Advertisement

ஆர்பிஐ.,யின் பணத்தை அரசு கேட்கவில்லை

புதுடில்லி : மத்திய ரிசர்வ் வங்கியிடம் உள்ள பணத்தை ஒப்படைக்கும் படி மத்திய அரசு கேட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டை மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுநாஷ் சந்திர கார்க் தனது டுவிட்டர் பக்கத்தில் மறுத்துள்ளார்.


அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மீடியாக்களில் பல தவறான தகவல்கள் பரவி வருகின்றன. அரசின் நடப்பாண்டு கணக்கு மொத்தமாக வரையறுக்கப்பட்டது. மற்றவர்கள் கூறுவது போல் ஆர்பிஐ.,யிடம் உள்ள ரூ.3.6 அல்லது 1 லட்சம் கோடியை அரசிடம் அளிக்கும்படி எந்த அறிவுறுத்தலும் வரவில்லை. அதற்கு மாற்றாக ஆர்பிஐ.,யின் பொருளாதார கட்டமைப்பை ஒருங்கிணைக்க வேண்டும் என்று மட்டுமே அரசுடன் ஆலோசிக்கப்பட்டது.


2013-14 ம் நிதியாண்டில் அரசின் நிதி பற்றாக்குறை 5.1 சதவீதமாக இருந்தது. 2014-15 ம் ஆண்டு முதல் அரசு இதனை வெற்றிகரமாக குறைக்க துவங்கியது. 2018-19 ம் நிதியாண்டு முடிவில் நிதி பற்றாக்குறை 3.3 சதவீதமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (22)

 • adalarasan - chennai,இந்தியா

  பொய் களை பரப்பி, எதிர்க்கட்சிகள், குறிப்பாக ஊழல்வாதிகள், ஆட்சியை பிடித்து, கிடிக்கிப்பிடியில் இருந்து தப்பிக்க வழி வகுக்கப்பார்கிறார்கள்?இது, எவ்வளவு தூரம், எவ்வளவு,நாட்கள், வழிமுரையில் சாதியம் ?மக்கள் சிந்திக்கவேண்டும்? இவர்களுக்கு என்று ஒரு கொள்கையில்லாமல், சும்மா, மோடி வொழிக, என்று மட்டும், கூறி, ஆட்சியை பிடிப்பவர்களை நம்பினால், மக்கள் தான், பிறகு, துக்கப்படவேண்டியிருக்கும் ?இவர்கள், ஆட்சியில்,2014varai செய்த, குலுறுபாடுகள், ஊழல்களை சரி செய்து குற்றவாளிகளை, [லல்லுஜிபோல்]உள்ளே போட இந்த அரசுக்கு இன்னும் 5ஆண்டுகள் தேவைப்படும்?நாடு சீராகி, உலகளவில், வலுவான நாடாக திகழும்

 • Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ

  இவர்கள் எழுதுவதை பார்த்தால் ரிசர்வ் பாங்கில் உள்ள உபரி பணத்தை மோடி தன்னிடம் தருமாறு பொறுள் படும் படி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. அதை இங்கு ப்ரசுரத்திதே தவறு.

 • ஆப்பு -

  இவிங்க என்னதான் இவிங்களோட நியாயத்த சொன்னலும், ரிசர்வ் வங்கி மறுப்பதேன்? உலக அளவில் ரிசர்வ் வங்கிகளின் பாதுகாப்பு அதாவது ரிசர்வ் தொகை 15% வரை இருக்கும் போது, பாரத ரிசர்வ் வங்கி அதை 27% ஆக வைத்துக் கொண்டுள்ளதை காரணம் காட்டி உபரி பணத்தை இதர வங்கிகளுக்கு அளிக்கும் படி. வற்புறுத்துகிறார்கள். இதற்கு உர்ஜித் மறுப்பதேன்? வரும் நவம்பர் 19ந்தேதி நடைபெற இருக்கும் கூட்டத்தில் உர்ஜித் படேல் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப் படுகிறது.

 • rajan. - kerala,இந்தியா

  ஹலோ கல்லாப்பெட்டி அண்ணே இப்போ இந்த பிரசுரம் பத்தி என்ன சொல்ல போவுறே. எதோ பேரழிவு என வீர வசனமெல்லாம் கொட்டினே? இந்த பொய்யும் புரட்டும் உன் புத்தில நல்ல ஊறி போச்சுதோ. உன்னை மட்டும் திருத்தவே முடியாது நீயும் திருந்துற போறதில்லே. என்ன ஒரு உலக பொருளாதார நிபுணனோ நீ போ போயி உன் வுட்டு சங்கை நல்லா ஊது.

 • rajan. - kerala,இந்தியா

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  திவாலாகும் நிலையில் இருந்த பேங்க் ஆஃப் தஞ்சாவூர் வங்கியை 1990 களில் இந்தியன் வங்கியுடன் இணைத்ததால், நல்ல நிலையில் இருந்த இந்தியன் வங்கியும் நாசமானது. கோபாலகிருஷ்ணன் தயவில் மூப்பனாரும், வாழப்பாடியும் நீலகிரி பிரபுவும் இந்தியன் வங்கியை கொள்ளையடித்தார்கள். ஊழியர்களின் கடும் உழைப்பால் மீண்டும் அந்த வங்கி நல்ல நிலைக்கு வந்துள்ளது. காங்கிரஸ் வந்தால் அதோகதிதான்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  நிர்வாக சீர்குலைவு.

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  2013-14 ம் நிதியாண்டில் அரசின் நிதி பற்றாக்குறை 5.1 சதவீதமாக இருந்தது, ஆனால் இத்தாலிய குடும்ப உறுப்பினர்கள், பசி குடும்ப உறுப்பினர்கள் நம்ம தமிழ்நாடு காங்கிரஸ் தோழமை கட்சியின் குடும்ப உறுப்பினர்கள் நிதி ஆதாரங்களில் மட்டும் பற்றாக்குறை வந்ததே இல்லை ?

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  ஒருங்கிணைப்பது என்றால் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமையவிருக்கும் திருட்டு கூட்டணி தலைவர்களிடம் RBI ஐ ஒப்படைப்பது.

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  இந்தியன் வங்கியின் சேர்மனாக இருந்தவர் கோபாலகிருஷ்ணன் G.K மூப்பனார் என்கின்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர் பரிந்துரையின் பேரில் கோடிக்கணக்கான பணம் பல காங்கிரஸ் MLA MP களுக்கும் தொழில் அதிபர்களுக்கும் வாரிவழங்கப்பட்டது. சுருட்டிக் கொண்டார்கள். இவர்கள் தான் மோகன்லால் கரம்சந்த் வளர்த்தெடுத்த களவாணி காங்கிரஸ்காரர்கள்.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  5 % இல் இருந்து 3 % மாக பற்றாக்குறை குறைத்து மோடி அரசின் மிகப்பெரிய சாதனை nithiayog jandhan demon GST வங்கிகள் இணைப்பு திவால் சட்டம் பினாமி சட்டம் rupay என தொடர்ந்து நிதி துறையில் சீர்திருத்தங்கள் செய்து அயராது உழைக்கும் அருணுக்கும் மோடிக்கும் பாராட்டுக்கள்

 • HSR - Chennai,இந்தியா

  இந்த எதிர்க்கட்சிகள் என்னிக்கு உண்மைய சொல்லியிருக்காங்க..

 • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

  முதலில் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் இது நேரடியாக பிரதமரின் கட்டுப்பாட்டின் கீழ் வர வேண்டும்

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  தற்போதைய மத்திய அரசானது வங்கிச் பொருளாதாரத்தில் மிகச்சிறந்த சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதைக் கெடுத்து மீண்டும் பழையபடி எந்த பிணையும் இல்லாமல் வங்கிப்பணத்தை வாரிவழங்க துடிப்பவர்கள் தான் தினமும் இதுபோல் வதந்திகளை கிளம்பி மக்களை குழப்புகிறார்கள். இந்த அரசு நீடித்தால், இன்னும் ஐந்து ஆண்டுகளில் வங்கிகளை ஏமாற்றுவது மிகவும் குறைந்துவிடும்.

 • Darmavan - Chennai,இந்தியா

  தவறான தகவல்களை பரப்புவோர் மீது ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை.

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  RBI காங்கிரசின் சொத்தா? அரசுக்கு கேட்க உரிமை இல்லையா?

 • மணிமாறன் - trichy,இந்தியா

  " ஆர்பிஐ.,யின் பணத்தை அரசு கேட்கவில்லை'.. ஆமாம்...மொத்தமா... ஆர்பிஐ யே அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத்தான் கேட்டோம்...

 • Srinivasan Desikan - chennai,இந்தியா

  இது​க்கு பேருதான் பூசி ​மொழுகறது என்று தமிழில் ​சொல்லுவார்கள். ஆர்பிஐ என்பது ​நேரி​டையாக ​பொதுமக்களுக்கு பணபரிவர்த்த​னை ​செய்யும் அ​மைப்பு அல்ல. பணபரிவர்த்த​னையில் ஈடுபடும் ஆர்பிஐ அல்லாத பிறவங்கிகளால் தான் இன்று நாடு ​பெரும் ​பொருளாதார சரி​​வை சந்தித்து வருகிறது. கடன் வாங்கி​கொண்டு நாட்​டை ஓடுகிறவர்கள் அவர்களுக்கு உதவி​செய்யும் அரசியயல் தலைவர்கள் ஆகிய இவர்க​ளை முதலில் சட்டத்தின் முன்நிறுத்தி மக்களு​டைய பணத்​தை மீட்​டெடுங்கள் அதன்பின் ஆர்பிஐயின் ​பொருளாதாரத்​தை கட்டமைக்கலாம்.

 • Raj - Chennai,இந்தியா

  ஒருங்கிணைப்பது என்றால் என்ன?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement