Advertisement

'குளிர் விட்டுப் போச்சு!': அமைச்சர் ஜெயகுமார்

சென்னை : ''ஜெயலலிதா இல்லாததால், நடிகர்களுக்கு குளிர் விட்டுப் போச்சு,'' என, மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்தார்.


அவர் நேற்று அளித்த பேட்டி: திரைப்படம் எடுப்பவர்களுக்கும், நடிகர்களுக்கும், ஜெ., இல்லாமல் குளிர்விட்டு விட்டது. அவர் இருந்த போது, இதுபோன்ற கருத்து வரவில்லை. அவர் இருந்தபோது, இதுபோல் எடுத்திருந்தால், அவர்கள் வீரத்தை மெச்சியிருப்போம்.


அவரவருக்கு ஆசை இருக்கும். திரைப்படத்தில், முதல்வராகும் ஆசை இருப்பதில் தப்பில்லை. அதை, மக்கள் தீர்மானிக்க வேண்டும். தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக, பிறருடைய உணர்வுகளை சிதைப்பதை ஏற்க முடியாது. திரைப்படம் என்பது, மக்களுக்கு, நல்ல விஷயங்களை கூறும், சாதனமாக இருக்க வேண்டும்.


எம்.ஜி.ஆர்., படங்கள் எல்லாம், நல்ல கருத்தை கூறின. அனைவராலும் போற்றக்கூடிய தலைவர் எம்.ஜி.ஆர்., அவரைப் போல் வரலாம் என, அனைவரும் நினைக்கின்றனர்; அது முடியாது. ஒரே எம்.ஜி.ஆர்., தான். இவர்கள் தலைகீழாக நின்றாலும், அழுது புரண்டாலும், எம்.ஜி.ஆர்., போல, மக்கள் அங்கீகாரம் பெற முடியாது.


பிறர் உணர்வுகளை புண்படுத்தியதுடன், சமுதாயத்திற்கு எதிரான கருத்து உள்ளதால், சர்கார் படம் தொடர்பாக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஜெ.,யை அவமானப்படுத்துவதை ஏற்க முடியாது. அ.தி.மு.க., - அ.ம.மு.க., இணைப்பு என்பது, கானல் நீர்; நடக்காத ஒன்று. இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (29)

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  எதிர்ப்பை சகிக்க முடியாவிட்டால் பொதுவாழ்க்கைக்கு முழுக்குப்போட வேண்டியதுதான் . MLA. என்பது மக்களிடம் எடுக்கப்பட்ட பிச்சைப்பொருள் என்பதை உணர்ந்தால் நல்லது. மக்களுக்கு சேவை என்று ஒட்டுப்பிச்சை எடுத்து அவனவன் பிள்ளைகுட்டிகளுக்கு சேர்த்ததுதான் உண்மை ..மக்களிடம் ஓட்டுப்பெறும்போது மக்கள் எஜமானர்கள் ஒட்டுக்கேட்பவர் பிச்சைக்கார் .. வெற்றிக்குப்பின் பிச்சை எடுத்தவர் எஜமானர் ஆக மாறிவிடுவது உகப்பற்ற செயல் .. ஊழலின் ஊற்றுக்கண் எல்லோருக்கும் தெரியும் ஆனால் திருத்தவோ திருத்தவோ ஏன் சொல்லவோ ஆளில்லை .. இறுதிமுடிவு மருத்துவமனையில் சொல்லணா துயரத்துடன் வெளிக்காட்டாமல் நொந்து சாவதுதான் அரசியல்வாதிகளுக்காக இருந்துவருகிறது என்பது மறக்க முடியாத உண்மை .. திருந்தாத ஜென்மங்கள்

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  சரி கருனாநிதி ஊழல் செய்யவில்லை. பிரியானி கடையும், சலூன் கடையிலும் சம்பாதித்தார் போதுமா

 • ppmkoilraj - erode.10,இந்தியா

  MGR. நடித்த நம்நாடு படத்தை அனைத்து அமைச்சர்களும் பார்க்க வேண்டும்.அவ்வளவு அடுக்கடுக்காக திட்டி இருப்பார் .திமுகஅப்போதய திமுகஅரசை தாக்கி விஷச்செடிகள்,துரோகிகள் ஊழல் என்று கடுமையாக தாக்குதல் இருக்கும் .இதற்கு ஆண்டகருணாநிதி கோபப்படவில்லை.நேற்று இன்று நாளை என்று ஒருபட்ம் அதைபாருங்க எவ்வளவு தாக்குதல்படம் வெளிவர மதுரை முத்து முட்டுக்கட்டை போட்டும் படம் வெளிவந்தது.எந்த வசனமும் நீக்கவில்லை.தற்போது .இலவசங்களை எரிப்பது போல காட்சி இதனை அகற்ற சொல்வது அதிமுக கடமை.அதனை அகற்றியது படக்குழு கடமை சரி. இப்படி ஒவ்வொரு படத்திலும் இது தங்கள் கட்சி திட்டத்தை கேலி செய்கிறார்கள் என்று சட்டத்தை கையில் எடுத்துஆளும் கட்சியேவண்முறையில் இறங்குவது.நல்லது கிடையாது.மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் புரிந்து கொள்வது அதிமுகவுக்கு நல்லது.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  கபிலன் என்கிறவர் ஏன் கலைஞர்/ ஸ்டாலின் என்று புலம்புகிறார்? எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் சும்மா சும்மா ஊழல் கட்சி என்று திமுக வை சொல் வதில் என்ன சுகம் கிடைக்கிறது? இன்று, பிஎஸ்என்எல் இணைப்புகள் பற்றி சிபிஐ போட்ட வழக்கு போலியானது என்று எல்லா குற்றச்சாட்டு களையும் ரத்து செய்து கேஸ்களை ஊத்தி மூட சொன்னது உயர் நீதிமன்றம். சிபிஐ தலையை தொங்க போட்டு கொண்டு வெளியேறியது. தமிழக ஊடகங்கள் மட்டுமே இதை சொல்லவில்லை. எனவே இனியாவது திமுகவை ஊழல் கட்சி என்று பிதற்றுவதை நிறுத்துவார்களா? நன்றி

 • Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா

  ஜெயலலிதா இல்லாமல் குளிர் விட்டு போனவர்கள் மந்திரிகள்தான். கைகட்டி, வாய் பொத்தி, சேவகம் செய்தவர்கள் இன்றைக்கு மனம் வந்த மாதிரி பேசுகிறார்கள்.

Advertisement