Advertisement

பட்டாசு குப்பை 96 டன் அகற்றம்

சென்னை: சென்னையில், நான்கு நாட்களில், 95.06 டன் பட்டாசு குப்பை அகற்றப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அடுத்து, இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க, தமிழக அரசு அனுமதி வழங்கியது. ஆனால், சென்னையின் பெரும்பாலான இடங்களில், விதிகள் மீறி பட்டாசு வெடிக்கப்பட்டது.இந்நிலையில், நவ., 5ம் தேதி முதல் வெடிக்கப்பட்ட பட்டாசு குப்பையை, நேற்று முன்தினம் முதல், மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.நேற்று வரை, 95.06 டன் பட்டாசு குப்பையை அகற்றியுள்ளனர். இதில், 58.97 டன் குப்பை, கும்மிடிப்பூண்டியில் உள்ள, தொழிற்சாலை கழிவுகள் மேலாண்மை நிறுவனத்தின், அபாயகரமான கழிவுகள் சேகரிக்கும் கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.தொடர்ந்து, பட்டாசு குப்பை அகற்றும் பணி, இன்றும் நடைபெறும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Manian - Chennai,இந்தியா

    அதிலிருந்து மிஞ்சாரம் தயாரிக்கலாமா என்று ஏன் எவருமே ஆராச்சிகள் செய்ய்ய வில்லை. எமக்கு உதவி செய்ய அம்பானி, அதானி மறுத்து விடடார்கள். எம்ன் என்றால் எனக்கு முன் அனுபவம் கிடையாது, அஞ்சு கோடி ரூபாய் கேரண்டி கொடுக்க ஆரும் இல்லை என்கிறார்கள். லஞ்சவியாதிகள் இதை செய்வார்களா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement