Advertisement

சர்க்கார் படத்திற்கெதிராக. போராட்டம்: நடிகர் ரஜினி கண்டனம்

சென்னை: சர்கார் திரைப்படம், தமிழக அரசியல் வட்டாரத்தில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இலவசங்களை அவமதிப்பதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினி டுவிட்டரி்ல் தெரிவித்துள்ளதாவது: சர்க்கார் படத்தின் காட்சிகளை நீக்க போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள்... தணிக்கை குழு தணி்க்கை செய்து படத்தை வெளியிட்ட பிறகு . இத்தகைய சட்டவிரோதமான செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அதில் ரஜினி கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (71)

 • Raj - coimbatore,இந்தியா

  வசனம் பேசி மக்கள் உணர்வுகளை தூண்டி பணம் பார்க்கும் கூட்டம், தனது தொழில் பாதிப்படைந்தால் கூவுவது நியாயம் தான். இதற்கு காரணம் தங்களுடைய சகாக்கள் தான் என்பதையும் அறிந்தவர்கள். அரசியலிலே இதெல்லாம் சகஜமப்பா. இங்கு அரசியல் அமைப்பு செரியில்லயா அல்லது சமுதாய அமைப்பு செரியில்லயா என்பது சிந்தனைக்குரியது. அரசியல் அமைப்பு சரியில்லை என்பதைக்கூட தமிழில் சொல்ல தெரியாமல் சிஸ்டம் சரியில்லை என்று பேசி வரும் இவர் சொல்வது நியாயம் தான். மூன்று மணி நேரத்தில் ஒரு கதை சொல்லி அதில் சமூக வக்கிரங்களை விதைத்து, பணத்துக்காக அதை நியாயப்படுத்தும் கூட்டம் இருக்கும் வரையில் எல்லோரும் கேக் வெட்டி கொண்டாட வேண்டிய விஷயம் தான். இந்த லட்சணத்தில் மக்கள் படத்தை பார்த்து தங்கள் உரிமைகளை அறிந்து கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது. இதே செய்தியை வாக்காளர்களுக்கு சொல்ல வேண்டிய தேர்தல் ஆணையம் விழித்துக்கொள்ளுமா ?

 • K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா

  கோலிவுட்டின் கந்து வட்டி ஊழல், மீ டூ ஊழல், காசோலை பௌன்ஸ் ஊழல், வரி ஏய்ப்பு , கருப்பு பண ஊழல்,தியேட்டர் அட்டூழியங்கள் , தயாரிப்பாளரையே மாற்றுவது , பெண்களை இழிவுபடுத்தல் போன்ற எல்லா ஆட்டூழியங்களையும் வைத்து ஒரே ஒரு படம் எடுத்தால் அண்ணாச்சிகள் தாங்குவார்களா?

 • sumutha - chennai - Chennai,இந்தியா

  சார் நீங்க கண்டனம் தெரிவிச்ச ஓடனே அரசாங்கம் thayaricha அந்த படத்துல இருக்கிற ஆட்சேபகரமான சீனை கட்பண்ணிட்டு படத்தை அரசாங்கம் வெளியிட்டு விட்டது பிளீஸ் அமைச்சர்களை எதுவும் செஞ்சிடாதீங்க.

 • siva india - chennai,இந்தியா

  விஜய்யை வைத்து சர்கார் படம் வெளியிட்டது மூலமாக பிஜேபிக்கு அருமையான புள்ளி போட்டு கொடுத்து விட்டார்கள் திராவிட கட்சிகள். இனி வரும் திரை படத்தில் ஜெயா கொடுத்த இலவசங்கள் வேண்டாம் ,பிரதமரின் சிறு கடன் உதவி மூலம் நாங்கள் முன்னுக்கு வந்து விட்டோம். கலைஞர் இலவச டிவியை போட்டு உடைத்து ,மேலும் இந்த டிவி மூலம் தவறான தகவல்களை மத்திய அரசின் நல திட்டதிற்கு எதிராக விசம பிரச்சாரம் செய்கிறார்கள் என பிஜேபி திரை படம் எடுக்ககூடும்.

 • ramakrishnan balasubramanian - Chennai,இந்தியா

  நீங்களே உங்கள் பத்திரிகையில் கருத்து எழுதும்போது எவ்வளவு தடைகள் வைத்திருக்கும்போது ஒரு படத்தை எடுக்க எவ்வளவு யோசிக்க வேண்டும். நீங்கள் புகை பிடிப்பதை படத்தின் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தீர்கள். உங்கள் தீவிர ரசிகர்கள் அது சினிமா என்று நினைக்காமல் நிஜம் என்று தான் இன்றும் நினைக்கிறார்கள். கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்பவர்கள் அழுகின்ற குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்திருப்பார்களா? முதல்வர் ஆக நினைக்கும் படத்தில் அவரும் புகை பிடிக்கிறார். கண்மூடித்தனமாக இருக்கும் மக்கள் நிஜம் என்று தான் எல்லாவற்றையும் நினைக்கிறார்கள் . அப்படிப்பட்ட ரசிகர்களை நல்ல செய்கையின் மூலமாகத்தான் நடிகர்கள் இருவரும் சினிமாவில் காட்டவேண்டும். கண்மூடித்தனமான ரசிகர்களுக்கு சினிமாவில் "நல்ல மெசேஜ்" கொடுத்தால் தான் கொஞ்சபேர்களையாவது நல்வழி படுத்தமுடியும். நல்ல பொழுது போக்கு படங்கள், குடும்ப படங்கள், சமூக சிந்தனை படங்கள்,பெண்களை முழு ஆடைகளை அலையவிட்டு படங்கள் எடுங்கள். ஆபாசமான படங்களை எடுக்காதீர்கள் நீங்கள் முழு ஆடை அணியலாம் ஆனால் அவர்கள் அரைகுறை ஆடைகளை அணியவேண்டுமா? பெண்களை தெய்வமாக நினைக்கும் நீங்கள் அவர்களை காம கன்னியா சித்தரிக்காதீர்கள். இப்படி நீங்கள் புரட்சி செய்ய முடியுமா? உங்கள் துறையை முதலில் சிஸ்டம் செய்யுங்கள் பிறகு மற்றவற்றுக்கு வாருங்கள். பிறகு நீங்கள் இருவரும் நாட்டை ஆள வாருங்கள்?

 • R.SANKARA RAMAN - chennai,இந்தியா

  இங்கு படத்துக்கு ஆதரவாக கருத்துப் போடும் அனைவரும் (விஜய் ரசிகர்கள் உள்பட ) தாங்கள் வாங்கிய மிக்ஸி, மின்விசிறி மற்றும் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை இன்னும் விற்காமல் இருந்தால் தயவு செய்து அவற்றை திருப்பிக் கொடுக்கவும்.

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  பிரியானி சாப்பிட்டதற்கு காசு கேட்டா, சேவிஸ் செஞ்சதற்கு காசு கேட்டா, செல் போன் சர்வீஸ் செஞ்சதற்கு காசு கேட்ட அடிக்கதானே செய்வாங்க...........இது திராவிடர்கள் இடமல்லவா எனவே அடிப்பார்கள்...........

 • VOICE - CHENNAI,இந்தியா

  ரவுடித்தனம் செய்யும் கேவலமான கும்பல் எவராக இருந்தாலும் வோட்டு போடவோ மக்கள் தொன்று ஆற்றுவதற்கு தேர்தலில் நிற்கவோ தடை விதிக்கவேண்டும். திமுக நாசமா போனது ரௌடித்தனத்தால் தான் தற்பொழுது அதிமுக ரவுடி கட்சியாக மாறிவருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துவது கேட்கமுடிகிறது.

 • Kabilan E - Chennai,இந்தியா

  மொதல்ல உன்னோட மருமகனுக்கு யாரு parents னு கண்டுபிடிச்சியா? சுள்ளான் தன்னோட உடம்புல இருந்த அங்க அடையாளங்களை எல்லாம் லேசர் வச்சி அழிச்சிட்டேனே....அதெல்லாம் தப்பு இல்லையா?

 • Kabilan E - Chennai,இந்தியா

  இவன மாதிரி ஒரு பச்சோந்தியை இந்த உலகம் பார்த்து இருக்காது...நேரத்திற்கு தகுந்த மாதிரி, இடத்திற்கு தகுந்த மாதிரி தன்னோட நிறத்தை மாற்றி கொள்வான்...இவனோட கொள்கையே மக்களை எந்த வகையிலாவது ஏமாற்றி பிழைப்பு நடத்த வேண்டும்...

 • K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா

  இதுக்கெல்லாம் கமெண்ட் போட்டால் வாசகர்களுக்குத்தான் அவமானம். ரெண்டு பேருமே ஊரான் துட்டுல, டிக்கெட் விலையை ஏற்றி கொள்ளை அடிச்சவனுங்க. இவனுங்க பண்ற அட்டூழியங்களை வைத்து படம் எடுத்தால் இதை விட வசூலை அள்ளும். எல்லா கட்சிகளும் சேர்ந்து அதை செய்யட்டும்.

 • Kadaparai Mani - chennai,இந்தியா

  ஒரு கம்பெனி labour அதே கம்பெனி தொழிலாளிக்கு எப்படி சப்போர்ட் பாருங்க. உங்க சன் டிவி முதலாளி பற்றி ஊர் அறியும் .

 • R S GOPHALA - Chennai,இந்தியா

  இந்த இலவசங்களை முதன் முதலில் ஆரம்பித்தது யார் ? திமுகதான் எல்லாவற்றிக்கும் முன்னோடி. ஏன், கருணாநிதி இலவச டிவி கொடுக்கவில்லையா. சிதம்பரம் ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலம் 5 ஏக்கர் கொடுப்பதாக புளுகினாரே... அதையெல்லாம் ஏன் காட்டவில்லை. திமுக குடும்பத்தினருக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா ? இதே திமுக குடும்பத்தினர் ஒரு காலத்தில் விஜயை மிரட்டினார்களே. விஜய்க்கு ரோஷமே கிடையாதா..? இவர்கள் காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்கின்ற மகா பாவிகள். அதிமுகவின் எதிர்ப்பு நியாயமானதே.. இவர்கள் யாருமே யோக்கியர்கள் இல்லை. இந்த படத்தில் நடித்ததன் மூலம் விஜய் தமிழ்நாட்டின் அடுத்த CM ஆக போகிறாரா ? பகல் கனவு. இனம் இனத்தோடு சேரும். ஊழல் செய்பவர்கள், ஊழலுக்கு துணை நிற்பவர்கள் அவற்றை செய்பவர்களுடன்தான் இணைவர். தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன்தான் இப்படியெல்லாம் ஒரு சோதனையோ ??

 • Nisha Rathi - madurai,இந்தியா

  அம்மா இல்லாத தைரியம் உங்களுக்கு குளுர் விட்டுப்போச்சு பௌடர் பூசும் நடிகர் பயலுகளா உங்களை எல்லாம் ஓட ஓட விரட்டி அடிக்கணும்

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  "எதிர்த்து கேள்வி கேட்டா அடிப்பாங்கன்னு இப்ப தான் தெரியுது. அடிப்பாங்க தான்" என்று ஒரு வசனம் "சர்கார்" படத்தில் வரும். அது தான் இப்போது நடக்கிறது. படம் செம்ம. இரண்டரை மணி நேரம் போவதே தெரியவேயில்லை. ஏன் இவ்வளவு கோபப்படுகிறார்கள்? உணர்ச்சிவசப் படுகிறார்கள்? சினிமா தானே. சும்மா விட்டாலே இருபது இருபத்தஞ்சு நாள் ஓடிட்டு போயிடும். ஆனால் இதை பெரிய வெற்றி படம் ஆக்கறதுன்னு முடிவு பண்ணிட்டாங்க.

 • Ganapathi Ramani - Chennai,இந்தியா

  ரஜனி அவர்களே, உங்களுடைய 500 கோடி ரூபாய் படம் வெளிவர சில நாட்களே உள்ளபோது இத்தகைய அறிக்கை விட்டு படத்திற்கு இலவச விளம்பரம் தேடாதீர்கள். அது எதிர்மறையான விளைவை கொடுக்கலாம்.

 • கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா

  வடிவேலு மார்கெட்டை காலி செய்த திமுக அடுத்து டார்கெட் செய்வது விஜயை

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  திருடனுங்க கட்சி கொடுத்த கொலைஞர் டி.வி யை தூக்கி போடுவது போல் காட்ட வக்கு இருக்கா இவிங்களுக்கு ? அப்பால ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் இலவச நிலம் கொடுக்கறேன்னு சொன்னதை படத்தில் காட்சி படுத்த வக்கு இருக்கா ? இவனுங்களோட நியாயம் இப்படி தான் அநியாயமா இருக்கும் ...எளிமையா ஆட்சி நடத்தணும் ,இலவசம் இல்லா ஆட்சி நடத்தணும்ன்னு படத்துல கருத்து சொல்லவே பிரம்மாண்டம் தேவைப்படுது ...அதுக்கு இவனுங்க 100 கோடி செலவு செய்வானுங்களாம் ...200 கோடி லாபம் எதிர்பார்ப்பானுங்களாம் ...ஏண்டா ..தெரியமாத்தான் கேக்குறேன் ...இந்த கதை கருவை வைத்து லோ பட்ஜெட்டுல படம் பண்ணி நடிச்சவன் , இயக்குனவன் இன்னும் எஞ்சி இருக்குற சில்லறை பயலுவோ எல்லாம் குறைஞ்ச சம்பளத்தில் வாங்கிகிட்டு கருத்து சொன்னால் அவனுங்க நேர்மையை பாராட்டலாம் ..

 • Balaji - Bangalore,இந்தியா

  விஸ்வரூபம் 1 வெளியிட்ட போது ரஜினி எங்கே ? ஜெயலலிதா இல்லாத தமிழ் நாட்டில் எல்லோரும் ராஜா? வெட்கம்

 • prakash - kanchipuram,இந்தியா

  thookathula irunthavaha yaaru ezhuppi vittathu?

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  ரஜனி சார் கருத்துக்கள் 100 -க்கு 100 சரி.தமிழகத்தில் நடக்கும் இலவசங்கள் தம் கட்சிக்காரர்களின் பிழைப்புக்கே அதற்காக ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் கேவலப் படுத்தும் இந்த இலவசங்கள் ஒழிக்கப்பட வேண்டும்.இதில் மாறுபட்ட கருத்துக்கள் இல்லை. இலவச சம்பந்தப்பட்ட அந்த காட்சிகளை சர்க்கார் படத்திலிருந்து நீக்க யாருக்கும் உரிமையில்லை.அண்ணா தி.மு.க -வினர் சர்க்கார் படத்துக்கு எதிராகப் போராடுவது வன்மையாக கண்டிக்க தக்கது. ஆளும் கட்சிக்கு எதிராக சினிமா கலைஞர்கள் ஒன்று சேர்ந்து போராடினால் அண்ணா தி.மு.க மறைந்து விடும்.

 • Mal - Madurai,இந்தியா

  Cine industry is full of illegal money and illegal activities (sexual harassments etc).... But MeToo campaign was criticised. When their own cine industry is in bad state, what right do these people have to criticise government. When you (cine field) are all saints, you can talk....about politics. When there is a lot of சாக்கடைin your industry, you morally lose the right to comment about others. Let all the politicians talk about the private of all cine stars and those in cine field .... Then cinemas too can talk about politicians.... Only when cinema and cine people are thought of only as entertainers, will tamilnadu grow, if they are thought of as political leaders, only the assets of the cine stars will grow.... Cine industry is funded by Christian media and don't sp your valuable money and time to help conversions.

 • B Srinivasan - trichy,இந்தியா

  ரஜினி சார் நியாயம் சொல்லியிருக்கிறார். உடனடியாக தூண்டிவிடும் செயலை நிறுத்திக்கொள்வது நல்லது. மந்திரியாக இருந்தவர்கள் டெபாசிட் இழப்பது அசிங்கம்.

 • nettrikan -

  Simon Joseph Vijay - alliance ?

 • ஸாயிப்ரியா -

  ஓட்டுக்கு நோட்டும் இலவசங்களை தராதவர்கள் என்றால் கோபத்தில் அர்த்தம் இருக்கும். நாங்கள் எது செய்தாலும் திரையில் வரக்கூடாது என்றால் தணிக்கை குழுவினர் அருகில் அத்தனை அமைச்சர்களும் இருந்திருக்க வேண்டும். அராஜகத்தில் ஈடுபட்டு கொஞ்ச பெயரையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம். மக்கள் மனதை தான் காலா பிரதிபலிக்கிறார்.

 • c.k.sundar rao - MYSORE,இந்தியா

  Opinion expressed in print media are subject to moderation ,because it should not off the indivisuals or persons ,when such is the case how censor board have given certificate when movie directly criticised the government policy and offed a dead person.Movie producers and director should have more careful rather it has taken for granted that producer of the film is a family member of the priniciple opposition party and taken a stand that he care hoots for the any body. Rajini instead of defing the producer and director should have advised them to remove all the controversial scenes ,but preferred to justify saying it has passed by censors.I would like to emphasise that those who are in boardanger are not saint but rather ordinary human being and prone to whims and fancies.

 • P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  விஜய்யின் படங்கள் மக்களுக்கு அவர்களது சட்ட உரிமையை சொல்லிக் கொடுக்கிறது. அவரது ஒரு படம் தனி மனிதர்களின் சட்ட உரிமைகளையும் அரசாங்க ஊழியர்கள் மக்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதையும் தெளிவாக கூறியது. இப்போது அரசியல்வாதிகளின் பயமே மக்களின் இந்த விழிப்புணர்வு பற்றித்தான். விஜய் அரசியலில் துணிந்து காலடி எடுத்து வைக்கவேண்டும். இப்போதுள்ள அரசியல் வாதிகளுக்கு ஒரு பாடம் கற்பிக்கவேண்டும். மக்கள் ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும்.

 • C.Elumalai - Chennai,இந்தியா

  முருகதாஸ் ,ஒரு பத்திரிக்கை பேட்டியில், அம்மா இருந்திருந்தால்,இப்படத்தை தயாரிக்க மாட்டேன்,என்று கூறினார். அவருடைய, உள்நோக்கத்தை,புரிந்து கொள்ளமுடியும்.

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  சர்க்கார் படத்தின் காட்சிகளை நீக்க போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல் மிகுந்த கண்டனத்துக்குரியது. இந்த செயல் ரவுடி தனத்தின் உச்சம்.

 • C.Elumalai - Chennai,இந்தியா

  ரஜினியின் பார்வைக்கு தணிக்கை அனுமதி அளித்த 999, படத்திற்கு எதிராக போரட்டம் எதற்கு? உச்சநீதிமன்றம் உத்திரவுக்குபின், சபரியில், போராட்டம் ஏன்? உச்சநீதிமன்றம் ஜல்லிகட்டுக்கு தடை போட்டபின்,போராட்டம் எதற்கு? ரஜினிக்கு, எம்ஜியார் நடித்த,நேற்று இன்று நாளை படத்தில் ஒரேஒரு, பாடல்வரி, "மக்கள் நலன், மக்கள்நலன், மேடைதோறும் பேசுவார், தன்மக்கள் நலன் ஒன்றே மனதில் கொள்வார்''இப்படத்தை திரையிட்ட திரையரங்குகளில், வன்முறையை ஏவிவிட்டவர் உங்க கருணாநிதி. உலகம் சுற்றும் வாலிபன், படத்திற்கு திரையிட்டால் அசம்பாவிதங்களுக்கு பொறுப்பு இல்லை என கருணாநிதி கூறினார். படத்தின் சுவரொட்டிக்கு கடும் நெருக்கடி தந்தார், சுவரொட்டி இல்லாமல், படம் 150 நாட்கள் கடந்து ஒடியது. கருத்து சுதந்திரம் தேவையானது தான், அதே நேரத்தில் ஒருத்தர் மூக்கின் மீது விரல்படுவது,அது சுதந்திரமில்லை ,வன்முறையாகும்.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  சினிமாகாரனுக்கு பிரச்சனை என்றால் ஓடி வருகிறார்..மக்கள் பிரச்சனைக்காக போராடினால் தீவிரவாதி என்று சொல்லுவார்.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  ஏன்...ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்களை எல்லாம் தீவிரவாதிகள் என்று சொன்னது போல் அதிமுக காரர்களையும் தீவிரவாதிகள் என்று சொல்ல துணிவு இருக்கிறதா..இந்த பெரியவருக்கு...

 • Bhaskaran - Chennai,இந்தியா

  கலாநிதிமாறனுக்கு ஆதரவா தாத்தா குரல்கொடுக்கிறார்

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  கொழுப்பெடுத்தவர்கள் தான் ஏழை எளிய மக்களுக்கு இலவசங்கள் வழங்கி அவர்களின் அடிமட்ட தேவைகளை பூர்த்தி செய்வதை குறை கூறிக் கொண்டே இருக்கிறார்கள் . அதிமுக போராட்டம் நடத்துகிறது என்பதால் மட்டுமே இதை குறை கூற முடியாது . நல்ல விஷயங்களை எதிர்ப்பவர்கள் மக்கள் விரோதிகள். ரஜினி எப்போதும் மக்கள் விரோத கருத்துகளை ஆதரிப்பார்.இப்போது இதையும் ஆதரிக்கிறார்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வெளியே அப்படி சொன்னாலும் மனதுக்குள் சந்தோஷம் காரணம் சமீபத்திய இவர் படங்கள் ஊற்றிக்கொண்டதால் வந்த வயிற்று எரிச்சல்

 • kurinjikilan - Madurai,இந்தியா

  அதிமுக வின் இலவசங்களையும் லஞ்ச லாவண்யங்களையும் கிழித்தெறிந்த பட ம் ஏன் அதற்கெல்லாம் ஊற்றுக்கண்ணாக இருந்த திமுகவின் இலவச டிவி, மற்றும் ஏனைய ஊழல்களை கண்டுகொள்ளவில்லை ?. ஊழலில் பிறந்து ஊழலில் வளர்ந்து ஊழலிலே திளைக்கும் சன் டிவி குழுமம் ஊழலுக்கு எதிராக படம் எடுப்பதுதான் உச்ச கட்ட மோசடி..

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்" என்று சொல்வார்கள். அதிமுக வினர் யோக்கியமான அரசியல் நடத்தினால் யார் எப்படி படம் எடுத்தாலும் பயம் கொள்ள தேவையில்லை. ஆனால் ஊழல் பேர்வழிகளுக்கு "மடியில் கனம், அதனால் வழியில் பயம்".

 • lakshmimainthan - villupuram,இந்தியா

  தணிக்கை குழுவை கலைத்துவிட்டு ஆளும் வர்கத்திடம் அந்த அதிகாரத்தை கொடுத்து விடலாம்.

 • ஆப்பு -

  சென்சாருக்கு ஆட்டொ அனுப்பியிருக்கலாமே....அவிங்களே அனுமதித்த பிறகு தடுக்க இவங்க யார்?

 • VOICE - CHENNAI,இந்தியா

  அதிமுகவின் ரவுடித்தனம் அதும் ஒரு MLA தலைமையில். CCTV லட்சிகளை வைத்து நடவெடிக்கை எடுக்கவேண்டியது போலீஸ் பொறுப்பு . அதிமுக சென்சார் போர்டு முன்பு ஆர்ப்பாட்டம் செய்யணும் தவிர சினிமா அரங்கம் முன்பு அல்ல. சென்சார் போர்டு முன்பு செய்தால் ஆப்பு அடிப்பார்கள் என்று சினிமா அரங்கம் முன்பு ரௌடித்தனத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். மதுரையில் EPS OPS பேனர் கிழித்த அதே சட்டம் இங்கு வேலை செய்யுமா ?

 • moorthy moorthy - chennai,இந்தியா

  ரஜினி நல்ல மனிதர்.சட்டத்திற்கு உடன்பட்டு செயல்படுவார்.இங்கு எப்போதும் அந்த நல்லவரை கேவலப்படுத்தி எழுத்து போடுகிறார்கள்.

 • kulandhaiKannan -

  சென்சார் அனுமதி வழங்கிய பிறகுதான் 999 திரைப்படத்தைத் தமிழகத்தில் தடை செய்தோம். அதேபோல் அமைதிப்படை திரைபடத்தில் கோபால்சாமிஎன்ற பெயருக்கு எதிராக திமுக போராட்டம் நடத்தியது

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  தலீவரே...மருவாதையை கெடுத்துக்காதீங்க ....தயாரிப்பாளரோட மற்றும் இயக்குனரோட தீய உள்நோக்கம் பளிச்சுன்னு தெரியுது ...அதனால மௌனமா இருக்கறது நல்லது ...

 • கண்ணோட்டம் -

  ஜெயலலிதா இருந்தபோது வாயைத் திறக்க முடிந்ததா? தமிழ்நாட்டின் நலன் கருதி குறிப்பாக காவிரி நீர், ஸ்டெரிலைட் விவகாரம் இப்படி எதற்காவது இவரை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து இருக்கிறாரா அல்லது போராட்டம் நடத்தி இருக்கிறாரா? ஆன்மீகம் வேறு. நாட்டு நலனில் உண்மையான அக்கறை வேறு. இவர் மிகப் பெரிய சுயநலவாதி. கமலை காப்பி அடித்துக் கொண்டு இருக்கிறார். இவரை விட கமலை எவ்வளவோ பாராட்டலாம். குறைந்த பட்சம் தன் கருத்தை துணிச்சலாகவாவது தெரிவிக்கிறார். பாவம். சூப்பர் ஸ்டார் சூப்பராக தமிழகத்தை காப்பாற்ற போகிறார் என்று இவரை நம்பியும் ஒரு ரசிகர் கூட்டம் இலவு காத்த கிளிகளாக அலைந்து கொண்டிருக்கிறது! ஆனால் இவரோ சூப்பராக படமும் பணமும் பன்றிக் கொண்டு இருக்கிறார்!

 • Tamil Nesan - Chennai,இந்தியா

  சர்க்கார் நடிகருக்கும், இயக்குனருக்கும் மனமார்ந்த நன்றி. அத்தனை அரசு துறைகளிலும் ஊஷல் நடப்பதைத்தான் படத்தில் காட்டி இருக்கிறார்கள். ஏன் அரசு சரியாகத்தான் இயங்குகிறது என்றல் படத்திற்கு எதிர்ப்பு கட்டுவது விட்டு விட்டு, ஊர் ஊற்றாக மேடை போட்டு படத்தில் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்களேன். இது மக்களின் சார்பாக படத்தின் மூலம் உங்களுக்கு விடப்பட்டிருக்கும் சவால். (நான் விஜய் ரசிகர் இல்லை, பொது நலம் விரும்பிதான், கிளம்பிடாதீங்க...)

 • rajan. - kerala,இந்தியா

  திராவிட கட்சிகள் என்றாலே கூலிப்படைகள் தானே.

 • rajan. - kerala,இந்தியா

  திராவிட பாஷா கட்சிகள் என்றாலே கூலிப்படை தானே. இல்லை.

 • rajan. - kerala,இந்தியா

  திராவிட சுடலைக்கு ஊழல் பண்ணி பங்காளிகள் வித்தை புடிக்கும் ஆனால் அரசு ஊழல் பண்ணிட்டாங்க என்றால் புடிக்காது. அப்படி ஒரு போக்கிரிராஜா இவன்.

 • sivan - Palani,இந்தியா

  தயாரிப்பாளர்களே சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒப்புதல் கொடுத்து விட்டார்கள். நடுவில் இவர் என்ன?

 • கார்த்திக், வாஷிங்டன் -

  copy cat of Kamal...

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  படத்தை ஓட்ட SA சந்தரசேகரன் என்ன வேணுமுனாலும் செய்ய ரெடின்னு ரஜினிக்கு தெரியாதா?..... ரஜினி காலில் விழுந்த மனுஷன் நாளைக்கு ரஜினியிடமே கம்பு சுத்துவார்.....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement