Advertisement

'1996ல் கிடைத்த வெற்றியை லோக்சபா தேர்தலில் பெறுவோம்'

பெங்களூரு : ''அடுத்த லோக்சபா தேர்தலில், 1996ல் நடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை, எதிர்க்கட்சிகள் பெறும்,'' என, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறினார்.


அடுத்த ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில், சந்திரபாபு நாயுடு
ஈடுபட்டுள்ளார். காங்., தலைவர் ராகுல், தேசியவாத, காங்., தலைவர் சரத் பவார் உட்பட, பல தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.


இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில், முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவ கவுடா, கர்நாடக முதல்வர், மதச்சார்பற்ற ஜனதாதளத்தை சேர்ந்த குமாரசாமி ஆகியோரை, சந்திரபாபு நாயுடு நேற்று சந்தித்து பேசினார்.


பின், நிருபர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற ஜனதாதளம் - காங்., கூட்டணி, அமோக வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து நின்றால், பா.ஜ.,வுக்கு தோல்வி நிச்சயம் என்பதை, கர்நாடக மக்கள் தெளிவுபடுத்திவிட்டனர்.தேர்தல் கமிஷன், சி.பி.ஐ., போன்றவற்றை, மோடி அரசு, தன் கைப்பொம்மையாக பயன்படுத்தி வருகிறது. நாட்டை காப்பாற்ற, எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். பிரதமர் யார் என்பதை, தேர்தலுக்கு பின் முடிவு செய்வோம். 1996ல் நடந்த லோக்சபா தேர்தலில் பெற்ற வெற்றியை, அடுத்த ஆண்டு நடக்க உள்ள தேர்தலில், எதிர்க்கட்சிகள் பெறும். இவ்வாறு, சந்திரபாபு நாயுடு கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (12)

 • Anbu -

  Great joke of this Era

 • vvkiyer - Bangalore,இந்தியா

  The one point agenda of Naidu is to snub Modi Govt., which did not favourable rwsond to Nidu's request of special status to AP. Arun Jaitley has given reasons why special status could not be fiven to AP,. He aslo said there are other avenues to get the benefits available under secial status. It is shameful, that Naidu wants to honob with Congress, which was detested by the the TDP founder NTR .

 • bal - chennai,இந்தியா

  இத்தனை நாட்கள் பிஜேபியை பிடித்துக் கொண்டு பதவிக்கு வந்தார் நாயுடு... இப்போது இந்த திமிர் பேச்சு...ஏன் ராஜினாமா செய்துவிட்டு திரும்ப முதல்வராக முயற்சி செய்யவேண்டியது தானே.....

 • tamil - coonoor,இந்தியா

  எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டி இட்டால் நிச்சயம் அது பி.ஜெ.பி க்கு ஒரு சவாலாக இருக்கும், ஏதாவது குளறுபடிகள் நடந்தாலும் பி.ஜெ.பி தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற வாய்ப்பே இல்லை, பி.ஜெ.பி யின் தனி ஆவர்தனத்தை தடுத்து நிறுத்த வேண்டும், கூட்டணி என்கிற கடிவாளம் வேண்டும், அப்படி இருந்தால் தான் ஜனநாயக மாண்புகள் காப்பாற்றப்படும்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  கனவு காண்பது எல்லோருக்கும் பொது...

 • ஆப்பு -

  பா.ஜ அரசின் நம்பகத் தன்மை குறைந்து கொண்டே வருகிறது. அதன் திட்டங்கள் எல்லாம் கார்ப்பரேட்களின் நன்மைக்காகவே செய்யப்படுகிறது. சர்தார் பட்டேல் சிலைக்கு 3000 கோடிக்கு மேல் செலவழித்தாலும் அதில் 99% கார்ப்பரேட்கள், சீனா. வுக்கு போனது. ஆனா தேவையான இரும்பை மட்டும் ஏழைகளிடமிருந்து உருவிக் கொண்டார்கள். எத்தனை சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நேரடியான வாய்ப்பு வழங்கப் பட்டது? கேட்டா, மஸ்தான் வாயத் தொறக்க மாட்டார். நிர்மலா ராணுவ ரகசியம்பாரு. ஜெட்டிலிக்கு ஒண்ணும் தெரியாது.

 • Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ

  தேர்தல் கமிஷன், சீ,பீ,ஐ மோடி கையில் என்றால் கர்னாடகாவில் பா.ஜா ஏன் தோல்வியை தழுவியது

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  மீண்டும் மக்களே உங்களுக்கு சோதனை காலம் இந்த அரக்கர் கூட்டாத்தி நம்பாதீங்க ப்ளீஸ் கெஞ்சுகிறேன் நம்ம நாடு சிறக்க நிஸ்ச்சயம் நாம் பிஜேபிக்கே மீண்டும் ஆதரவு தரவேண்டும் மேற்படிகூடடங்கள் எல்லோரும் பிராடுகளேதான் மக்கள் செலுத்தும் வரிப்பணத்திலேயே தாம் தம் சுகம் செல்வம் என்று செழிக்குறாங்க என்பதை மறக்காதீங்க , எவனும் யோக்கியமே இல்லீங்க பலதார உண்டு அதுகள் பஞ்சம் பிழைக்க மக்கள் காட்டும் வரிகளையே ஸ்வாஹா பண்ணும் கிராதகர்களே

 • s t rajan - chennai,இந்தியா

  கௌரவக் கூட்டம். சந்தர்ப்பவாத கூட்டம். கொள்ளையர்களின் கூடாரம். மக்களே, இந்த தேசத்ரோகிகளை அரசியல் களத்திலிருந்து விரட்டியடிங்கள். இல்லா விட்டால் நம் நாட்டையே இவர்கள் ஸ்வாஹா செய்து நம் எதிர்காலத்தை வீணாக்கி விடுவார்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement