Advertisement

பொருளாதாரம் சீரானதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி பெருமிதம்!

புதுடில்லி : 'செல்லாத ரூபாய் நோட்டு திட்டம், நமது பொருளாதாரத்தை முறைப்படுத்தி உள்ளது; வரி செலுத்துவோர் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளது. இதன் மூலம் ஏழைகளுக்கான திட்டங்கள், கட்டமைப்பு திட்டங்களுக்கு அதிக நிதி கிடைத்துள்ளது' என, மத்திய நிதி அமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்தார்.


கடந்த, 2016, நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு திட்ட அறிவிப்பு வெளியானது. அதன்படி, 'புழக்கத்தில் இருந்த, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என அறிவிக்கப்பட்டது. அதற்கு மாற்றாக, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.


செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பின், இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, 'பேஸ்புக்' சமூகதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது: செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தால், நிறைய பலன்கள் கிடைத்துள்ளன. 2014, மே மாதம், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்றபோது, வரி செலுத்துவோர் எண்ணிக்கை, 3.8 கோடியாக இருந்தது. அது தற்போது, 6.86 கோடியாக உயர்ந்துள்ளது.


இந்த அரசு, 5 ஆண்டுகள் பதவி காலத்தை நிறைவு செய்யும்போது, வரி செலுத்துவோர் எண்ணிக்கை, இரு மடங்காக உயர்ந்துவிடும். செல்லாத ரூபாய் நோட்டு நடவடிக்கையால், பொருளாதாரம் முறைபடுத்தப் பட்டுள்ளது; அதிக வருவாய் கிடைத்துள்ளது. இந்த அதிக வருவாய் மூலம், ஏழை மக்களுக்கான திட்டங்கள், கட்டமைப்பு திட்டங்கள் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளன. இதனால், நமது மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.


ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறையும் அமல்படுத்தப்பட்டதால், வரி ஏய்ப்பு தடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மறைமுக வரியின் பங்கு, 4.4 சதவீதத்தில் இருந்து, 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது .செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தால், கறுப்புப் பணமும், வங்கிக் கணக்குக்கு வந்துவிட்டதாக, சிலர் விமர்சனம் செய்கின்றனர். சரியான தகவல் இல்லாமல் இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.



ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்வது அரசின் நோக்கமல்ல. செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தால், பொருளாதாரத்தை முறைபடுத்துவது, வரி செலுத்துவோர் எண்ணிக்கையை உயர்த்துவது உள்ளிட்டவைதான் அரசின் நோக்கங்கள். டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்பதும் முக்கிய நோக்கமாகும்.இதனால், அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்பது போன்ற பல பலன்களை நோக்கியே, இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.


பணத்தை கையில் வைத்திருந்தவர்கள், வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வங்கிக் கணக்கில் அதிக முதலீடு செய்த, 17.42 லட்சம் பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.வங்கிகளில் அதிக முதலீடு செய்யப்பட்டதால், வங்கிகளின் கடன் வழங்கும் திறனும் உயர்ந்துள்ளது. இதனால், பொருளாதாரம் சீரடைந்துள்ளது. இவ்வாறு, செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தால், பல்வேறு பலன்கள் நமக்கு கிடைத்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

வடுக்கள் மறையாது! செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பின், இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான, மன்மோகன் சிங் கூறியுள்ளதாவது: முறையாக திட்டமிடாமல், அவசர கோலத்தில் அமல்படுத்தப்பட்ட, செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தால், நாட்டின் பொருளாதாரமும், ஒவ்வொரு குடிமகனும் பாதிப்பை சந்திக்க நேரிட்டது. வயது, பாலினம், மதம், தொழில் என, எந்த பேதமும் இல்லாமல், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். காலங்கள் காயங்களை ஆற்றும் என்று கூறுவார்கள். ஆனால், இந்த விஷயத்தில் மட்டும், காலம் செல்ல செல்ல, பாதிப்பின் தாக்கம் அதிகமாக உள்ளது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் ஏற்பட்டுள்ள காயங்கள், வடுக்களாக மாறி, எப்போதும் அதன் பாதிப்பை உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. செல்லாத ரூபாய் நோட்டு திட்டம், நாட்டின், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி, பொருளாதாரத்திலும் அதன் தாக்கத்தை காட்டியது. இதனால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. சிறு, குறு தொழில்களில் ஈடுபட்டுள்ளோர், தொடர்ந்து பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஏன், எதற்காக கொண்டு வரப்பட்டது என்பது புரியாமல்அமலான இந்த திட்டத்தால், நாட்டுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டனர். இனியாவது, இதை உணர்ந்து, பலனளிக்காத புதிய முயற்சிகள், மக்களை பாதிக்கக் கூடிய நடவடிக்கைகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தொடரும் மர்மம்! பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு பல மோசடிகளை, ஊழல்களை செய்துள்ளது. ஆனால், நமது பொருளாதாரத்தின் மீது திட்டமிட்டு, சுயமாக மிக ஆழமான காயத்தை ஏற்படுத்தியது, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு மோசடிதான். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், எதற்காக, இந்த அறிவிப்பை வெளியிட்டார்கள் என்பது மர்மமாகவே உள்ளது. -அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முதல்வர், ஆம் ஆத்மி

சிலருக்கு லாபம்! ஒரு சிலரின் சொந்த லாபத்துக்காகவே, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. ஏழை, எளிய மக்கள், வியாபாரிகள், விவசாயிகள், வர்த்தகர்கள் என, நாட்டின் பெரும்பாலான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். ஒரு சிலருக்காக, பெரும்பாலான மக்களை வதைக்கும் இந்த அறிவிப்பு வெளியான நாள், நாட்டின் கறுப்பு தினம். -மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்கிரஸ்

காங்கிரசுக்கு, பா.ஜ., கேள்வி செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை விமர்சனம் செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு, பல்வேறு கேள்விகள் எழுப்பி, பா.ஜ., வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: ஊழலுக்கு எதிராக, பிரதமர் மோடி அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதை உடனடியாக காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் உயர்ந்துள்ள நிலையில், குறைந்துள்ளதாக மறுப்பு அரசியல் நடத்துவது ஏன். தொழில் செய்வதற்கு உகந்த நாடு, மிக வேகமான பொருளாதார வளர்ச்சி உள்ள நாடு என, பல உலக அமைப்புகள் பாராட்டி வரும் நிலையில், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எப்படி கூறுகிறது. ஊழல் மற்றும் மோசடி வழக்குகளில், பல அமைப்புகளால் விசாரிக்கப்பட்டு வரும், முன்னாள் நிதி அமைச்சர், சிதம்பரம் விமர்சனம் செய்வது கேலிக்குறியதாக உள்ளது. நமது பொருளாதார வளர்ச்சி குறித்து மற்ற நாடுகள் பாராட்டும்போது, காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அது தெரியாமல் போனது எப்படி. இவ்வாறு பல கேள்விகளை, பா.ஜ., எழுப்பியுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (38)

  • மணிமேகலை - paris ,பிரான்ஸ்

    யாருடைய பொருளாதாரம் ?????????????????

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    இந்த செய்தி க்கு எந்த பீஜேபீ வாசகராலும் ஆதாரத்துடன் பின்னூட்டம் போடவே முடியவில்லை பாவம். சும்மா சும்மா கட்டுமரம் சாடலை என்று பிதற்றி வைத்திருக்கிறார்கள்.

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    காங்கிரஸ் கட்சி பொருளாதாரம் பற்றி பேசினால் அது அந்த கட்சியின் பொருளாதாரம் பற்றி மட்டும் தான், நாட்டுப்பொருளாதாரம் பற்றி அல்ல. காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரம், நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையால் சீர்குலைந்துபோய் இருக்கலாம், அதனை அவர்கள் சொல்கிறார்கள், அவ்வளவுதான். நாட்டின் பொருளாதாரம் பற்றி கவலைப்படுபவர்கள் ஊரக வேலைவாய்வாய்ப்பு திட்டத்தை கொண்டு வருவார்களா? அது ஓட்டுக்காகவே கொண்டு வந்த திட்டம். அதனால் நாடு அடைந்த பயன் என்ன, அந்த திட்டத்திற்கு இன்றுவரை நாடு என்ன செலவழித்திருக்கிறது என்று தெரிந்தால் இது புரியும். அதே மாதிரி எம் எல் ஏ, எம் பி இவர்களின் தொகுதி மேம்பாட்டு திட்டமும் மகா மோசமான ஒரு திட்டமே. எம் பி களின் ஓட்டுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம் அது. ஒரு பேருந்து நிறுத்துமிடம் கட்டுவதற்கு எட்டு லட்சம் ருப்பாயாம், எங்கள் ஊர் எம் பி செலவழித்திருக்கிறார். நாற்பது ஆயிரம் ரூபாயில் அந்த வேலையை செய்ய முடியும். இதற்க்கு கணக்கு காட்ட வேண்டாம், ஆடிட் கிடையாது, இது எம் எல் ஏ, எம் பி களுக்கு மிகவும் வசதியாக போய் விட்டது. இதுதான் காங்கிரஸ் கலாச்சாரம்.

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    இந்திய பொருளாதாரம் திணறுவதாக எகனாமிக்ஸ் டைம்ஸ் எழுதியிருக்கிறது. RBI யின் ரிசர்வ் ஃபண்டை அரசு க்கு தர RBI கவர்னர் மறுப்பு. அந்த நிதியை கேட்கவில்லை என்று இப்போது அரசு ஜகா வாங்கி விட்டது. ஆனால் கவர்னருக்கு ஷோ காஸ் நோட்டீஸ் கொடுத்து விட்டது.

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    போனவாரம் தான், சீன வர்த்தகம் குறைந்தது. இந்தியா கவலை என்று செய்தி வந்தது.

  • Suri - Chennai,இந்தியா

    மோசமான முன்னுதாரணம் ஆகியிருக்கிறது இந்த பணமதிப்பிழக்க நடவடிக்கை. சிறந்த பொருளாதார மேதை ஒருவர் கூட இந்த நடவடிக்கை ஒரு நல்ல நடவடிக்கை என்று கூறவில்லை. பல்வேறு மேலாண்மை கல்வி கூடங்கள் இந்த பணமதிப்பிழக்க நடவடிக்கையை case study ஆக வைத்துள்ளார்கள், எந்த விதத்தில், எந்த நேரத்தில் இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும், அப்படி மீறி எடுத்தால் எப்படிப்பட்ட பொருளாதார இழப்புகள் ஏற்படும் என்றும் கற்று கொடுப்பதற்கு. மிக மிக சிறிய வெற்றி பெறுவதற்கு மிக மிகமிக பெரிய விலை கொடுத்துள்ளார் இந்த மோடி மஸ்தான். நடுத்தர ஏழை மக்களை கடும் பொருளாதார நெருக்கடியில் தள்ளி உள்ளார்.

  • pattikkaattaan - Muscat,ஓமன்

    எந்த நோக்கத்திற்காக பண மதிப்பு ரத்து செய்யப்பட்டதோ , அது சிறிதும் நிறைவேறவில்லை என்பதே உண்மை ..கருப்பு பணம் வைத்திருந்த எல்லா பண முதலைகளும் மிக சுலபமாக மாற்றிவிட்டார்கள் .. கர்நாடகாவில் நடந்த ரெட்டி சகோதரர்கள் வீட்டு திருமணமே இதற்க்கு சிறந்த உதாரணம் .. தமிழ்நாட்டில்கூட பலகோடிகள் புதிய 2000 ரூபாய் கைப்பற்றப்பட்டது , ஆனால் ரிசர்வ் வங்கியோ அந்த பணம் எப்படி சென்றது என்று தெரியாது மிகப்பெரிய ஆச்சர்யம் .. எனக்கு தனிப்பட்ட முறையில் ஒன்றும் இழப்பு இல்லை , என் மனைவி மக்கள் பல நாட்கள் பல ATM இயந்திரங்களுக்கு அலைந்தார்கள் ... நாட்டு நலனுக்காக தாங்கினோம், ஆனால் எவ்வளவு கருப்பு பணம் சிக்கியது என்று இதுவரை அரசு தெரிவிக்கவில்லை ..பெரிய ஏமாற்றம் எலிகள் தப்பிவிட்டன

  • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

    ஏம்பா ...தேசபக்த எதிர்ப்பாளர்களே...நோட்டு செல்லாதுன்னு சொன்னதாலதானே 17 .48 லட்சம் வங்கி கணக்குக்கு கருப்பு பொருளாதாரத்தில மஞ்சள் குளிச்சி கொண்டு இருந்த நோட்டு எல்லாம் திரும்பியது ...அதன் மூலம் கருப்பு பொருளாதாரம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு வங்கி சாராத ரொக்க பரிமாற்றத்தில் இருந்து வங்கி சார்ந்த பரிமாற்றத்திற்கு மாற முடிந்தது ...அப்படி ஆனதன் விளைவு வரி ஏய்ப்பிற்கு முற்று புள்ளி வைத்து வரி கட்டுபவர்கள் இரு மடங்கிற்கு மேலாக வரி வளையத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளனர் ...பொருளாதார நிபுணர்ன்னு பீத்திக்கிட்ட மக்கு மோகன் மற்றும் சிவகங்கை சீமானால் ஏன் இதை செய்ய முடியவில்லை ? உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வருமான வரி செலுத்துபவர்கள் 3 சதவிகிதம் என்பது நிர்வாக இயலாமையை காட்டுகிறது ..இதை வச்சி நாட்டை எந்த காலத்துல முன்னேற்றுவது ? மொத்த மக்கள் தொகையில் குறைந்தது 25 % வருமான வரம்பில் கொண்டு வந்தால் வருமான வரி விலக்கிற்கான தொகையை அதிகப்படுத்தலாம் ...சமசீரான வரி கொள்கை அமல்படுத்தலாம் ...GST கூட மற்றொரு மிகப்பெரிய வரி சீர்திருத்தம் ....நாட்டின் வளர்ச்சியில் 3 சதவிகித மக்களின் பங்களிப்பில் இருந்து தற்போது தான் 6 சதவிகித மக்களை கொண்டு வந்து உள்ளது மோடி ஜி தலைமையிலான அரசு ....இது இன்னும் அதிகமானால் நாடு பீடு நடை போடும் ...வளர்ச்சி அதிகரித்து ஏழ்மை அகலும் ...சுயநல போக்கு அதிகரித்து எதிர்மறையான எண்ணங்கள் எழுவது துரதிர்ஷ்டவசமானது ...

  • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம் பொருளாரத்தில் கடுமையாகப் பாதித்து, வேலைவாய்ப்பிலும், நிதிச்சந்தையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காலம் சிறந்த வலிநிவாரணி எனக் கூறுவதுண்டு. ஆனால் துரதிருஷ்டவசமாக, பணமதிப்புநீக்க நடவடிக்கையின் தழும்புகள், காயங்கள், இன்னும் தெளிவாக தெரிகின்றன.

  • J.Isaac - bangalore,இந்தியா

    அரசாங்கம் பண மதிப்பிழப்பு கொண்டாடுவது பெரிய முட்டாள்தனம் . நடுத்தர ஏழை மக்களை கேலி செய்வதுபோல் உள்ளது .

  • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

    பணமதிப்பீடு முடிந்தவுடன் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார் மஸ்தான் நாம் தான் வங்கி வங்கி யாக ஓடணும் முக்கியமா பெட்ரோல் விலை குறையும் என்றார் இப்போ இதை நிர்ணயிப்பது நாம் இல்லையாம் அரபிக் காரனாம் அப்படி என்று ஒரு பொருளாதார மேதை சொல்லி இருக்கிறார் இப்போ தேர்தலுக்காக தினம் பெட்ரோல் விலை குறைந்து வருகிறது இதை என்ன அராபியன் நிர்ணயிக்கின்றான் என்ன பிஜேபி பேச்சு முழுவதும் பொய்யில் கலந்த கலவை தான் நாட்டை அதல பாதாளத்தில் தள்ளி விட்டார்கள் மீண்டு எழ இன்னும் ஐந்து வருடங்கள் ஆகலாம்

  • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

    உயர் பண மதிப்பு நீக்கம் உண்மையிலேயே தேவையான ஒரு நடவடிக்கை தான். ஆனால், வங்கிகளில் இருந்த சில பல கருப்பு ஆடுகளால் இந்த திட்டம் முழுமையாக வெற்றியடைய முடியாமல் போய்விட்டது. முழு ஒத்துழைப்போடு அமல்படுத்தப்பட்டிருந்தால் அது நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கும்.

  • மணிமாறன் - trichy,இந்தியா

    கள யதார்த்தம் தெரிந்தும் ...நாலு வருடங்களாக இவர்களே இவர்களை பற்றி பெருமை பட்டு கொண்டிருப்பதுதான் மக்களை இவர்கள் மேல் இன்னும் வெறுப்பு கொள்ள செய்கிறது..அதன் விளைவு தான் கர்நாடகா தேர்தல் முடிவுகள்..இன்னும் வரும் தேர்தல்களிலும் மண்ணை கவ்வுவது உறுதி..அப்போதும் புத்தி வராதவர்கள்..புத்தி பெறாதவர்கள் இவர்கள்...

  • suresh - chennai,இந்தியா

    பொருளாதாரம் தான் தாறுமாறா இருக்கு. ரூபாயின் மதிப்பு பல்லை இளிக்கிறது. ஸ்டாலின் சொன்னது போல் இது 'நிகழ்த்தப்பட்ட பேரிடர்'.

  • Ramesh - Bangalore,இந்தியா

    Initial economic revolution was brought by Narasimha Rao (1991 to 96) and 2nd economic revolution is brought by Modi...Great steps towards Clean Economy

  • tamil - coonoor,இந்தியா

    உயர் பண மதிப்பு நீக்கம் மிகப்பெரிய பொருளாதார வல்லுநர்கள் பலராலும் குற்றம் தான் சொல்லப்பட்டது, ஆனால் மோடி அவர்கள் யாருடனும் கலந்து ஆலோசிக்ககாமல் தன்னிச்சையாக ரபேல் ஒப்பந்தம் செய்தது போல பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தார் அதன் பாதிப்பை வெளியே தெரியாமல் மூடி மறைக்கவே பி.ஜெ.பி முயல்கிறது, பல சிறு தொழில்கள் முடங்கிப்போனது, ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பை இழந்தது இதை யாராலும் மறைக்க முடியாது, வருமான வரி செலுத்துவோர் அதிகரித்திருப்பது ஒரு தொடர் நிகழ்வு, அதற்கு அரசு பெருமை கொண்டாட முடியாது, ஜி.எஸ்.டி இன்னும் தீர்ந்தபாடில்லை, அதுவும் அவசர கோலத்தில் செயல்படுத்தினார்கள், இந்த உயர்பண மதிப்பு நீக்கம் அதற்கு பிரதமர் சொன்ன காரணங்கள் எதுவும் நடக்கவில்லை, கருப்பு பணம் ஒழியவில்லை, அரசியல்வாதிகள் ஒருவர் கூட சிக்கவிவில்லை, காஷ்மீர் மற்றும் நக்சல் பகுதிகளில் தீவிரவாதம் குறையவில்லை, ஆனால் உண்மையை அரசு ஏற்க மறுத்துவருகிறது,

  • P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    பணமிழப்பு நடவடிக்கை நாட்டு மக்களுக்கு எவ்வாறு பயனாக இருக்கிறது என்பதை விளக்கமாக கூறவேண்டும். எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கை சாமானிய மக்களுக்கு எதிரானது, சிறு தொழில்களுக்கெதிரானது என்று பிரச்சாரம் செய்கின்றனர். இதையும் மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் குறிப்பாக தென் இந்திய மக்களிடம் இந்த பிரச்சாரம் சரியாக சென்றடைந்திருக்கின்றது. கர்நாடக தேர்தல் முடிவுகள் இதற்கான அடையாளம்.

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    ஜி டி பி வளர்ச்சி சாதனையளவாக எட்டு சதவீதத்தை தொடப்போகிறது என மன்மோகனின் முன்னாள் முதலாளி உலகவங்கியே சொல்கிறது .பணவீக்கம் பாதியாகிவிட்டது என்கிறது ஆனால் பணவீக்கம் அதிகரித்து ஜி டி பி குறைந்துவிட்டதாக ( வாங்கிய காசுக்கு? ) கூவுகிறார் மன்மோகன். பாரதியார் வாக்கு.. நினைவுக்கு வருகிறது படிச்சவன் பொய்ச்சொல்லி சூதும் பாவமும் பண்ணினால், போவான், போவான், ஐயோவென்று போவான்

  • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

    தரித்திரம் பிடிச்சவனுக. நல்ல வூட்டுக்குள்ள பேய் நுழைஞ்ச மாதிரி நாட்டையே நாசம் பண்ணிட்டானுக . இந்த ஜெட்லி ஒரு பாவம் . பதவிக்காகவும் பணத்துக்காகவும் கிளிப்பிள்ளை மாதிரி சவுண்ட் கொடுக்கறாரு. அவரு மாட்டேன்னு சொன்னா அந்த இடத்துக்கு இன்னொருத்தன். மோசடிகள் இருக்கும் வரை பொருளாதாரத்துக்கு இருண்ட காலம் தான்.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    நீங்க வேண்டும் என்றால் பெருமை படலாம்... ஆனால் மக்களுக்கு அது சிறுமைதான்

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    காங் ஆட்சியில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை, 3.8 கோடியாக இருந்தது. அது தற்போது, 6.86 கோடியாக உயர்ந்துள்ளது..அரசு நடவடிக்கைகளுக்கு பயந்து இதனை பேர் வரி கட்டத்துவங்கியுள்ளது கருப்புப்பணத்தைக் கட்டுப்படுத்துமே. இது கடத்தல் ஹவாலா இனத்தைக் கலங்கவைத்துள்ளது இங்கு வரும் கருத்துக்களால் புரிந்துகொள்ள முடிகிறது

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    வரி செலுத்துவோர் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளது..இது ஏழாவது ஊதிய கமிஷனின் விளைவு.,..

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    ராகுலின் சிக்கனம் யாருக்கும் வராது. ஒரே ஒரு நாள் கேமிரா முன் ஒரு இரண்டாயிரம் ரூபாய்த்தாளை மட்டும் மாத்தி அதனை வைத்தே ஜனவரி வரை குடும்பத்தை ஒட்டிய ஒரே ஆள் அவராய்த்தான் இருக்கும். அதுக்குப்பின்னாடி பேங்க் பக்கமே வரலை .மீதிநோட்டெல்லாம் ரகுராம் மாத்திக் கொடுத்துட்டாரோ?

  • Appan - London,யுனைடெட் கிங்டம்

    The demonetization is a criminal financial scam:... Rahul Gandhi...It may be true...Raghuram Rajan when he was the RBI governor had sent a note to PM Modi office about the fraud of NPA and willful defaulters. He wants government to initiate actions on them.Instead of taking action on the fraudsters Modi sack Raghuram Rajan and kept quit about the fraud case for more than three years..The money involved is not one or two thousand crore but 15 lakh crores. Now when CIC asked RBI about the follow up action, the RBI Governor wants to resign..Whose money it is..?..Poor public money.. It is not the way to run a country..People should woke up.....

  • Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா

    டிஜிட்டல் பரிவர்த்தனையை உங்களால் முழுமையாக கொண்டுவர முடியவில்லையே. முறையே ரூபாய் 500 மற்றும் 1000 ஐ ஒழிக்க வேண்டும், கள்ளப்பணத்தை ஒழிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி ஒன்றும் ஆகவில்லை. நவம்பர் 8 ஆகிய நேற்றுதான் கருப்பு பொருளாதார நாள். புதிய 2000 ரூபாய் வெளியான பிறகும் கருப்புப்பணமும், லஞ்சமும் நீடித்துக் கொண்டுதான் உள்ளது.

  • ஆப்பு -

    அச்சே தின் ஆனே வாலா ஹைன்... 2022க்குள்ள வந்துரும் ஹைன். வரலேன்னா 2026 க்கு வரும்னு சொல்லுவோம் ஹைன்...பொருளாதாரம் ஒசந்திருக்கு ஹைன்...ஆனா வங்கிகளிடம் பணம் இல்லை ஹைன். உர்ஜித் பட்டேலுக்கு சொன்னா புரியாது ஹைன்...அவரைத் தூக்கிட்டு வேற அல்லக்கைய கரிசர்வ் வங்கி கெவுனரா போட்டு, 1.20 லட்சம் கோடி வங்கிகளுக்கு கொடுத்து மக்களுக்கு கடன் குடுக்க வைப்போம் ஹைன்.. வாராக்கடன் அதிகமானா பரவாயில்லை ஹைன்.. பா.ஜ ஆட்சியில் கார்ப்பரேட்கள் நல்லா சுபிட்சமா இருக்காங்க ஹைன்...இப்பத்தான் பிரதமர் புது யோஜனா ஒண்ணு கனவு கண்டார் ஹைன்...அதுக்குள்ளாற ஒரு 75 கோடி பேர் பயனடைஞ்சுட்டாங்க ஹைன்..மீதி அடுத்த பதிவில் ஹைன்...

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    ஜெட்லி: "எங்களுக்கு வேண்டிய அனில் அம்பானி, விபுல் அம்பானி, ஸ்ரீஷா (அமித்ஷா மகன்) போன்ற ஏழைகளின் பொருளாதாரம் சீராக உள்ளது".

  • Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ

    மோடி அவர்கள் உசக்க பறக்கனும் என்று நினைக்கிறார்....மோடி எதிர்ப்பாளர்கள் ..இந்தியர்களுக்கு தரை பயண்மே போதும் என்கிறார்கள். மோடி பெரிய ...பெரிய உலக அளாவிய வியாபாரம் செய்து இந்தியாவை ஒசக்க தூக்கி வைக்கோனும் என்று நினைக்கிறார்... எதிர்ப்பாளர்கள் இப்போ இருப்பதே போதும், இந்தியர்கள் இப்படியே இருக்கட்டும் என்கிறார்கள். ஒரு கல்யாணம் அல்லது விழா நடத்தும் போது சின்ன தவறு நடக்க வாய்ப்பு உள்ளது. சாம்பாரில் உப்பு இல்லை என்று சம்மந்தி வீட்டு காரங்க கல்யாணத்தை நிறுத்துவது போல் உள்ளது.....எதிர் கட்சிகள் பேசுவது

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

    வேஷமக்காட்டினால் தான்பிடிக்கும் என்றால் மூணுமணிநேரம் படங்களிலே வீரம் பேசிட்டு நாலு காதல் பாட்டுக்கு நடனம் ஆடும் நடிகாலுக்குத்தான் நீங்க ஓட்டும் போடுவீங்களோ ஊழலளே தான் முன்னாடி இருந்த ஆட்ச்சியாளர்களின் தாரக மந்திரம் , நல்லாட்ச்சிக்கொடுக்க மோடி அரசு இவ்ளோபாடுபடுதே எது எதனால் கருத்துக்கூறும் அறிவுஜீவிகளுக்கு புரியலே கட்டுக்கட்டா ஆயிரம் ஐநூறு ரூபணநோட்டுக்களை கணக்கில்லாமல் பதுக்கினானுகளே உலகம் முழுக்க சொத்துக்கள் வாங்கி குவிச்சுருக்கானுகளே அதெல்லாம் பிராடு இல்லீங்களா ?//நேர்மையான அரசா நடந்துது ஊழலே இன்றி இன்று நடக்க ட்ரை பண்னுது பிஜேபி ஊழலே பிரதானமான இருந்து கணக்கில்லாமல் சொத்து சேர்த்த எதிரிகள் தானே மக்களுக்கு தேவை TRY TO UNDERSTAND . மக்களை கொள்ளை அடிக்கல் பிஜேபி என்பது உண்மை , அதுபொறுக்காமல் ஐய்யய்யோ அஞ்சிவருஷத்துலே அஞ்சாயிரம் கோடி காசுபோச்சு என்று எரிச்சல்லே எல்லா எதிரிகளும் கூவுறானுக என்பதுதான் உண்மை தமிழ்நாட்டுலே டாஸ்மாக் வருமானம் தான் MAIN INCOME என்று நிருப்பிச்சுட்டானுக இவ்ளோ இலக்கு வச்சு விற்று பல ஏழைகளுக்கும் இந்த தீவாளிக்கு அழுகையான தீவாளி பல ஏழைகள் வயத்துல வீட்டுலே துக்க தீவாளியேதான் வந்தபோனஸ் எல்லாம் டாஸ்மாக்கிலே கொட்டிருக்கானுக பாவிக, பலரின் மனைவிகள் வீட்டுவேலைக்கே போய்த்தான் குடும்பம்காலிலே சோறு போடுறாங்க மந்திரிகள் வெட்கமா இல்லே மந்திரிகள் நீங்கல்லாம் சுகமா சொகுசா மச்சுவீட்டுலே இருக்கீங்க ஆனால் காண்ராவி தொண்டர்களோ இருப்பது குப்பத்துலே

  • Shanu - Mumbai ,இந்தியா

    டிசெம்பர் முதல் வாரத்திலிருந்து, இந்தியாவின் பணமதிப்பு மேலும் குறையும். நம் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டார் மோடி. அறிவு இல்லை. ஷோ காட்ட மட்டும் தெரியும். டீ ஆத்தினவருக்கு என்ன அறிவு இருக்கும்/?/உண்மையான இந்தியன் இதற்க்கு ஒத்துக்கொள்ள வேண்டும். பிஜேபி அரசு பதவி விலக வேண்டும். அப்போ தான், இந்தியா முன்னேறும்.

  • விருமாண்டி - மதுரை,இந்தியா

    மீண்டும் பாஜக அரசு வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement