Advertisement

நக்சல் சதியை முறியடிக்க களமிறங்கிய தேர்தல் கமிஷன்

சுக்மா : சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில், அரசியல் கட்சிகளிடையே நிலவும் போட்டியை விட, தேர்தல் கமிஷனுக்கும், நக்சல் அமைப்புகளுக்கும் இடையிலான போட்டி உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.


சத்தீஸ்கரில் 12 மற்றும் 20ம் தேதிகளில், இரண்டு கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில், ஆளும், பா.ஜ., மற்றும் எதிர்க் கட்சியான காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. தவிர, மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் சிறிய கட்சிகள் கூட்டணி அமைத்து, மூன்றாவது அணியாக களம் இறங்கியுள்ளன.


தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, அரசியல் கட்சித் தலைவர்கள், மற்றும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

அரசியல் கட்சிகள், தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து, பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளன. இந்நிலையில், அரசியல் கட்சிகள் இடையிலான போட்டியை விட, தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ள தேர்தல் கமிஷனுக்கும், தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ள, நக்சல் அமைப்புக்கும் இடையே, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.


நக்சல் ஆதிக்கம் உள்ள, பஸ்தர், தந்தேவாடா பகுதிகளில், வாக்காளர்களை, ஓட்டுச் சாவடிக்கு வர வழைத்து, ஓட்டுப் பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் முயற்சியில், தேர்தல் கமிஷன், மாவட்டம் நிர்வாகம் இணைந்து செயலாற்றி வருகிறது. மாநிலத்தின் பல பகுதிகளில், தேர்தல் கமிஷன் சார்பில், 'தேர்தல் திருவிழாவை கொண்டாடுவோம்' என்ற வாசகம் இடம் பெற்ற மிகப் பெரிய பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.


தேர்தலில் ஓட்டளிக்கும் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தோரை, ஓட்டுச் சாவடிக்கு அழைத்து வரும் பெண்களுக்கு, மாவட்ட நிர்வாகம், பல சலுகைகளை அறிவித்துள்ளது. முதல் முறை ஓட்டுப் பதிவு செய்வோர், முதியவர்கள், பெண்கள் என அனைத்து

வயது வாக்காளர் மத்தியிலும், விழிப்புணர்வை ஏற்படும் வகையில், மாவட்ட நிர்வாகம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


தேர்தல் கமிஷனுக்கு போட்டியாக, நக்சல் அமைப்புகளும் களம் இறங்கியுள்ளன. தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ள நக்சல்கள், அது குறித்து பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர். பாதுகாப்பான ஓட்டுப் பதிவை நடத்தி முடிக்க, மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது. நக்சல் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதிகளில், அரசியல் கட்சி பேனர்களை விட, தேர்தல் கமிஷன், நக்சல் அமைப்புகளின் பேனர்கள் அதிகம் காணப்படுகின்றன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    தேர்தல் கமிஷனுக்கும், நக்சல் அமைப்புகளுக்கும் இடையிலான போட்டி உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.,, பார்த்துக்கொண்டு சும்மாதானே இருக்கிறார்கள்..

  • Manian - Chennai,இந்தியா

    நக்ஸல்களை தடுக்க முடியாது. 1 . போலீசில் அவர்கள் உள் ஆட்கள் வேலை செய்கிரார்கள் ஆகவே எந்த படையெடுப்பும் பயன் படாது. 2 . மிக சிறந்த திறமை, சித்தனை சக்தி, புத்திசாலித்தனம் உள்ளவர்களை வரவிடாமல், கோட்டாவில் தகுதி அற்றவர்களே ஜாதி-மதம் இட ஒதுக்கீடு , மொழி பிரச்சினைகளால் ரகசியமாக உளவு பார்க்க முடியாது. 3 . அரசியல் எதிரிகளும் எதிர் கட்சிகளும் இவர்களுக்கு உதவி செய்கிறார்கள். 4 . துப்பு சொல்லும் உள்ளூர் வாசிகளை போலீசின் தகவல் திருட்டு மூலம் தெறிந்து கொண்டு அவர்கள் கொல்லப்படுகிறார்கள்.5 . நவீன தொழில் நுட்பங்கள், போக்குவரத்து சாதனங்கள், ரகசிய பேசிச்சுக்கள் நடத்த தேவையான கம்பியூட்டர் வசதிகள், துப்பாக்கிகள் போலீசுக்கு கிடையாது. அதில் லஞ்சம் வாங்கி தரம் தாழ்ந்த துப்பாக்கிகளை தருகிறார்கள். 6 . இவர்களை ஒழித்தால் நமக்கு இது வேலை என்று உள்ளடி வேலையும் நடக்கிறது. 7 . உதவி செய்வோர்க்கு அரசாங்கம் உதவுவது இல்லை. ஓசை உதவி செய்ய யாரும் தயாரில்லை. ( விட்டுப்போன பாயிண்டுகளை இங்கே பதிவிடலாம்).

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement