Advertisement

ஜனநாயகத்திற்காக போராடுங்கள்: மக்களுக்கு ரணில் அழைப்பு

கொழும்பு : ஜனநாயகத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் நாட்டு மக்கள் தொடர்ந்து போராட வேண்டும். ஒரு போதும் போராட்டத்தை கைவிடக் கூடாது என இலங்கை மக்களுக்கு ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார்.


இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே நீக்கப்படுவதாக அக்.,26 அன்று இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்தார். பின்னர் முன்னாள் பிரதமர் மகிந்தர ராஜபக்சே பிரதமராக தொடர்வார் என அறிவித்த சிறிசேனா, நவம்பர் 16 வரை இலங்கை பார்லி.,யை முடக்குவதாக அறிவித்தார். பின்னர் நவ.,14 ம் தேதி பார்லி., கூட்டப்பட உள்ளதாக அறிவித்தார். பார்லி., கூட்டம் துவங்குவதற்கு முன் இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு முடிவு காண வேண்டும் என அரசியல் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


இந்நிலையில் பத்திரிக்கை ஒன்றிற்கு விக்ரமசிங்கே அளித்துள்ள பேட்டியில், அதிகார மாற்றம் செய்யும் அதிபர் சிறிசேனாவின் இந்த திடீர் முடிவை எதிர்த்து போராடி வருவதற்கு மக்களுக்கு எனது நன்றி. தற்போது வரை கடந்த 13 நாட்களாக இலங்கையின் ஜனநாயகம் சிறைவைக்கப்பட்டுள்ளது. இது இலங்கையின் கருப்பு நேரம். மக்கள் தங்கள் போராட்டங்களை கைவிடக் கூடாது என தெரிவித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நீதி வெல்லும்... இனவெறியர்கள்.குருதி வெறியர்கள் ஒரு போதும் வெற்றி பெற்றதில்லை

 • Paranthaman - kadappa,இந்தியா

  புத்தர் முன் பற்கள் இலங்கயில் புத்த மடத்தில் உள்ளது.

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  \\\கொழும்பு : ஜனநாயகத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் நாட்டு மக்கள் தொடர்ந்து போராட வேண்டும். ஒரு போதும் போராட்டத்தை கைவிடக் கூடாது என இலங்கை மக்களுக்கு ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார்.///. இரண்டு லச்சம் ஈழத்தமிழர்கள் தமிழர்கள் கொத்து கொத்தாக கொத்தெறி குண்டுகளால் கொத்து கொத்தாக கொல்லப்பட்டபோது ஜனநாயகம் காப்பாற்றப்பட்டதா?. அப்பொழுது இதே மாதிரி ஒரு அழைப்பை ராக்ஷச பக்சேவுக்கு எதிராக ஒரு அழைப்பை விடுத்து இருக்கலாமே?.

 • anbu - London,யுனைடெட் கிங்டம்

  இலங்கையில் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ சிங்கள பவுத்தராக இருந்தால் மட்டுமே வரமுடியும். எந்த சிங்களவன் அதிகாரத்துக்கு வந்தாலும் தமிழனுக்கு எதுவும் உரிமைகளை வழங்கப்போவதில்லை. இந்த விடயத்தில் மட்டும் எல்லா சிங்கள தலைவர்களும் ஒத்த உறுதியான கொள்கையும் ஒற்றுமையும் உடையவர்களாக இருக்கிறார்கள். அரசியல் சாசன சட்டவரைவும் அப்படித்தான் அங்கே உள்ளது. தமிழ் தலைமைகள் எதிர்கட்சியாக இருப்பது கூட சிங்களவனால் சகிக்க முடியாத ஓன்று. 1977 கலவரமும் தமிழர் மீது வன்முறையும் முதல்முறையாக தமிழர் எதிர்க்கட்சியாக வந்ததை சகிக்க முடியாததால் வந்தது. இப்போதும் அதுதான் நடக்கிறது. அரசியல் சாசனத்தை திருத்த தமிழருடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில் அதை குழப்பி திரும்பவும் ஆரம்ப நிலைக்கு செல்ல வேண்டும் என்பதற்க்காக மைத்திரி ,மகிந்த நாடகம். உலகநாடுகள் தமிழர் விடயத்தில் உன்னிப்பாக கவனிக்கும் வேளையில் திசைதிருப்பவே இந்த நாடகம். அத்துடன் ஐநா போர்க்குற்ற விசாரணைக்கு எந்தவொரு சிங்களவனையும் காட்டிக்கொடுக்க ( எதிரியாக இருந்தாலும் கூட) எந்த சிங்கள தலைவனும் விரும்ப மாட்டான். ராஜபக்சே குடும்பம் காப்பாற்றப்படவேண்டும் என்பதற்க்காகவும் தமிழருடன் இணக்கமாக அரசியல் சாசன மாற்ற தீர்வை நோக்கிய நகர்வை சிதைப்பதற்க்காகவும் அரங்கேறும் காட்சிகள் தான் இப்போது நடப்பவை. இதில் சீனாவின் அனுசரணையும் ஆசீர்வாதமும் உண்டு. மக்கள் அரசியல் தலைவர்கள் மீது கொள்ளும் ஆத்திரத்தை இந்தியா மீது திருப்பவே இவர்கள் எல்லோரும் அண்மையில் இந்தியா வந்து போனதும், அதிபரை கொல்ல சதி செய்தது என்ற கட்டுக்கதையும். இப்போது அரசியல் கலவரம் என்று வந்தாலும் அது தமிழருக்கு எதிராகவே திரும்பும் ,திருப்பி விடப்படும் . எதுவானாலும் பாதிப்பு என்னவோ தமிழனுக்குத்தான். முருகன் பாட்டனா? முப்பாட்டனா? ஆண்டாள் யார்? மாணிக்கவாசகர் யார்? என்று ஆராய்ச்சி செய்யும் சீமான் ,குருமா ,தெருமுருகன் காந்தி ,வைகோ இவர்கள் இந்த இரகசியத்தை ஐநாவுக்கு தெரியப்படுத்தி இந்தக்குட்டையில் தமிழருக்கு ஒரு தீர்வை பெற முயற்சி பண்ணலாமே. சும்மா மூலைக்குள் முடங்கி நின்று முக்காமல் உருப்படியாக ஏதும் செய்யலாமே. ஆனால் தமிழன் எபபோதுமே இருக்கிறதை விட்டு விட்டு பறக்கிறதை பிடிக்க முயல்பவன்.

 • Muruga Vel - Chennai,இந்தியா

  சீமான் திருமா ..வைக்கோ இவர்களை அழைத்துக் கொண்டு போராடுங்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement