Advertisement

பெட்ரோல் விற்பனை பொது கருத்து கேட்க முடிவு

புதுடில்லி : பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனை உரிம விதிகளை தளர்த்துவது குறித்து, பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.


பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை, பொதுத் துறையைச் சேர்ந்த, இந்தியன் ஆயில் கார்ப்., இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள் வைப்பதே சட்டமாக உள்ளது. தனியார் துறையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நயாரா எனர்ஜி, ராயல் டச் ஷெல் ஆகிய நிறுவனங்களிடம் மிகக் குறைவாகவே, பெட்ரோல் நிலையங்கள் உள்ளன.


எனவே, பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனையில், அதிக அளவில் தனியார் நிறுவனங்களை ஈர்த்து, சந்தையில் போட்டியை அதிகரிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், நுகர்வோர் பெரிதும் பயனடைவர் என்பதால், பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனை உரிமம் தொடர்பான விதிகள் தளர்த்தப்பட உள்ளன.


இது குறித்து ஆராய, பொருளாதார வல்லுனர், கிரித் பரிக், எண்ணெய் துறை முன்னாள் செயலர், ஜி.சி. சதுர்வேதி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விற்பனையில் தனியார் பங்களிப்பை அதிகரிப்பது தொடர்பான கருத்துகளை, பொதுமக்கள் இரு வாரங்களுக்குள் தெரிவிக்கலாம் என, பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது. இக்கருத்துகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் அறிக்கையை, உயர்மட்டக் குழு, 60 நாட்களில், மத்திய அரசுக்கு வழங்கும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (14)

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  முதலில் தினசரி விலை நிர்ணயம் என்ற முறையை மாற்றி மாதம் ஒருமுறை, அதுவும் பைசா இல்லாமல் முழு ரூபாயாக மட்டுமே விலை வைக்க வேண்டும்.

 • J.Isaac - bangalore,இந்தியா

  கருத்து கணிப்பா? இதுவரைக்கும் தேர்தலுத்தானே ஊடகங்கள் மூலம் நடத்தினார்கள் . திடீர் என்று ஏன் வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறது என்று புரியவில்லை ரிலையன்ஸூக்கு உதவி பண்ண இவ்வளவு நாள் மக்களை ஏமாற்றியிருக்கிறார்களே. மனசாட்சி இல்லாத ஜென்மங்கள்

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  தனியார் பஸ்களால் நடக்கும் அராஜகங்களால் கட்டணங்கள் விமான டிக்கெட் டை விட அதிகமாக ஆனதை பார்க்கிறோம். எல்லா தனியார் விமான நிறுவனங்களும் நஷ்டத்தில் ஓடுவதை பார்க்கிறோம். எல்லா தனியார் ஆன்லைன் வியாபார கம்பெனி களும் நஷ்ட த்தில் என்பதையும் பார்க்கிறோம். அவர்கள் 70% போலிகளை நம் தலையில் கட்டுவதையும் பார்க்கிறோம். இனி தனியார் பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் போட சொல்லி அரசு பங்க்குகளை காலியாக்கி அவற்றை தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு விற்று விடுவார்கள். இது நடந்ததும் .. அவர்கள் நினைத்தது தான் விலை அவர்கள் வைத்தது தான் சட்டம். இதையும் வரவேற்க சில ஆசாமிகள் இருப்பார்கள்.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  //இது குறித்து ஆராய, பொருளாதார வல்லுனர், கிரித் பரிக், எண்ணெய் துறை முன்னாள் செயலர், ஜி.சி. சதுர்வேதி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.// எப்படி மக்களை ஏமாத்தி பணம் பிடிங்க ஒரு திட்டம் அதுக்கு ஒரு சம்பளம் . இந்த திட்டம் யாருக்கு பலன் தரும் என்று ஆர்மபிக்கும் முன்னே சொல்லலாம் . 25 கோடிகள் மேல ஊழல் செய்தால் மரண தண்டனை கொடுக்கணும் .

 • Gopi - Chennai,இந்தியா

  இதெல்லாம் கொஞ்சம் காலம் ஒரு சில நன்மைகள் தந்தாலும், தனியார்கள் ஒன்று சேர்ந்து கூட்டு களவாணிகளாய் மாறுவது இயல்பே. ஓலா உபர் செய்யும் சர்ஜ் பிரைசிங் போல. அதற்க்கு பதில் virtual பாண்டுகளை விற்பனை செய்து இந்த வைப்பு தொகைக்கு ஈடான வட்டிக்கு பதில் . ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வாங்கும் நபர்களுக்கு அவர்கள் பதிவு செய்த வாகனங்களுக்கு மட்டும் அதுவும் ஒரு மாதத்திற்கு இவ்வளவு லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலுக்கு குறைந்த தொகை நிர்ணயம் செய்து பங்குகள் மூலம் வசூலிக்கலாம் . இதைப்போல நெடுஞ்சாலைத்துறையின் கீழ்வரும் சுங்க சாவடிக்கு விரிவு படுத்தலாம். . மேலும் இந்த வைப்பு தொகையை கொண்டு மின்சார வாகன உற்பத்தி மற்றும் கட்டமைப்புக்கு முதலீடு செய்யலாம்

 • RGK - Dharapuram,இந்தியா

  இதுல யாருங்க bsnl சிம் யூஸ் பண்றீங்க, அரசாங்க ஆஸ்பத்திரிக்கு போறீங்க கொஞ்சம் உண்மையா சொல்லுங்க பாக்கலாம் ....

 • ramanisubramanian - KOLKATA,இந்தியா

  தாமரை இல்ல. பிளாஸ்டிக் தாமரை...... மே 2019 அப்புறம் அவங்க ஆட்டம் காலி

 • tamil - coonoor,இந்தியா

  தனியார் பங்களிப்பை அதிகரிப்பது நன்மைக்குத்தான் போட்டி அதிகமானால் அதன் பலன் நிச்சயம் மக்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு, ஆனால் அரசு தனது பங்குக்கு பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவந்துவிட்டு அதன் பிறகு எதுவேண்டுமானாலும் செய்யட்டும்

 • rajan - erode,இந்தியா

  அம்பானியின் பங்க் லாபம் அடைய மறைமுக திட்டம். அம்பானிக்கு அச்சே தின்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நாலு வருஷமா இல்லாம இப்போ என்ன கருத்து கணிப்பு... மக்கள் காதில் தாமரையை வைக்க பார்க்கிறீர்களா...

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  போட்டி லாபத்தைக் குறைக்கும் . லாபம் குறைந்தால் தில்லுமுல்லு அதிகமாகும். மிரட்டலுக்கு பயந்து கட்சி மாநாடுகளுக்கு ஓசி பெட்ரோல் கொடுத்தபிறகு லாபத்துக்கு எங்கே போவது ?

 • Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ

  நல்ல ஏற்பாடு....அப்படியும் ஏதாவது தில்லு-முல்லு நடக்க சான்ஸ் உள்ளது. சர்வ தேச அளவில் வட அமெரிகா தான் பெட்ரோல் உற்பத்தியில் முன்னோடி. இங்கும் விலையில் அவ்வளவு வேறு பாடு இல்லை. அதிகம் பெட்ரோல் உற்பத்தி செய்யும் கலிஃபோர்னியாவில் ஜார்ஜியா, ஃப்லோரிட வை விட அதிகம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement