Advertisement

இனி யார் வேண்டுமானாலும் இ வாகன சார்ஜ் ஏற்றும் நிலையம் துவக்கலாம்

புதுடில்லி : இனி தனிநபர்கள் யார் வேண்டுமானாலும் இ வாகனங்கள் எனப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் துவக்கலாம் என்ற முறை விரைவில் கொண்டு வரப்பட உள்ளது.


எலக்ட்ரானிக் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் துவக்குவதற்கு மத்திய அரசு இதுவரை எந்த தகுதியும் நிர்ணயிக்கவில்லை. இதனால் இந்த சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் துவங்க உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டியதில்லை. அதே சமயம் நாட்டில் இயங்கும் எலக்ட்ரானிக் வாகன சார்ஜ் ஏற்றும் மையங்களின் தரம் மற்றும் செயல்பாடுகளை கண்காணிக்க மத்திய மின்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


வாகன தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் மகேந்திரா அண்ட் மகேந்திரா, டாடா மோட்டார்கஸ் போன்ற நிறுவனங்களும், ஓலோ, உபர் போன்ற வாடகை கார் இயக்கும் நிறுவனங்களும் நாடு முழுவதும் எலக்ட்ரானிக் வாகன சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன. சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் வைத்துள்ள நிறுவனங்களுக்கு மின்சார விநியோகம் செய்வதற்கான கட்டணத்தை மாநில அரசு நிர்ணயிக்க உள்ளது.


ஒவ்வொரு 3 கி.மீ.,க்குள் ஒரு சார்ஜ் ஏற்றும் நிலையத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. தனிநபர்கள் யார் வேண்டுமானாலும் உரிமம் பெறாமலேயே சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்கலாம் என அரசு கூறி இருப்பதன் மூலம் சிறு தொழில்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புக்கள் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


டில்லி, புனே, மும்பை, பெங்களூரு, ஆமதாபாத் உள்ளிட்ட முக்கியமான 9 நகரங்களில் சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்கும் பொறுப்பு பொதுத்துறை நிறுவனங்களான என்டிபிசி, பவர் கிரிட் கார்ப்பரேஷன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இது தவிர போக்குவரத்து நெரிசல் மிகுந்த 11 நெடுஞ்சாலைகள் கண்டறியப்பட்டு, ஒவ்வொரு 25 கி.மீ.,க்கும் ஒரு சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (24)

 • Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா

  எல்லா மாநிலத்திலயும் பேட்டரி கார் அனுமதி உண்டு ஏன் புதுசேரி / தமிழ்நாடு எத்தனை கிமி தூரம்? அங்கே அனுமதி உண்டு. இங்கே இல்லை.

 • Balaji Elumalai - chennai,இந்தியா

  தரமான உபகரணங்களும் வெளிப்படைத்தன்மையும் உண்மையான பொதுவுடமையும் இதில் அமைந்தால் உண்மையில் முன்னேற்றப் பாதையில் ஒரு மைல் கல்லாக இருக்கும்

 • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

  எப்படியாவது பேட்டரி கார் கொண்டுவந்து அரபியை ஒரே மாட்டா அழிக்கனுமினிட்டு அமேரிக்கா காரன் இருக்கான். அதனால அமெரிக்க கார்போரேட்டு எல்லாம் சகாய விலையில சார்ஜு கொடுப்பானுவ. டிரம்பு மோடி ரெண்டுபேரும் சேந்து நம்ம தலைமுறைக்குள்ள அரபி அப்புறம் அரபி அடிமை எல்லாத்துக்கும் ஆப்பு வெச்சா சுகமா இருக்கும். ஐயப்பன் மேல கைவெச்சாங்க இல்ல. தொலைஞ்சாங்க.

 • ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) - கரூர்,இந்தியா

  பொருத்திருந்து பார்ப்போம்...

 • ஆப்பு -

  என்னவோ யார் வேணுமின்னாலும் டீ கடை தொறக்கலாம்கற ரேஞ்சுல இருக்கு. நாம கடன வாங்கி சார்ஜிங் டேசன் போடுவோம்....முன்னாடி, பின்னாடி, மேலே, கீழே எல்லாம் கார்ப்பரேட்கள் கடை போட்டு , 5% முதல் 25% தள்ளுபடி குடுத்து, நம்மளை படுக்க வெச்சுடுவாங்க. இப்ப அதைத்தானே அமேசானும், ஃப்ளிப் கார்ட்டும், பே டி எம்மும் செய்யுதுங்க. பின் குறிப்பு அமேசான் - ஜெஃப் பீசோ, ஃப்ளிப் கார்ட் - வால் மார்ட், பே டி எம் - வாரன் பஃபெட் . மூணு பேரும் அமெரிக்க கார்ப்பரேட்கள். அவிங்க தான் காசு பாக்குறாங்க. இடைத் தரகர்களாக விற்போர், வாங்குவோர் மத்தியில உக்காந்து காசு பாக்குறாங்க. மஸ்தான் இந்திய இடைத் தரகர்கள் கோடிக் கணக்கானவர்களை ஒழிச்சுட்டு ஒரு மூணு அமெதிக்க கார்ப்பரேட் தரகர்களை வளர்த்து வுட்டிருக்காரு. மிகப் பெரிய சாதனை ஹைன்.

 • Murugan Solaimalai -

  Please be cautious. In the world there is no matured technology available as on date to fuel vehicles. To charge SWIFT like a car to travel 150Km need at least 35 units of power. If you want to charge this car within one hour you need 50HP equivalent power. In the home, charging at 2Kw (same power like bathroom heater) will take full 24 hours. Remember, this is to drive 150Km a SWIFT car. In my opinion as on current technology, this will be an utter failure. Not only in India, but in the whole world. Technology need to be improved further to be practical.

 • MANI - Karaikudi,இந்தியா

  இந்த தொழில் மூலம் வருமானம் குறைவாக தான் கிடைக்கும். அம்பானி போன்ற முதலைகள் இதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். மேலும் மாநிலங்கள் மின்சார வரியை போட்டு தீட்டி விடுவார்கள். சொற்ப லாபம் தான் கிடைக்கும். நூறு ஏழைகளை தேர்ந்து எடுத்து அவர்களுக்கு மானியம் கொடுத்து ஓரு பெட்ரோல் பங்க் அமைத்து கொடுங்கள் பாப்போம். நன்றி.

 • yaaro - chennai,இந்தியா

  சோலார் சார்ஜிங் எல்லாம் சரிப்படாது.. பேனல் அவுட்புட் பத்தாது ..440 வோல்ட் மற்றும் அதிக ஆம்ப் வெச்சு சார்ஜ் பண்ணாதான் வேகமா சார்ஜ் ஆகும் ...சோலார் எல்லாம் ட்ரிக்கிள் சார்ஜ் ரேஞ் தான்...ரொம்ப ஸ்லொவ்

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  ஒரே ஒரு காமிராவை எடுத்துக்கொண்டு ரோட்டில் சென்று புகைப்படம் எடுத்தால் தெரியும் யார் யார் எல்லாம் எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்று? கடற்கரைக்கு சென்றால் கப்பம் கட்ட கட்டாயப்படுத்தும் கடற்கரையின் சொந்தக்காரர், வீடுகள் இருக்கும் பகுதியில் பணியில் இருக்கும் நடுத்தரகர்கர்கள் காவலர்களுக்கு புகார் கொடுக்க அடுத்த நிமிடம் சிட்டாய் பறந்து வந்து மடக்கும் துறையினர் ??? வேடிக்கைக்காக ஒரு காமிராவை திறந்தாலே இவ்வளவு கொடுமை என்றால், வியாபாரம் என்று வந்தால்/??? வந்தே மாதரம்

 • San - Madurai ,இந்தியா

  That’s modi move

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  கேட்பதற்கு நன்றாக இருக்கிறது, விடுவார்களா நம்மவர்கள், இந்த இடத்திற்கு கமர்ஷியல் சொத்து வரி, தண்ணீர் மற்றும் கழிவுநீர் கமர்ஷியல் , அந்த வியாபாரம் செய்யும் இடத்திற்கு கமர்ஷியல் வரி, மின்சாரத்தையும் கமர்ஷியல் வரி , பிறகு முதல் போட்டவனுக்கு என்ன இருக்கும், ??? இது தவிர வீட்டு வாசல், தெரு முனை, ஆங்காங்கு நாய் ஒண்ணுக்கு போகும் இடமெல்லாம் வைக்கப்பட்டு இருக்கும் அவரவர் ஜாதி, மத , சங்க , அமைப்பிகளின் கொடிகளின் தலைவர்கள், தொண்டர்களின் பிறந்த நாளுக்கு மொய்.... இருக்கவே இருக்கிறது சொன்னால் உள்ளே போட்டு விடுவார்கள் அந்த துறைகள் ஒன்றல்ல இரண்டல்ல பல .... ஒருவன் வியாபாரம் செய்ய முன்வந்தால் இத்தனை துறைகளுக்கு லஞ்சம், வரி கட்டடவேண்டும், இதற்க்கு அந்த தொகையால் பங்க்கில் போட்டால் வட்டியில் குடும்பம் நடத்தலாமே ? முதலில் இந்த துறை ரீதியான ஆக்கிரமிப்புகளை GST வரியைப்போன்று ஒரே வரியாக மாற்றினால் மட்டுமே தனியார்கள் வியாபாரம் செய்ய முடியும். வந்தே மாதரம்

 • Sriram Rajanbabu - Chennai,இந்தியா

  வரவேற்கத்தக்கது. ஆனால் மாநில அரசு மின்சார கட்டணத்தை தங்களுக்கு வேண்டிய முறையில் மற்றம் செய்தால் இந்த திட்டத்தில் பெரிய சுணக்கம் ஏற்படும். ஆகவே பெட்ரோல் டீசல் போல மாநில அரசுக்கு மத்திய அரசே கட்டண நிர்ணயம் செய்தல் வேண்டும். இது மட்டும் அல்லாமல், சோலார் தகடுகளை மூலம் மின்னேற்று முறையை அதிகம் ஊக்குவிக்க வேண்டும். அதற்க்கு மானியம் அளிக்க பட்டால் பலர் இந்த துறையில் சிறி குறு தொழில் மூலம் பயன் பெறுவார்.

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை முதலில் உபயோகத்திற்கு கொண்டுவரவேண்டும் ... ஆனால் அரசு அவ்வளவு சீக்கிரம் கொண்டுவராது ... ஏனென்றால் பெட்ரோலிய பொருட்களின்மீது கிடைக்கும் பல ஆயிரம்கோடி வரியை இழக்க அரசு தயாராக உள்ளதா?... நாற்பது ரூபாய்க்கு விற்க வேண்டிய பெட்ரோலை 85 ரூபாய்க்கு விற்று இந்த அரசுதான் லாபம் சம்பாதிக்கிறது .. . அப்படி மின்சார வாகனங்கள் வந்தால் , சோலார் பேனல் அமைத்து வீட்டிலேயே சார்ஜ் செய்யலாமே?

 • Ramalingam Shanmugam - mysore,இந்தியா

  well done modi people shd understand the real growth of india

 • ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா

  மின்சார உற்பத்தியே தமிழ்நாட்டில் இருக்க கூடாதாமே

 • HSR - Chennai,இந்தியா

  பெட்ரோலுக்கு ஸ்லோவா ஆப்ப சொருகராங்க..இதுக்குதான் பிஜேபி வேணும் ..இதே காங்கிரசு இருந்தா இல்லேன்னா அடுத்தது கூட்டணி கொலை கொள்ளை ஆட்சி அமைந்தால் இந்த நல்ல திட்டம் டீலில் விட்டுவிட்டு அராபிக்கு கூஜா தூக்குவானுங்க. நாடு முன்னெரிடக்கூடாதே.. பொய் பிரச்சாரம் , வதந்தியா கேளப்பிவ்விட்டு fake புக் மற்றும் வாட்ஸ்ஆப்பில் எத போட்டாலும் நம்பிவிடும் முட்டாள் இந்தியன் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்..

 • Muruga Vel - Chennai,இந்தியா

  நல்ல முயற்சி ... சோலார் எனர்ஜியை சார்ஜிங்குக்கு உபயோகிக்க முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் ... மேலும் சார்ஜிங் செய்த பேட்டரியால் மின்விசிறி மற்றும் விளக்குகளை வாடகைக்கு விட அனுமதி அளிக்க வேண்டும் ...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement