Advertisement

தேடப்படும் குற்றவாளியாக நிரவ் மோடி

ஆமதாபாத் : வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, பிரபல வைர வியாபாரி, நிரவ் மோடியை, தேடப்படும் குற்றவாளியாக, குஜராத் நீதிமன்றம் அறிவித்துள்ளது.


பிரபல வைர வியாபாரியான, நிரவ் மோடி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளின் துணையுடன், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார்.


சுங்க வரி ஏய்ப்பு தொடர்பாக, நிரவ் மோடி மீது, குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ஆஜராகும்படி, நிரவ் மோடிக்கு உத்தரவிடப்பட்டது. வழக்கு இன்று(நவ.,8) விசாரணைக்கு வந்த போது ஆஜராகாததால், நிரவ் மோடியை, தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


இதன் மூலம், இனி, எந்த வழக்கிலும், நிரவ் மோடி முன்ஜாமின் கோர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (25)

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  ரேஷன் கார்டை முதலில் முடக்குங்கள், சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தானாக வந்து சரணடைந்து விடுவான்

 • Darmavan - Chennai,இந்தியா

  இந்த மாதிரி எந்த ஆதாரமுமில்லாமல் கடன் கொடுத்தவனை பழிக்காமல் மோடியை குற்றம் சொல்லும் தேச துரோகிகள் நாட்டின் எதிரிகள். லஞ்சம் வாங்கிக்கொண்டு கடன் கொடுத்த வாங்கி அதிகாரிகள்தான் ரகசியத்தை வெளியிட்டு அவர்கள் ஓடிப்போக உதவியவர்கள். மோடி இல்லை.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  மோசடிப் பேர்வழிகளை வங்கியதிகாரி யாக்கியது காங் அரசு .இப்போ அவங்க துணையோடு ஆட்டயப்போட்டு தப்பிச்சா நரேந்திர மோடி பின்னாடி ஓடிப்போய் தேடணும். இதுவே காங் ஆட்சியா இருந்தா சோனியா ஆசியோட தைரியமா இங்கேயே இருந்திருப்பாங்க .1840000000000 நிலக்கரி ஊழலில் அஞ்சுபேர் தண்டனை பெற்று கம்பி எண்ணுறாங்க ஆனால் அப்போ நிலக்கரி மந்திரியாயிருந்து மவுனமா இருந்த மன்மோகன் வெளியில் தைரியமா சுத்தறாரு

 • mosadi nesan - ahmedabad,இந்தியா

  ஊழல் வழக்குல சிபிஐ தேடுற இப்ப நேத்தைக்கு காணாம போன முன்னாள் பிஜேபி மினிஸ்டர் ரெட்டி உங்க கூட தான் இருக்காரா ?

 • srikanth - coimbatore,இந்தியா

  2016 ல Mallaya வையும் தேடப்படும் குற்றவாளியாக தான் அறிவிச்சாங்க . இன்னி வரைக்கும் தேடிகிட்டே இருக்காங்க . போன மாசம் இதோ கொண்டு வந்துட்டோம் இன்னு பூச்சி காண்பிச்சாங்க . அவரு சுதாரிச்சிகிட்டு FM கிட்ட சொல்லிட்டு தான் போனேன் இன்னு சொன்னதும் அடங்கிட்டாங்க . இப்ப அவரை பத்தி பேசறதே இல்லை. கொஞ்ச நாளைக்கு நீரவ் மோடி. அப்புறம் மெஹுல் கோஸ்கி. மோடிக்கு பதிலா அத்வானி PM ஆ வந்திருந்தா இது எல்லாம் நடந்திருக்கவே நடந்திருக்காது

 • POORMAN - ERODE,இந்தியா

  கவனியுங்கள். ஓடுறவர்கள் பெரும்பாலும் குஜராத்தில் மோடி முதன் மந்திரியாக இருந்தபோது கடன் வாங்கியவர்கள். அவருடன் வெளிநாடுகளுக்கு ரகசிய பயணம் செய்தவர்கள். ஏதோ ஒரு இடத்தில் சந்தேகம் வருவதை தவிர்க்க இயலவில்லை.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அவர் மரணிக்கும் வரை தேடும் குற்றவாளியாக இருப்பார்

 • Bala - madurai,இந்தியா

  அடப்பாவிங்களா, இப்போ தான் இதேயே செய்யுறீங்களா .. சுத்தம்

 • அருணா -

  தப்பித்து ஓடும் போதே குற்றவாளி என்று தெரிந்து விட்டது. இருந்தாலும் நீதி மன்றம் கூறி விட்டதால் தப்பிக்க கூடாதவராகி விட்டார்.. கரன்ஸி எண்ணியவர் கம்பி எண்ணட்டும் உள்ளே வசதி இல்லாமல்.

 • Christopher -

  இதுவே ஒரு சாதாரண மனிதன் கடன் வாங்கி கொண்டு ஓடி இருந்த சும்மா விடுவார்களா,

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  சென்னையில் இந்தியன் வங்கியில் இரவோடு இரவாக பணத்தை மாற்றி இந்த உலகத்தை விட்டு சென்றவரை என்ன செய்ய போரேல்.......அவரின் சொத்துக்களை..........

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  ஒரு வாரத்தில் நாடு திரும்பவில்லையென்றால் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கவேண்டும்... தன்னால வந்து நிப்பான் அயோக்கியன்...

 • spr - chennai,இந்தியா

  இதுதான் சரியான வழி அவரது சொத்துக்கள் அனைத்தையும் (உடன் உதவிய அனைவரது சொத்துக்களும் கூட பறிக்கப்பட வேண்டும் அவர் இந்திய எல்லையினை மிதித்தால் விசாரணையின்றி கடுங்காவல் தண்டனை என்று கூட அறிவிக்கலாம் அவரை இந்தியா கொண்டு வந்து விசாரித்துத் தீர்ப்புக் கூறுவதெல்லாம் இந்த தலைமுறையில் நடக்கப்போவதில்லை எனவே மேற்கொண்டு இதற்காக செலவழிக்காமல், நிறுத்திக் கொள்ளலாம் இவர் மட்டுமல்ல இது போன்ற குற்றம் செய்து வெளிநாட்டுக்கு ஓடிய அனைவருக்கும் இந்த வழியே சரியான ஒன்று நமக்குத் தேவை கொள்ளையடித்த பணத்தைத் திரும்பப்பெறுவது மேலும் கொள்ளை நடக்காமல் தடுப்பதுவே இதில் தொடர்புடைய வாங்கி அதிகாரிகளின் சொத்துக்களையும் பறிப்பதோடல்லாமல், அவர்களுக்கான ஒய்வு ஊதியமும், அவர்கள் மேல் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை கிடையாது என்றும் அறிவிக்கலாம் மேற்கொண்டு தவறு நடப்பது கொஞ்சம் குறையும்

 • Balakrishnan Gurumurti - Boston MA,யூ.எஸ்.ஏ

  ப்ரோப்ளேமிஸ் என்ன வென்றால் மோடி சர்க்கார் அவருக்கு அவ்வளவு பணம் வழங்கும்படி உத்தரவே கொடுத்திருக்கவேண்டும் அதனால் நீதி மன்றம் நரேந்திர மோடியும் ஆஜராகும்படி உத்தர வையும் பிறப்பித்திருக்கவேண்டும் என் யோஜனை. நான் இந்த மோடியும் கையாடலில் இருக்கலாம் என்ற சந்தேகம்.

 • HSR - Chennai,இந்தியா

  அப்போ இவனுக்கு கடன் குடுக்க சொன்ன காங்கிரஸ் தலைவர்களை எப்படி அழைக்கப் போகிறீர்கள்?

 • ஆப்பு -

  அடப்பாவிகளா...அப்புடீன்னா இப்போ வரை அவர் உத்தமரா? சூப்பர் காமெடி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement