Advertisement

போலீஸ் டைரி 2

வீட்டில் நகை, பணம் திருட்டுஅம்பத்துாரைச் சேர்ந்தவர், மோகன் வம்சி, 30; தனியார் நிறுவன மேலாளர். சொந்த ஊருக்கு சென்றிருந்த அவர், நேற்று காலை, 8:00 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 5 சவரன் நகை, 30 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.மணல் கடத்திய இருவர் கைதுபட்டாபிராம், சார்லஸ் நகர் ரயில்வே கேட் அருகே, நேற்று காலை, போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது வந்த மினி லாரியை ஆய்வு செய்ததில், திருட்டு மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.ஓட்டுனரான, திருநின்றவூரைச் சேர்ந்த விமல்ராஜ், 31, மினி லாரி உரிமையாளரான பிரபாகரன், 49 ஆகியோரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ரூ.10 ஆயிரம், 3 சவரன் திருட்டுதிருநின்றவூரைச் சேர்ந்தவர், ராதாகிருஷ்ணன், 70. இவர், வெளியூர் சென்றுள்ள நிலையில், நேற்று காலை அவரது வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள், 3 சவரன் நகை, 10 ஆயிரம் ரூபாய், 'டிவி' ஆகியவற்றை, திருடிச் சென்றது தெரியவந்தது. திருநின்றவூர் போலீசார் விசாரிக்கன்றனர்.மடிக்கணினி திருட்டுராமாபுரத்தைச் சேர்ந்தவர், சந்தோஷ், 25; தி.நகரில் உள்ள மடிக்கணினி சர்வீஸ் சென்டரில் பணிபுரிகிறார். நேற்று மாலை பணி முடிந்து வந்த போது, வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள், மடிக்கணினியை திருடிச் சென்றது தெரியவந்தது. ராயலா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement