Advertisement

மக்கள் என் மீது நம்பிக்கை: மோடி

ஜக்தல்பூர் : பா.ஜ., ஆட்சியிலேயே வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என பிரதமர் மோடி சட்டீஸ்கரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில் கூறினார்.


சட்டீஸ்கர் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தல் நவ.,12 ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜக்தல்பூரில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, பா.ஜ., ஆட்சிலேயே வளர்ச்சி அதிகரித்துள்ளது. ஜாதி அரசியல் மிகுந்திருந்த சட்டீஸ்கரில் தற்போது அது காணாமல் போய் உள்ளது. மக்கள் என் மீது அதிருப்தியில் இல்லை. மாறாக இப்போதும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.


அபரிமிதமான வளர்ச்சி
ஏழைகள் மற்றும் பழங்குடியினரை குறிவைத்தே நக்சல்கள் உள்ளனர். நக்சல்களுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டையாக உள்ளன. நகர்புறங்களில் வாழும் நக்சல்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன. எனது ஆட்சியில் சட்டீஸ்கரில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (77)

 • இலாசர் -

  தொழில் முடங்கி , மாத செலவுக்கு வழியில்லாம , ரொம்ப நம்பிக்கை சாமி

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஆமாம் நீங்க நல்ல உலகை சுற்றிவருவீங்க என்ற நம்பிக்கை மக்களிடையே பலமாக இருக்கிறது

 • Pachiappan Kasi -

  பொருளாதார முன்னேற்றத்தில் வரலாற்றிலேயே முதன் முறையாக பத்து இடங்களுக்குள் வந்து, தற்போது ஆறாவது இடத்தை பிடித்துள்ளது நம்நாடு. அது மட்டுமா? உலகிலேயே அதிவேகமாக முன்னேறும் ஒரே நாடு இந்தியா. இது தலைசிறந்த பொருளாதார மேதை மௌன மோகன் ஆட்சியில் அல்ல, ஏழை பங்காளன் மோடி அவர்கள் ஆட்சியில் தான். கோடிக்கணக்கான நம் வரிப்பணத்தை கடன் என்றும் இன்னும் பலப்பல வழிகளில் தாங்கள் கொள்ளையடித்தது மட்டுமல்லாமல் நாட்டின் மேல் தட்டு மக்கள், தொழிலதிபர்களுக்கு கூறு போட்டு கொடுத்தது இத்தாலி ஆன்டோனிய மெய்னோவின் காங்கிரஸ் அரசு, மக்களை திசைதிருப்ப மோடி அரசுதான் கார்ப்பரேட் கைக்கூலி என்று மீடியாக்கள் மூலம் பொய் ப்ரச்சாரம் செய்கிறது. மக்கள் உண்மையை நன்கறிவர், இதுவரை எந்த தொழிலதிபராவது தன் தொழிலை, சொத்தை விட்டு,நாட்டை விட்டு தப்பியோடி பயந்து ஒழிந்தது கேள்விப் பட்டதுண்டா? இவ்வளவு விரைவில் மோடிஜி அரசின் கிடுக்கிப்பிடியால் தானே ஓட்டமெடுத்தார்கள். மற்றவர்கள் பல ஆயிரம் கோடிகள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தியுள்ளார்களே.அறுபதாண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் பல லட்சம் கோடிகளை அரபு நாடுகளிடமும், உலக வங்கியிடமும் வாங்கிய கடனை பெரிய அளவில் அடைக்கப்பட்டு வருகிறது இப்போது. இந்த நாலரை ஆண்டுகளில் ஒத்த ரூபாய் யாரிடமும் கடன் வாங்க வில்லை.காங்கிரஸ் ஆட்சியில் பணவீக்கம் 8 க்கும் மேலிருந்தது, அதனால் அத்யாவசியப் பொருளின் விலை உச்சத்தில் இருந்தது. வெங்காயமும், பருப்பும் தங்கத்தின் விலையோடு ஒப்பிட்டு பேசினோமே அப்போது மறந்துவிடுமா அதற்குள். ஆனால் இன்று பணவீக்கம் 4க்கும் குறைவாக, எல்லா மக்களும் எல்லா அத்யாவசியப் பொருளும் ளிதில் வாங்க முடிகிறதே?வேலைவாய்ப்பு, விவசாயம், கல்வி, தொழில் என்று எங்கு பார்த்தாலும் பசுமையான வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறோமே?எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்றிருந்த காங்கிரஸ்/திராவிட ஆட்சியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, தூய்மையான ஒரு ஆட்சி கிடைத்திருக்கிறதே.சின்னச்சின்ன நாடுகளும் நம்மிடம் வாலாட்டிய தருணம் மாறி, இன்று பாகிஸ்தான், சைனா, அமெரிக்கா என்று எல்லோரும் பம்முகிறார்களே எப்படி? இதையெல்லாம் பொருட்படுத்தாமல், இங்குள்ள சில ஓனாய்களும், குள்ளநரிகளும் உழைக்கும் வர்கத்தை ஏய்த்து பிழைக்கும் வழி அடைப்பட்டதால் பரப்பும் விஷமப் பிரச்சாரங்களை இனியும் தமிழர்களாகிய நாங்கள் நம்பி மோசம் போக மாட்டோம். தினமும் 16 மணிக்கும் மேல் நாட்டுப்பற்றுடன் தன்னலமில்லாமல் உழைக்கும் மோடிஜியே எங்களின் அடுத்த பிரதமரும். ஜெயஹிந்த்.

 • sugumaran - chennai,இந்தியா

  இந்த நாட்டை சுத்தம் செய்ய நீங்கள் பல யுத்திகளை கடைபிடித்தீர்கள் பல முயற்சிகள் எடுத்தீர்கள் அதற்க்காக எங்கள் பாராட்டுக்கள். இதற்க்காகவே உங்களை இன்னும் 5 ஆண்டுகள் ஆட்சியில் அமர்த்ததா நாங்கள் உறுதி பூண்டுளோம். பாரத் மாத கி ஜெய்.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  மல்லையா, அம்பானி, நீரவ் மோடி, மெகுல் சோக்க்ஷி, அமித்ஷா இவர்களின் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் - அவர்களையும் பத்திரமாக வெளிநாடு அனுப்பி வைத்து விடுவேன் என்று.

 • Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா

  இப்படி பேசி பேசி தானே மக்களை முட்டாள் ஆக்குறாங்க அரசியல்வாதிகள்.

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  அதை நீங்க சொல்லக்கூடாது, மக்கள் சொல்லணும்.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  எந்த டுமீல் போராளிகள் கூவினாலும் இந்தியாவை இன்னும் பல ஆண்டுகள் ஆளப்போவது திரு மோடிஜியும், பாஜகவும் தான். தமிழ் நாட்டில்??? மக்களுக்கு புத்தி இருந்தால் விழித்துக்கொள்வார்கள். எல்லோரும் இந்தியாவில் சுத்தமான தண்ணீரை பருகும்போது தமிழ் நாட்டில் ஏன் உப்பு நீரை குடிக்கவேண்டும்?

 • Gideon Jebamani - Yonkers,யூ.எஸ்.ஏ

  People have trust in you- when you are going to leave your PM ஆபீஸ்?

 • Saravanan - Chennai,இந்தியா

  ஏழை தலைவன் மோதி வந்த பிறகு மின் வெட்டு தமிழகத்தில் குறைந்தது. ஏழை எளிய மக்களை தேடி சென்று வங்கி கணக்கை ஆரம்பித்து கொடுத்தனர். வெள்ள நிவாரணம், சமையல் எரிவாயு மானியம் நேரடியாக ஏழைகளுக்கு மட்டும் சென்றடைந்தது. ஐநூறு ஆயிரம் நோட்டுக்களை கள்ள தனமாக வைத்திருந்தவர்கள் அவற்றை எரித்தும், சாலையில் கிழித்து எறிந்ததும் இன்னும் பொது மக்கள் மறக்கவில்லை. கோடிக்கணக்கான நன்கொடை கொடுத்தால் தான் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற நிலை மாறி, சாமானிய மக்கள் மருத்துவர் ஆக நீட் கொண்டு வந்தார். பல மாநில எல்லைகளில் சோதனை சாவடியில் குறைத்து மதிப்பிட்டு சரக்கு வரியை ஏப்பம் விட்ட வியாபாரிகள் ஜிஸ்டி ஒழுங்காக கட்ட ஆரம்பித்தனர். ஆதார் அடையாளம் கேட்டதால் பல லட்ச கணக்கான போலி சம்பளம் செல்வது தடுக்க பட்டது. பினாமி சொத்து சட்டத்தால் திருட்டு அரசியல்வாதிகள் ஒன்றிணைத்து மோதி யை எதிர்க்க தான் செய்வார்கள். மக்கள் நாம் அவருக்கு துணை இருப்போம்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  உங்கள் தனித்துவம், உங்கள் வாழ்வாதாரம், உங்கள் நாடு , உங்கள் உரிமை, உங்கள் சுதந்திரம் - இவற்றை இழக்க வேண்டும் என்றால் பாஜக வை தேர்வு செய்யுங்கள். இந்தியா வையே அடகு வைத்துவிடுவார்கள்.

 • raja - Kanchipuram,இந்தியா

  எந்த நாட்டு மக்கள்

 • INDIAN - Mamallpuram ,இந்தியா

  ரூ '13000 கோடி கருப்பு பணத்தை பிடி‌க்க ரூ2, 00,000 கோடி செலவு செய்த ஒரு புத்திசாலி பிரதமர். இவர் மீது ஏன் நம்பிக்கை வைக்க கூடாது.

 • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

  ஆம் மீண்டும் வரமாட்டீர் என்ற நம்பிக்கை...

 • Shanu - Mumbai ,இந்தியா

  மோடிக்கு மனசாட்சி கிடையாது. நாட்டை மேலும் அழிக்க திட்டம் போட்டு விட்டார்.

 • Shanu - Mumbai ,இந்தியா

  சோமாலியா நாட்டு மக்கள்.

 • J.Isaac - bangalore,இந்தியா

  கருப்பட்டி வியாபாரி உண்மையான பெயர் என்னவோ ? மோடி என்ன பேசினாலும் ஆதரித்து எழுதி எழுதி துரோகம் பண்ணிவிடாதீர்கள்

 • Akbar Muhthar - Madurai,இந்தியா

  மக்கள் இவர் கிட்ட மயங்கி தான் இருக்காங்க. ஏன்னா நம்ம ஊரு அக்னி சிவா, ஆரூர் ரங், குருவாயூர் முகுந்தன் இவர்களெல்லாம் கேதார்நாத் கோவில் போனா பவ்யமா தோத்தி கட்டி மேலே சால்வை போட்டு, ரொம்ப குளிருச்சுன்னா இன்னொரு சால்வை போட்டு செருப்பு போடாம போவாங்க. மோடி சீனாவில் செஞ்ச ஜாக்கெட், இதே கோட் நான் அறுபது டாலருக்கு sears லே வாங்கி இருக்கேன், அந்த கெட் அப்லே வெள்ளைக்காரன் மாதிரி ஷூஸ் போட்டு கோவில் போனாரே, அதுக்கே இவர் மேலே நம்பிக்கை வைப்பாங்க.

 • வைகை செல்வன் - சென்னை,இந்தியா

  நான் எனது என்ற சுயதம்பட்டம் அடித்தவர்கள் போன கதை தெரியுமா....

 • s t rajan - chennai,இந்தியா

  60 ஆண்டுகளாக நாட்டைக் கொள்ளையடித்து தான் அமர்த்திய அரசாங்க நீதிமன்ற கைக்கூலிகள் உதவியால் தப்பிப் பிழைத்துவரும் காங்கிரஸையும் அதன் சக கொள்ளைக் கூட்டணி குடும்பக் கட்சிகளை விட மோடி 1000 மடங்கு நேர்மையும் தூய்மையும் திறமையும் தேச பக்தியும் கொண்டவர் என்பதில் ஐயமே இல்லை.

 • spr - chennai,இந்தியா

  இன்றுள்ள நிலை தாற்காலிகமானதே பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கும் பொழுதே ஆரம்பத்தில், இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்லித்தான் அமுல்படுத்தினார் ஆனால் அதிகார வர்கம் அவரை ஏமாற்றிவிட்டதோ பண மதிப்பிழப்பு வெற்றிகரமான ஒன்றாக இல்லை ஆனால் தோல்வி என்று சொல்லவும் இயலாது அவரது நோக்கங்கள் சிறப்பான ஒன்றே வாக்கு வங்கிக்காக செயல்பாட்டை நிறுத்தவில்லை மாநில தேர்தல் முடிவுகளும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளும் என்றுமே ஒரே கருத்தை பிரதிபலிப்பதில்லை சிங்கப்பூர் இதே போலவே இருந்தது பிரதமர் லீயின் நிர்வாகம் (அவரும் எதேச்சாதிகாரியே) அதனைக் கட்டுக்குள் கொண்டு வந்தது ஆனால் மக்கள் பொறுமை காத்தனர் ஏறக்குறைய கடந்த 30 - 40 ஆண்டுகால ஊழல் நிர்வாகத்திறன் இல்லாமை இவையெல்லாம் அவ்வளவு எளிதில் சரிக்கட்ட முடியாது எதிர்க்கட்சிகள் பேசுவது அரசியல் மக்களாகிய நாம் சற்று பொறுமை காப்போம் ஆதரவு தராவிட்டாலும் நம்மால் இயன்றவகையில் அரசுக்கு உதவுவோம் நல்லதோ கெட்டதோ நாம் மட்டுமே அனுபவிக்கப் போகிறோம் கார்ப்ரேட்டுகளுக்குச் சில சலுகைகள் தந்துதான் ஆகவேண்டும் பன்னாட்டு ஆதிக்கம் நம் பேரில் பல வகையிலும் தாக்குகிறது ஈடுகட்டியாக வேண்டும் இன்று எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகள் காலத்தின் கட்டாயம். அவை காங்கிரசால் தொடங்கப்பட்ட ஒன்றே செயல்படுத்தாத திறனில்லாத அவை பேசுவது நியாயமல்ல ப.சிக்கு மட்டும் மோடி போன்ற ஒரு பிரதமர் கிடைத்திருந்தால் அவரும் இதையே செய்திருப்பார்

 • Ramanathan Balakrishnan - chennai,இந்தியா

  ஒரு தடவை ரா.கா.விடம் ஆட்சியை கொடுங்கள். அதற்கு பிறகு ஜனதா கட்சி ஆட்சிக்கு பிறகு இந்திராவிடம் ஆட்சியை ஒப்படைத்தது போல நடக்கலாம்.

 • Sandru - Chennai,இந்தியா

  ஐயா இந்த நினைப்புதான் பொழப்பை கெடுக்கும். ஆனால், அது உங்கள் பொழப்பா அல்லது உங்களுக்கு ஏமாந்து வாக்களிக்க போகும் மக்கள் பொழப்பானுதான் தெரியலை.

 • Sivak - Chennai,இந்தியா

  நாட்டை துண்டாட தேச விரோதிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் ... அவர்கள் எல்லாரையும் ஒழிப்பீர்கள் என்ற நம்பிக்கையை உங்கள் மீது வைத்துள்ளோம் ...

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இவர் ஆட்சியோட கடேசி நாளுங்கள என்னிட்ட்ருக்காங்க சனங்க... THE worst PM the world has ever seen...

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  மக்களே தயவு செய்து வயது அளவில் மட்டும் வளர்ந்து உள்ள நபரிடம் இந்தியாவை ஒப்படைத்து விடாதீர், அந்த சந்தப்பர்த்துக்கு ஆக தான் கண்ணில் விளக்கு எண்ணையை விட்டு காத்து கொண்டு இருக்கிறார்கள் உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு களவாணிகளும், உஷார் ஆக இருங்க, தொலைக்நோக்குடன் வாக்கு அளியுங்கள்

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  கருணாநிதி மேலேயே நம்பிக்கை வச்ச தமிழர்களே நாம்........எனவே ...........ஊழலுக்கு நாமும் ஒரு காரணமே

 • raskoolu - மதுர,இந்தியா

  மோதி பீதிஸ், ஸ்டார்ட் தி ஒப்பாரி.

 • Suri - Chennai,இந்தியா

  Living in fools' paradise.

 • Xerox - ,

  சத்தியமாக நிச்சயமாக உண்மையாக

 • Akbar Muhthar - Madurai,இந்தியா

  ராஜஸ்தான் கோவில் எலிக்கு ஆயிரம் அடி சிலை நாகப்பாம்புக்கு ரெண்டாயிரம் அடி சிலை பசு மாட்டுக்கு மூவாயிரம் அடி சிலை இந்த புண்ணிய காரியம் எல்லாம் செய்ய மோடி திரும்ப ஜெயிப்பார்.

 • Akbar Muhthar - Madurai,இந்தியா

  கேதார்நாத் கோவிலுக்கு சீனாவில் செஞ்ச ஜாக்கெட் போட்டு போய் கும்பிட்ட ஸ்டைலுக்கே மோடி இன்னும் பத்து வருஷம் ஆட்சி செய்யணும்.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும்..... 2019 இல்

 • Raj - Chennai,இந்தியா

  எந்த அரசியல் வியாதி தான் தன் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்று ஒத்துக்கொள்வார்?

 • கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா

  மோடி மீது உள்ள நம்பிக்கை கூடியிருக்கிறது என்பதே உண்மை.... தமிழ்நாட்டில் பாய்கள் தயாரித்து அனுப்பும் மீம்ஸ்களை நம்பி பலபேர் மோடி மீது வெறுப்பில் இருப்பது உண்மை....தமிழ்நாடு என்றுமே வெறுப்பு அரசியலில் தான் ஓடுகிறது....ஹிந்தி வெறுப்பு(தமிழை வளர்க்க) ..1 % கூட இல்லாத ப்ராஹ்மணர் வெறுப்பு(ஜாதி அரசியலை வளர்க்க), அதிமுக - திமுக பரஸ்பர வெறுப்பு(திராவிட கட்சிகளை வளர்க்க)......அது போல மோடி மீதும் வெறுப்பு(பிரிவினையை வளர்க்க)....ஆனால் இந்த பாரத தேசத்தில் உள்ள மூளையை யூஸ் பண்ணும் மக்கள் மோடியை தான் விரும்புவார்கள்..டுமீளர்கள் வழக்கம் போல பொய்யான மீம்ஸ்களை , திரிபு செய்திகளை நம்பி 15 லட்சம் பிட்சை போடமாட்டாரான்னு கத்திகிட்டே திரியவேண்டியதுதான் ....

 • Chelladurai - சென்னை,இந்தியா

  மக்கள் இவரை நம்பவில்லை என்பதற்கு சமீபத்திய தேர்தல் முடிவுகளே சாட்சி... சட்டீஸ்கர் தேர்தல் முடிவுகள் வெளியானால் இவருடைய புகழ் மேலும் பல்லிளித்து விடும்...

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  ஐயா உங்கள் நோக்கம் செயல்முறை உழைப்பு ஒழுக்கம் எல்லாமே மிக அருமை..... ஆனாலும் பினிஷிங் சுமாரா போயிருது..... அதுக்கு உங்களை மட்டும் குறை கூற முடியாது....... மக்களும் மாறனும்.....

 • tamizhan - Chennai,இந்தியா

  மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் - பிரதமர் மோடி. எப்புடி டிரம்ப் மேலே மக்கள் நம்பிக்கை வச்சி, கடைசி தேர்தலில் வச்சி செஞ்சாங்களே அந்த மாதிரியா? இந்தியாவிலும், அமெரிக்காவிலும் இதுவரை அமைந்த ஆட்சிகளிலேயே மோசமான ஆட்சி தற்போதைய ஆட்சி. அதனை நிரூபிக்கும் வகையிலேயே யு. எஸ் மற்றும் கர்நாடக மக்கள் தீர்ப்பு கொடுத்துள்ளனர். வாக்கு இயந்திரம் வரும் பொதுத்தேர்தலில் இதேமாதிரி ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை பார்ப்போம்.

 • jaikrish - LONDON,யுனைடெட் கிங்டம்

  கடந்த தேர்தலில் ஓவர் build up செய்யப்பட்டதை நம்பி, காமராஜரைப் போல் எளிமை யாகவும் nethajiyai போல் தீர்க்க மாகவும் இருப்பார் என பேராசை பட்டு ..இப்போ அவங்களே தேவலை என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.

 • அப்பாவி - coimbatore,இந்தியா

  என்ன பண்றது இது மோசடியின் காலம். மக்கள் மோசடிகளை தான் நம்புகிறார்கள்.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  //மக்கள் என் மீது நம்பிக்கை: மோடி//பக்தர்கள் நம்பிக்கை தான் இன்னும் உள்ளது . பக்தர்கள் எவ்வளவு அடி வாங்கினாலும் தாங்குவார்கள் ,ஏன்னா மோடி அடிக்கும் போது இவர்களை நல்லவங்க...... என்று சொல்லிட்டார் ..ஊஊ .ஓஒ .

 • S K NEELAKANTAN - chennai 24,இந்தியா

  முற்றிலும் உண்மை. ஜந்தன் கணக்கு. ஏழை மக்கள் வங்கி கணக்கு துவக்க உதவியது. சலுகைகள் அவர்கள் கணக்கிற்கே நேராக போகின்றன. ஏழு கோடி கழிவறைகள் கட்டப்பட்டது. ஏழை மக்களுக்கு உதவியாக உள்ளது. நாலு கோடி மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இலக்கு தேதிக்கு முன்னரே முடிக்கப்பட்டுள்ளது. பதவி ஏற்கும் பொழுது இருபதாயிரம் கிராமங்கள் மின் இணைப்பு இல்லாமல் இருந்தன. இதையூம் இலக்கு தேதிக்கு முன்னரே முடிக்கப்பட்டுள்ளது. வறுமை கோட்டிலிருந்து ஆறு கோடி மக்கள் மேல் வந்துள்ளார்கள் என்று உலக நிறுவனம் ஒன்று கூறுகிறது. உலகத்தில் ஆறாவது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது. இவர் பதவி ஏற்கும் பொழுது பதிணோராம் இடத்தில இருந்தது. தொழில் ஆரம்பிக்க எதுவான நாடாக எழுபத்தியெலாம் ஸ்தலத்தில் உள்ளது. நூற்று ஐம்பதிலிருந்து இது முன்னேறி உள்ளது. முன்னர் இருந்த அரசு போல் ஊழல் மிக்க அரசாக இல்லை. காதி விற்பனையில் நூற்று பதினெட்டுக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது. காலையில் அலுவலகத்திற்கு எல்லோர் வருவதற்கும் முன்னால் வந்து விடுகிறார். இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் வேலையை முடித்து விட்டும் தான் செல்கிறார். தூங்கும் நேரம் மிக குறைச்சல். தில்லியில் அவர் அலுவகத்தில் பணி புரியும் அதிகாரிகள் கொடுக்கும் தகவல் இது. ஒரு நாள் கூட விடுமுறை எடுத்துக் கொள்ள வில்லை. பண்டிகை போன்ற லீவு நாட்களிலும் ராணுவத்தினரை சந்தித்து உற்சாகப்படுத்துகிறார். கடுமையான உழைப்பாளி. அதனால் மக்கள் நம்புப்பிகிறார்கள்.நூற்று பாத்து நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு ஏழு புள்ளி ஐந்து லட்சம் ஏக்கர்கள் பாசன் வசதிகிக்குள் வந்துள்ளன.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  //ஏழைகள் மற்றும் பழங்குடியினரை குறிவைத்தே நக்சல்கள் உள்ளனர்/ நீங்க 10000 வருடங்கள் வாழ்ந்து வரும் அவங்க இடத்தை பிடிங்கி போலி கார்பொரேட் கும்பலுக்கு போலீசை வைத்து கொடுக்கிறீர்கள் . இதை பார்த்து நெக்ஸல்கள் உள்ளே நுழைகிறார்கள்

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  உண்மை தான். காங்கிரஸின் கேவலமான ஆட்சியை பார்த்தவன் என்பதால் உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம். எனவே அடுத்த ஐந்து ஆண்டுகளில் இன்னும் சிறப்பான ஆட்சியை எதிர்பார்க்கிறோம்... நடக்கும்.

 • ஆப்பு -

  அச்சே தின் ஆனே வாலா ஹைன்...இதை 3014 ல் சொல்லி ஆட்சிக்கு வந்தோம் ஹைன்...இப்போ சொல்றோம் அச்சே தின் நாங்க ஜெயிச்சா 2022 க்குள்ள வந்துரும் ஹைன். சட்டிஸ்கரில் ஏறகனவே 100 கோடி மக்கள் பயனடைஞ்சாங்க ஹைன். நாளைக்குள்ள இன்னும் 100 கோடி பேர் பயனடைஞ்சு அமோகமா இருப்பாங்க ஹைன். அப்பிடி அமோகமா இல்லேன்னா அதுக்கு 1964 ல நடந்த நேரு ஆட்சி காரணம் ஹைன்... தீவிர வாதத்தை நோட்பந்தி மூலம் ஒழிச்சிட்டோம் ஹைன்...ஆனா நக்சல் தீவிரவாதம் ஒழியலை ஹைன். அதுக்கு காரணம் அடுத்து வரப்போற காங்கிரஸ் ஆட்சிதான் ஹைன்.

 • HSR - Chennai,இந்தியா

  பின்ன உங்க மேல நம்பிக்கை வைக்காம அந்த பப்பு மேலயா வைக்க முடியும்? இட்டிலிகாரி பையன் மேல கூட நம்பிக்கை வைப்போம் ஒருபோதும் இட்டாலி காரி பையன் மேல் நம்பிக்கை வைக்க மாட்டோம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement