Advertisement

'ஜல்லிக்கட்டு விசாரணை ஆறு மாதத்தில் முடியும்': ஆணைய தலைவர் பேட்டி

கோவை : ''ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக, இன்னும் ஆறு மாதத்தில் விசாரணை முடிவடையும்,'' என, ஆணைய தலைவர் ராஜேஸ்வரன் கூறினார்.


ஜல்லிக்கட்டு அனுமதிக்க கோரி, தமிழகம் முழுவதும் நடந்த போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் பல்வேறு இடங்களில் கலவரம் ஏற்பட்டது. இது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.


இந்நிலையில், தமிழகம் முழுவதும், கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில், 547 வழக்குகள்
தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்ட விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. மேற்கு மண்டல விசாரணை ஆணைய தலைவராக ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.


இது தொடர்பாக, மூன்று நாட்கள் விசாரணை நடத்த நேற்று கோவை வந்த ராஜேஸ்வரன், நிருபர்களிடம் கூறியதாவது: மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட, கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில், கூட்டுறவு தேர்தல் முறைகேடு தொடர்பாக, 248 புகார் மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள் தொடர்பாக, கோவையில் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட உள்ளது.


கோவை மாவட்டத்தில், 56 புகார் மனுக்கள் தொடர்பாக விசாரணை நடைபெறும். இங்கு விசாரணை முடிந்த பின், மற்ற மாவட்டங்களுக்கு சென்று விசாரணை நடத்த உள்ளேன். ஜல்லிக்கட்டு விசாரணை முடிய காலதாமதம் செய்யப்படுவதாக கூறுவது தவறானது. விசாரணை கமிஷன் ஒரு கண்துடைப்புக்காக நடத்தப்படுகிறது என்பதை ஏற்க முடியாது.விசாரணை ஆணையம் அறிக்கையை சமர்ப்பித்த பின், அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிக்கை அளிப்பதோடு எங்கள் பணி முடிந்துவிடுகிறது. அறிக்கை மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை, அரசிடம் தான் கேட்க வேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக, கோவை, சேலத்தில் விசாரணை முடிக்கப்பட்டு விட்டது.


சென்னையில், தினமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மதுரையில், டிசம்பரில் விசாரணை முடியும். இன்னும், 1,956 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. எனவே முழு விசாரணை முடிய, இன்னும் ஆறு மாதங்கள் ஆகும். இவ்வாறு, ஆணைய தலைவர் ராஜேஸ்வரன் தெரிவித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (10)

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  கடைசி பென்ச் கழிசடைகள்தான் வேறு போக்கிடம் இல்லாமல் வக்கீல் தொழிலுக்கே வருகின்றனர். ஒரு பிளம்பர், கார்ப்பென்டர், எலக்ரீஷியன், பெயிண்டர் அளவுக்குகூட நிலையான வருமானம் கிடையாது. பெண் வக்கீல் என்றால் திருமணம் கேள்விக்குறிதான். ஆனால் ரௌடித்தனம் செய்வதில் மட்டும் சூரப்புலிகள்.

 • tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ

  இந்த விசாரணையை முடிப்பதற்குள் சாட்சிகள் பலரும் இறந்து விடுவார்கள். இந்த கமிஷனின் நோக்கம் தான் என்ன? அது தான் போராட்டம் முடிந்து அரசே சட்டத்தை மாற்றி விட்டார்களே. பேசாமல் அரசு இந்த கமிஷனை மூடி விடலாம். செலவு மிஞ்சும்.

 • siriyaar - avinashi,இந்தியா

  இந்தியாவில் வக்கில் ஆகும் தகுதி பள்ளியில் கடைசி பெஞ்ச், படிப்பில் முடிந்த அளவிற்கு குறைந்த மதிப்பென். கல்லூரியில் ரொவ்டியிஷம். வக்கில் ஆனபின் நீதிபதி ஆக குருக்கு வழி திறமை அரசியல் தொடர்பு அடவடித்தணம். ஆனா இவங்க சொன்னா ஐஏஸ் கூட கேட்கனும். யாரவது ரஞ்சன் கோகாய் பத்தம் வகுப்பில் எத்தனை மார்க்குணு கோட்டா ரஞ்சண் அய்ய காண்டயிடூவார்.

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  இன்னும் ஆறு மாசமா? மக்களின் வரிப்பணம் இப்படி வீணாகப்போகும்போது நெஞ்சு கொதிக்கிறது.

 • tamil - coonoor,இந்தியா

  ஜல்லிக்கட்டு போராட்டத்தையே மக்கள் மறந்துவிட்டார்கள் ஆனால் விசாரணை கமிஷன் இன்னும் நடக்குது, மக்கள் வரிப்பணம் எல்லாம் இப்படி வீணடிக்கப்படுகிறது, இதே கதி தான் இந்த ஆறுமுகசாமி கமிஷனுக்கும்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எந்த வருஷம் சாமி

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  எது, இந்த ஜெயலலிதாவின் மர்ம மரண விசாரணை முடிவு பெற்றது மாதிரியா?

 • ஆப்பு -

  என்ன அவசரம்...நம்ம ஆறுமுக சாமி மாதிரி ஆற அமர எல்லோருக்கும் சம்மன் அனுப்பிச்சு, அப்பிடியே மாடுகளையும் விசாரிச்சுட்டு ஒரு 3 வருஷத்தில் அறிக்கை குடுங்க. அப்புறம் கெவுனர் சந்தானம் கமிஷன் மேல உக்காந்த மாதிரி இது மேல யாரவத் உக்காந்து ஒரு இரண்டு மூணு வருஷம் இழுத்தடிச்சுட்டா நாங்களும் மறந்துருவோம். அப்புறம் பா.ஜ ஆட்சிக்கு வந்தா, பசு மாட்டுக்கு 4000 அடி உசரத்துக்கு சிலை வெச்சுருவாங்க. சுபம்.

 • Thiru - Singapore,சிங்கப்பூர்

  வருகிற தை பொங்கல் அன்று சட்டபூர்வமாக ஜல்லிக்கட்டு நடத்தமுடியுமா முடியாதா, அதைச் சொல்லுங்கப்பா முதலில். அதை விட்டுட்டு, பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னால், அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று தடுக்காதீங்க...

 • ravisankar K - chennai,இந்தியா

  விசாரணை ஆணையம் அறிக்கையை சமர்ப்பித்த பின், அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள் . அப்படி அரசிடம் உத்தரவாதம் வாங்கிக்கொண்டு இந்த பதவியை ஏற்க வேண்டியதுதானே ??? அப்படியில்லாவிட்டால் நீங்கள் செய்யும் தொழிலுக்கு என்ன மதிப்பு ?? நீதியரசர்களிடம் எந்த நீதியுமில்லை .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement