப்பார்.

 • Vasanth Saminathan - Trivandrum,இந்தியா

  வெளங்கிரும். இதுக்குத்தான் இந்தியா, தமிழர்களை அழிச்சி அரசியலையமைப்பை நிலைநாட்டுச்சோ. தூரத்துல இருக்குற சீனாக்காரன் ஆதிக்கம் செலுத்துறான், இந்தியா விரல் சூப்பிக்கிட்டு வேடிக்கை பாக்குது. வெட்கம் வேதனை அவமானம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement