Advertisement

பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் பெயர் மாற்றப்படும்

ஐதராபாத் : தெலுங்கானாவில் அதிகப்படியான இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும். மாநிலத்தின் வளர்ச்சி தான் எங்களின் முதல் நோக்கம். அடுத்தபடியாக ஐதராபாத் பெயர் பாக்யநகர் என மாற்றப்படும் என பா.ஜ., எம்எல்ஏ ராஜா சிங் தெரிவித்துள்ளார்.தெலுங்கானாவில் டிசம்பர் 7 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பா.ஜ., எம்எல்ஏ.,வான ராஜா சிங் கூறுகையில், 1590 ல் அலி குதுப் ஷா பாக்யநகர் என்ற பெயரை ஐதராபாத் என மாற்றினார். பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் மீண்டும் பாக்யநகர் என பெயர் மாற்றப்படும். இதே போன்று செகந்திராபாத் மற்றும் கரீம்நகர் ஆகியவற்றின் பெயர்களும் மாற்றப்படும்.முகலாயர்கள் மற்றும் நிஜாம்கள் காலத்தில் மாற்றப்பட்ட பெயர்களும் தெலுங்கானாவிற்காகவும், நாட்டிற்காகவும் போராடியர்களின் பெயர்களாக மாற்றப்படும் என்றார். முன்னதாக குஜராத் துணை முதல்வர் நிதின் படேல், ஆமதாபாத் நகரம் கர்னாவதி என மாற்றப்படும் எனவும், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், பைசாபாத் நகரம் அயோத்யா என பெயர் மாற்றப்படும் எனவும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (118)

 • Ajit Kumar - Chennai,இந்தியா

  பேரை மாற்றுவதால் என்ன லாபம், முதலில் வேலை வாய்ப்பு அதிக படுத்துங்கள், வறுமையை வொளியுங்கள், தேவை இல்லாததை செய்வதால் மக்களுக்கு என்ன லாபம்

 • Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா

  செய்தால் நல்லது செய்வார்களா?

 • Anandan - chennai,இந்தியா

  ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லைனு தெரிந்ததால்தான் இப்படி ஒரு வாக்குறுதி.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அவசியம் பேர்களை மட்டும் மாற்றி சாதனையாக போட்டுக்கொள்ளுவார்கள்...

 • jagan - Chennai,இந்தியா

  ஜும்மா மசூதி பெயரையும் சேர்த்து மாத்துங்க...ராவுத்தர் பங்களா என்று மாத்தலாம்

 • Senthil kumar - coimbatore,இந்தியா

  அந்நியர்கள் விட்டுச்சென்ற மிச்சத்தின் எச்சங்களை தூக்கி எறிவது நல்லதே, ஆனால் இடத்தின் பெயரை மாற்றியுடன் நாட்டில் பாலரும் தேனருமா ஓடப்போகிறது ? அரசியல்வாதிகளின் சிந்தனை நாட்டின் மற்றும் மக்களின் வளர்ச்சின் மேல் இருந்தால் நல்லது.

 • Gnanam - Nagercoil,இந்தியா

  இந்தியமண்ணில் பழங்கால பெயர்கள் எப்போது, எதற்காக மாற்றப்பட்டன என்பதை கண்டறிந்து, எல்லாவற்றையும் ஒரேயடியாக மாற்றி மாற்றிவிடலாமே

 • Anandan - chennai,இந்தியா

  சிலை வைக்கிறது இருக்குற பெயரை மாத்துறது, காவி வர்ணம் பூசுறது இது மட்டும்தான் அரசு செய்ற வேலைனு நினைச்சுட்டாங்க போல.

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என்று பெயராக்கம் செய்தபோது ஏன் யாருமே கொதித்தெழவில்லை? அந்நியர்கள் விட்டுச்சென்ற மிச்சத்தின் எச்சங்களை தூக்கி எறிவது நல்லதே

 • Anbu -

  Great move ....people will realize the real freedom fighters....

 • ஆப்பு -

  நாம் சாப்பிடும் பதார்த்தங்களில் வந்தேறிகள் பெயர்கள் அதிகமாயிட்டுது. அல்வா, ஜாங்கிரி, ஜிலேபி, பிரியாணி, புல்கா, ரைத்தா, குஸ்கா - கேக்கவே சகிக்கலை. அதுக்கெல்லாம் பாரம்பரிய பெயர்களை வெக்கணும். அது என்ன? பாதுஷாவா? உவ்வே....நமது பாரம்பரிய வல்லுனர்கள் சரி செய்ய கேட்டுக் கொள்கிறேன்.

 • s t rajan - chennai,இந்தியா

  முதலில் நம் நாட்டை எல்லா மொழிகளிலும் "பாரதம்" அல்லது "ஹிந்துஸ்தான்" என்று அழைக்கச் செய்யுங்கள்.

 • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

  பழைய சாஸ்திரத்தின் படி பெயர் மாற்றினால் செல்வம் கொழிக்குமா? என்ன செய்யனுமோ செய்யுங்கள்.. காலம் பதில் சொல்லும்..

 • nicolethomson - bengalooru,இந்தியா

  நடக்குற வேலைய பாருங்க

 • chander - qatar,கத்தார்

  அகமதாபாத் பெயரை முதலில் மாற்றுங்க பார்க்கலாம்

 • Mithun - Bengaluru,இந்தியா

  நம் முன்னோர்கள் ஒரு நகரத்திற்கு சாஸ்திர விதிகளின் படி ஆராய்ந்து பெயர் சூட்டினார்கள், அதனால் நமது நாடு உலகிலேயே செல்வம் கொழிக்கும் நாடாக விளங்கியது. வெளி நாட்டவர்கள் படையெடுத்ததே நம் செல்வ செழிப்பை கண்டு தான். எப்பொழுது பெயர்கள் மாற்றப்பட்டதோ அப்பொழுதில் இருந்து நம் நாட்டில் பஞ்சம், பட்டினி துடங்க ஆரம்பித்தது. எனவே பழைய சாஸ்திர பெயர்கள் மாற்றப்பட்டால் செல்வம் கொழிக்கும் நாடாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்க பாரதம்.

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  டெல்லி இன் பெயரை இந்திரப்பிரஸ்தம் என்னும் வரலாற்று பெயரை மாற்ற தயங்குவது ஏன் ஒருவேளை இந்திராவை நியாபகப்படுத்தும் என்பதாலா

 • Ramesh - Bangalore,இந்தியா

  Many arabic religion people taking as usual double standards...Last 75+ years Indian history is totally distorted by only one family along with family run parties and they have projected that because of them only people have got Freedom, Guardian of so called secularism etc by hiding many great freedom fighters because of whom Muslim Invaders and British invaders were not able to migrate fully / left the country...Arabic religion people are so inclined towards them...If a country does not know its history, it is almost dead which was happening pre Independence /post independence ...It is required to know our culture ...If Saudi's cruel dictator is killing in the name of corruption as well , giving freedom in the name of female basic rights people used to celebrate eventhough they are totally dictators...But people will speak a LOT in India...Double Standards...

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  கண்டிப்பாக மாற்ற வேண்டும். அவமானச் சின்னங்களாக இன்னும் இருக்கக்கூடாது. டில்லியும் இந்த்ரப்ரஸ்தம் ஆக வேண்டும். இங்கே பழைய பெயர்களை மறுபடியும் வைக்கும் சாதாரண பெயர்மாற்றத்துக்கே கொந்தளிக்கிறவர்கள், சில ஆண்டுகளுக்கு முன் உலக புகழ் பெற்ற அழகான பிரமாண்டமான பாரம்பரிய பாமியான் புத்தர் சிலையை வெறி கொண்டு தலிபான்கள் வெடி வைத்து தகர்த்த போது சந்தோஷப்பட்டார்களே.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  நல்ல விஷயம் பாக்கித்தானிலும் ஹயதாராபாத் என்ற நகரம் உள்ளதாமே இனி டெலெங்கானாவில் இருந்து தாடியோடு அயல்நாடு செல்பவர் பாகிஸ்தான் பயங்கரவாதியோ என அயல்நாட்டவர்க்கு எழும் ஐயம் தீரும்

 • நக்கல் -

  நமது பழைய பெருமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும்.. நமது நாட்டுக்காக உண்மையாக உழைத்தவர்கள் பெயர்களை வைக்கவேண்டும்... நம்மை அடிமைப்படுத்தியவன் பெயர்கள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும்.. காலம் வரும்போது ஈவேரா, அண்ணா போன்ற திராவிடத் தலைவர்கள் பெயர்களும் அழிக்கப்பட வேண்டும்.. இதை எதிர்ப்பவர்கள் அனைவரும் அடிமைகள், தேசத்துரோகிகள்...

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  பெயரை மாற்றினால் என்ன நன்மை வந்து விடப்போகிறது என்று சொல்கிறார்கள் இங்குள்ள சிலர். உங்களுக்கு வீடு ஒன்று இருக்கிறது. அதில் ஒரு வழிப்போக்கன் வந்து உங்கள் வீட்டை மிரட்டி ஆக்கிரமைப்பு செய்து அவன் வீடாக்கி கொள்கிறான். இப்பொழுது உங்கள் வீட்டு குடும்ப தலைவனாக அந்த வழிப்போக்கன் தலைமை வகிக்கிறார். இப்பொழுது என்ன செய்வீர்கள்?. அப்படியே விட்டு விடுவீர்களா?. அந்த வழிப்போக்கனையே குடும்ப தலைவராக ஏற்றுக்கொள்வீர்களா?.

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  மைதீன், உங்க தாய் நாடான ஈரான், மற்றும் அரபு நாடுகள் நீங்கள் சொல்லும் எரிபொருள் இந்தியா போன்ற நாடுகளுக்கு விற்றால் தான் அவர்களுக்கு பொழப்பு, பின்ன கிடைக்கிற எல்லா எண்ணையை குடிக்கவா முடியும்??? சிறு பிள்ளை தனமாக உள்ளது உங்கள் கருத்து. கொஞ்சம் வருடத்தில் எல்லாம் எலக்ட்ரிக் மையம் ஆகும் போது எவனும் மதிக்க போவதில்லை உங்கள் தாய் நாட்டை

 • HSR - Chennai,இந்தியா

  எல்லா அரபு நாட்டு பேரையும் மாத்தி நம்ப ஆளுங்க பேர இல்லேன்னா அவுங்க மாத்துரதுக்கு முன்னாடி இருந்த பேர வையுங்கப்பா..இது இலண்டன் துரைங்க பேருக்கும் கண்டிப்பா செய்யணும்..

 • Anand G - Chennai,இந்தியா

  நான் பெயர் மாற்றும் முயற்சியை வரவேற்கிறேன், அதே சமயம் மக்கள் நல வாழ்வுக்கான திட்டங்களையும் அறிவித்தால் நன்றாய் இருக்கும், பிஜேபி மக்கள் நலத்தை விட இந்து மத மீட்பைத்தான் பெரிது படுத்துகிறது

 • Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா

  Mr. mideen please mind your words, I am not supporting BJP or name change for any city. Don't say India is begging for petrol to Iran.. then what you say about Pakistan, they are begging for everything to China and U.S. Countries like Iran , Afghanistan begging for pulses to India

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  உருது பேசும் வந்தேறி துருக்கியர்களான மொகலாயர்களின் எந்த ஒரு மிச்ச சொச்சமும், சொச்ச மிச்சமும் இம்மண்ணில் இனி இருக்கக்கூடாது. அது இம்மண்ணனின் அவமான சின்னங்கள்.

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  சிலை திறப்பு, பெயர் மாற்றம் என்று இப்படி பல நிகழ்வுகள் இந்தியாவில் நடப்பதை பார்த்தால், இந்த நாட்டை கொள்ளை அடிக்க வந்த இனங்களுக்கு இதை பார்த்தால் எரியத்தான் செய்யும். அப்படி என்றால் எந்த நாட்டு சிலை அவர்களுக்கு பெருமையை தருகிறதோ, எந்த நாட்டு பெயர் அவர்களுக்கு பெருமையை தருகிறதோ அந்த நாட்டுக்கே அவர்கள் சொல்லட்டுமே. யார் வேண்டாம் என்றது?.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  காலத்தின் கட்டாயம்ன்னு எடுத்துக்க வேண்டியதுதான்....... படித்தவர்கள் குறைவான நாட்டில் அனைத்து கட்சிகளுக்கே உணர்வுகளை தூண்டித்தான் அரசியல் செய்கின்றன....... தல நோம்பு கஞ்சி குடிச்சது, ராகுல் சிவ பழம் ஆனது, இவிங்க பேர மாத்துவேன்னு எல்லாமே வளர்ச்சி அரசியல் அல்ல..... உணர்ச்சி அரசியல்...... இது எங்கள் தலைமுறையில் மாறனும்....மாறும்.....

 • Karikalan Govind - Chennai,இந்தியா

  இவையெல்லாம் சுதந்திரம் பெற்ற சில வருடங்களிலேயே செய்திருக்க வேண்டும்.மோடி யின் அரசு முன்னேற்ற திட்டங்ங்களை நிறைவேற்றி க்கொண்டே இவற்றையும் செய்கிறார். இரண்டுமே முக்கியம் தான்.

 • S.Ganesan - Hosur,இந்தியா

  இது தேவை என்றே தெரியவில்லை. இது போல் ஏற்கனவே பல மாநிலங்களில் செய்துள்ளார்கள். ஊர்களின் பெயர் மாற்றத்தினால் என்ன பெரிய நன்மை ? தெரிந்த பெயரை மற்றும் போது குழப்பம்தான் மிஞ்சும். சரித்திரப்படி ஆதியில் இருந்த பெயரை வைப்பதால் சரித்திரம் திரும்புமா ? அப்படியானால் டெல்லி என்ற பெயரை இந்திரப்பிரஸ்தம் என்று மாற்றுவார்களா ? போய் வேறு வேலையை பாருங்கள்

 • sahayadhas - chennai,இந்தியா

  சமீபத்தில் சிலை, பெயர் மாற்றம், நாடு சந்தித்தல், கலவரம் என்று தான் முன்னேறி கொண்டு இருக்கிறது. அடிப்படை முன்னேற்றத்திற்கான முயற்சிகள் அனைத்தும் மந்த நிலை .

 • matheen - chennai,இந்தியா

  HSR...முதல்ல சொம்படிக்கறத நிறுத்து..உன்னோட bjp என்ன பண்ணாலும் கடைசில இரானிடம் தான் கை ஏந்தனும் பெட்ரோலுக்கு...போவியா

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  ஐயா எல்லாவற்றையும் விட கல்வி என்று ஒன்றை கல்வியாக மாற்றவும், இன்றைக்கு கற்றோர் ஆங்கிலத்திலும் கல்லாதோர் தங்கள் தாய் மொழியிலும் உபயோகப்படுத்த கூடாத வார்த்தைகளை பயன்படுத்தி , நாகரீகத்தையும், மனித நேயத்தையும் சீரழிக்கும் நிலையை மாற்றி மீண்டும் இந்திய மாண்பினைக் காக்கும் நிலைக்கு கொண்டு வந்தால் நல்லது, வந்தே மாதரம்

 • rambo - Manamadurai,இந்தியா

  டாலர் விலை ஏறுனது அவமானமா தெரியல.. ஜி எஸ் டி யால கோடிக்கணக்கான சிறு தொழில்கள் நசிந்தது அவமானமா தெரியல.. ரபேல் ஊழல் அவமானமா தெரியல.. இஸ்லாம் பேரு மட்டும் தான் அவமானமா தெரியுது.. நீர் ஒரு மங்குனி அரசாங்கம் என்பதை மணிக்கொருமுறை அறிவிக்கிறாய் பா ஜ க அரசே..

 • raskoolu - மதுர,இந்தியா

  சரியா சொன்னீங்க Tamil Vaanan. ரொம்ப நல்லாவே சொல்லிருக்கீங்க.

 • Mal - Madurai,இந்தியா

  When we Hindus though actually minorities in the world have magnanimously given a lot of our lands, a share from our temple funds, the administration of our temples , educational rights for (so called minority and yet majority in the world ) non hindus, right to start colleges, schools, scholarships for students, government salary for other non Hindu staff recruited by non Hindu educational institutions etc etc.... Won't you people (abrahamic religions) give us even the basic naming rights for our traditional cities? You all claim that it's not going to improve the country. Even for a simple, negligible issue like this with which we are not going to eat away our country's money can't other religions be tolerant. Just try practicing tolerance... You will find out how difficult it is to have a country and yet we have no administration rights of our own temples, have to listen to some stupid judgements by judges, who didn't even bother to think about the intention of the person who filed the case in other religious matters, a government which is hell bent on implementing it inspite of peaceful protests... And the victims are jailed without any reason... And yet and yet the minority Hindus in their only one land don't have any human rights activists running for them, no media to voice their opinions.... It's ok.... Let us have atleast our cities renamed...... Media might have debates for renaming cities but will be silent on the plight of Hindus in jail for a religious cause.

 • H Jothi - Delhi,இந்தியா

  மீண்டும் புதிய இந்தியா பிறக்கும்

 • Mal - Madurai,இந்தியா

  Good and bold move by BJP.... There cannot be an Ayodhya or Karnavati or Shyamala or Bhagya nagar in any part of the world. Only in India, we can have all these names. Let them be unique and stand up for India and its great heritage. We, Hindus, the minority group in the whole world want to have our own traditional names in our country. Kindly all majority religions of the world and their followers in India, be tolerant towards the minority Hindus in India (we have been tolerant for many many years... Why don't you majority religions of the world be a little tolerant now, atleast with the names).

 • balakrishnan - Mangaf,குவைத்

  இந்தியாவில் உணமையான முகம் உள்ள ஒரே கட்சி BJP மட்டும்தான் .

 • அசால்ட்ஆறுமுகம் -

  தெலுங்கானா மக்கள் இந்த ஒரு விஷயத்திற்காகவே பிஜேபிக்கு வாக்களிக்க வேண்டும்

 • Varatharaajan Rangaswamy - Tiruchirappalli ,இந்தியா

  வளர்ச்சிப்பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு, நாம் அடிமைப்பட்டிருந்த காலத்தில் நம் நாட்டின் மீது திணிக்கப்பட்ட, ஆக்கிரமிப்பாளர்களால் அடையாளம் மாற்றப்பட்ட இடங்களின் பெயர்களையும் மாற்ற வேண்டியது மிகவும் அவசியம் நமது நாட்டின் உண்மையான சரித்திரத்தை, நமது இளைய சமுதாயத்திற்கு சரியான கண்ணோட்டத்தில் பயிற்றுவிக்க வேண்டும் சரித்திரம் படிப்பதன் நோக்கமே, கடந்த கால அனுபவங்களிலிருந்து நாம் எவ்வகையான பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று உணர்த்துவதுதான்

 • இந்து தமிழன்.. - Chennai,இந்தியா

  மொகலாயர் கால பெயர்கள் அடிமை சின்னங்களின் அடையாளம்..

 • Garuda - Hyderabad,இந்தியா

  அருமை ... எதுக்கு பாரீன் பெயர் வைக்கணும் ... பெயர் மாற்றுவது அவசியம்

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  அவமான சின்னங்களை நாம் ஏன் தாங்கி இருக்க வேண்டும்? பக்தியார் கில்ஜி என்பவர் தலைமையில் பிகாரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகம் அழித்து இடித்து தள்ளப்பட்டு, தீயிட்டு கொளுத்தி அழிக்கப்பட்டது. ஆனால் கொடுமை என்னவென்றால் ஒருவர் நாளந்தா பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்றால் பக்தியார் கில்ஜி என்கிற ரயில் 🚊 நிலையத்தில் இறங்கித் தான் செல்ல வேண்டும். கொடுமை. ஆனால் இந்த சரித்திர நிகழ்வுகள் பாடங்களில் எங்கும் இல்லை. இந்தியா கடந்த 800 ஆண்டுகளாக மாறி மாறி அன்னிய படைகளால் தாக்கப்பட்டு விஞ்சியது அவமான சின்னங்கள் தான். குதுப்மினாருக்கு அருகில் இடிந்த நிலையில் சுவர் மட்டுமே இருக்கும் கோவிலில் தான் சம்யுக்தா-ப்ருதிவிராஜ் திருமணம் நடந்தது. இது எவ்வளவு பேருக்கு தெரியும்? குதிப்மினாருக்கு கொடுத்துள்ளேன் மரியாதை ப்ருத்விராஜ் கோவிலுக்கு இல்லை.

 • Indhuindian - Chennai,இந்தியா

  An election promise that could be uted soon after election and with ease. The history has to be rewritten the deliberate distortions by imperialist who were interested in looting the country by their divide and rule policy. People should be proud of their heritage and restoration to old names is the first step in the right direction

 • J.Isaac - bangalore,இந்தியா

  முதலில் மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த முயற்சி செய்யுங்கள் . சிலை வைத்தும் ஊர் பெயரை மாற்றியும் நீங்கள் தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்து மக்களை ஏமாற்ற நினைத்தால் ஏமாந்து போவீர்கள் .

 • பிரபு - மதுரை,இந்தியா

  பெயரை மாத்தினா எல்லாருக்கும் சோறு கிடைச்சுருமா? கல்வி சுகாதாரம் கிடைச்சிருமா? திருட்டு, ஊழல் ஒழியுமா? இதெல்லாம் செய்வோம்ன்னு சொல்லி தைரியமா ஒட்டு கேளுங்க. மக்களை உசுப்பேத்தி உசுப்பேத்தி மனுஷனுக்கு மனுஷனை பிரிச்சி.....இதெல்லாம் நல்லாவா இருக்கு? வரலாற்று சின்னங்களை வரலாற்று சின்னமாக மாத்திரம் பாருங்க.

 • Indhiyan - Chennai,இந்தியா

  அதெல்லாம் இருக்கட்டும். லோக் பால் எப்போ அமைப்பீங்கன்னு சொல்ல முடியுமா?

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  பாத் என்னும் சொல்லே இனிமேல் இந்தியாவில் இருக்கக்கூடாது ... கர்நாடகாவில் இருக்கும் உணவு பதார்த்தங்கள் கேசரி பாத் , சோவ்சோவ் பாத் , பிஷி பேலா பாத் , வாங்கி பாத் போன்றவற்றின் பெயர்களையும் மாற்றுங்கள் ... குளிக்க போறவன்கூட "பாத்" எடுக்க போகிறேன் என்று சொல்லக்கூடாது

 • matheen - chennai,இந்தியா

  இந்தியா பெயரை கோவிந்தா என்று மாற்ற வேண்டும்.. இப்படிக்கு anti indian

 • Sri Ra - Chennnai,இந்தியா

  வேற வேலை இல்லை

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  This party is only interested such types of very easy going ways of changing the names of the great cities for their political gain and doing nothing for the betterment of the people who voted them into power at this moment. This party will get correct reply from the people in coming elections without any doubt.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  எல்லா மொகலாயர் கால அரபி பெயரையும் நீக்குங்க அவமான சின்னங்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement