Advertisement

அரசு மருத்துவமனையில் இப்படியுமா நடக்கும்...கொடுமை! பிரேத சான்றுக்கு பட்டாசு 'பாக்ஸ்' கேட்ட டாக்டர்கள்

மதுரை:மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பட்டாசு 'கிப்ட் பாக்ஸ்களை' லஞ்சமாக பெற்ற புகார் குறித்துவிசாரணைக்கு டீன்மருதுபாண்டியன் உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாண்டி கண்மாயை சேர்ந்தவர் ராஜேந்திரன், 58. நவ., 2 பரமக்குடியில் வாகனம் மோதியதில், தலையில் காயமுற்றார். அன்று மாலை 6:40 மணிக்கு மதுரை அரசு மருத்துவமனை விபத்துகாய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இரவு 10:15 மணிக்கு
இறந்தார். இவரது உடல் பிரேதபரிசோதனைக்கு வந்த பரமக்குடி போலீசாரிடம் அங்கிருந்த டாக்டர்கள் தீபாவளி பaட்டாசு 'கிப்ட் பாக்ஸ்'வாங்கி தரும்படி கூறினர்.

ராஜேந்திரனின்உறவினர்கள் 3 'பாக்ஸ்' கொடுத்த பின்னரேபரிசோதனை சான்றை வழங்கினர். இதைஅங்கிருந்தவர்கள்அலைபேசியில் வீடியோ எடுத்து பரவவிட்டனர். தீபாவளிக்கு முன் 4
நாட்களாக நடந்த பிரேத பரிசோதனைக்கு வந்தோரிடமும் பட்டாசு வசூல் செய்துள்ளனர்.

பிரேத பரிசோதனை அறை ஊழியர்கள் கூறியதாவது:இங்கிருந்த சில டாக்டர்கள் போலீசார் மூலம் பட்டாசு 'கிப்ட் பாக்ஸ்' கேட்டனர். இதற்கும்எங்களுக்கும் தொடர்பில்லை. டாக்டர்
களை காப்பாற்றும் நோக்கில் ஊழியர்கள் மீது குற்றச்சாட்டி இடமாற்றம் செய்யவுள்ளனர்,என்றனர்.

டீன் மருதுபாண்டியன் கூறுகையில்,''இப்புகார் குறித்து டாக்டர் பாலாஜிநாதன் விசாரிப்பார். அவரது அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    இப்புகார் குறித்து டாக்டர் பாலாஜிநாதன் விசாரிப்பார். அவரது அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' அதெல்லாம் கூடாது பட்டாசு பாலுதான் விசாரிக்க வேண்டும்

  • Sharvintej - madurai,இந்தியா

    பிணத்தின் வாயில் உள்ள அரிசியை கூட விட்டுவைக்காத ஜென்மங்கள்...

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அட கேவலமான ஈன ஜென்மங்கள் எதில் தான் லஞ்சம் கேட்பது என்று விவஸ்தயில்லயா இம்மாதிரி நீசப்பிறவிகளை மொட்டையடித்து கரும்புள்ளி செம்புள்ளிக்குத்தி கழுதைமேல் மதுரைநகரை வலம்வரச் செய்யனும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement