Advertisement

மோடி அரசு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை: ப.சிதம்பரம்

புதுடில்லி: மோடி அரசு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பண மதிப்பிழப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: மோடி அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. பண மதிப்பிழப்பிற்கு பின்னர் பொருளாதாரம் வலுவிழந்து விட்டது. 2016 க்கு பின்னர் நடந்த தேர்தலில் பா.ஜ., தோல்வியை சந்தித்துள்ளது. தற்போது கர்நாடக இடைத்தேர்தல் முடிவும் அதனையே காட்டுகிறது. கள்ள நோட்டை ஒழிக்க முடியவில்லை. கறுப்பு பணத்தை ஒழிப்பதாக கூறினாலும் பண மதிப்பிழப்பால் கறுப்பு பணம், நல்ல பணமாக மாற்றப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு உள்ளிட்ட எந்தவொரு வாக்குறுதியையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (28)

 • madhavan rajan - trichy,இந்தியா

  அப்போ காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது ஊழல் செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு வந்தா அதை நிறைவேற்றினீர்கள்? சொல்லவேயில்லே ....................

 • Gopi - Chennai,இந்தியா

  நீங்கள் எதற்கும் RBI கொடுத்த அறிக்கையை படிப்பது நல்லது. அதில் பண மதிப்பிழப்பில் ஒரே தவறு என்னவென்றால் கருப்பு பணம் தங்கம் , மற்றும் அசையா சொத்துக்களாய் இருப்பதால் அதை வெளிக்கொணர முதலில் மத்திய அரசு திட்டம் தீட்டவேண்டும் என்று பரிந்துரைத்தது. இதை ஏற்று மோடி அரசாங்கம் ஆதாரோடு அசையா சொத்துக்களை இணைத்திருந்தால் இன்று நிறைய தேசபக்தர்களின் கடகால் ஆட்டம் கண்டிருக்கும்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நாங்க ஓட்டுதான் கேட்டோம்... நீங்க போட்டீங்க... உங்க புண்ணியத்தில் உலகை சுற்றி பார்க்கிறோம்

 • வேலங்குடியான் - Karaikudi,இந்தியா

  ப.சியும் பப்புவும் எங்கயோ பதுக்கி வெச்சதை வெளிய எடுக்கமுடியாம பேட்டிக்கு பேட்டி முக்கிகிட்டு மொனங்கிகிட்டு இருக்கானுங்க..... ஐயோ பாவம்....

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  எப்படி இருந்த முகம் எப்படி மாறிவிட்டது பார்த்தீர்களா. சிரித்திருந்த அன்றைய முகம் இன்று வாடுவது ஏனோ? கேஸ் கள் தான். ஒரு வேளை மாட்டிவிட்டாரோ.

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  Other than The many ways of public suffering which last for even 6 months, who will answer for the lives lost during that operation? 2. Modiji has suggested 'pakoda business' to face unemployment What else can we expect from him?

 • Indhuindian - Chennai,இந்தியா

  Demonetization was a bold, strong and strategic economic decision unparalled in our economic and fiscal administration. No doubt the common men were put to inconvenience. But the benefits are more than commensurate with such difficulties. No common man was affected by this except the inconvenience of finding hard to withdraw cash from the Bank and their accounts. But the black money holders and their benamis saw their il gotten wealth forced to come public and had to deposit them in the bank and subject themselves to tax and penalties. That the currencies left unreturned to RBI is small and hence there was no black money in the tem was totally fallacious. The black money holders had two options- either deposit them in the bank and subject them to tax and happily enjoy the residual money or entirely forego their entire cash holding. Prudent as they were, they were adept to changes also and had deposited them in the bank either directly or through their benamis. By this process, almost the entire ill gotten cash holding received legitimacy as per the law of the land. Income Tax department has gone behind those who had deposited huge sums of money disproportionate to their known sources of income and tax paid thereon. The number of such cases is so large it would take years to assess them and legitimize such deposits. Quantum theory of money has come into play and dramatically changed the money in circulation and the ill effects of the velocity of such black money. Not that the economist like the former Prime Minister Mr Man Mohan Singh and the Nobel Laureate Mr Amartya Sen do not know this. But such is their envy of the credit given to Mr Modi and their hatred towards to him make them ly come out criticise the move to curry out favour from their political bosses. It is sad and paradox that the intellectual dishonesty is exhibited such brazenly

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  ஒருவிதத்தில் உண்மை தான். பெரும் ஊழல் பெருச்சாளிகள் அப்பா மகன் மனைவி என்று இன்னமும் சட்டத்திலிருந்து தப்பித்து கொண்டே இருக்கிறார்கள். விரைவில் பிடித்து உள்ளே போடாமல் வைத்திருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்த உடனேயே ஊழல் வாதிகளுக்கு தண்டனை பெற்று தருவேன் என்று கூறினாரா? ஆனால் அதை அவ்வளவு சுலபமாக செய்து விடமுடியாதபடி நன்கு விழுது பரப்பி வளர்ந்து விட்டவர்கள் ஊழல் அரசியல்வாதிகள். . எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். மலரின் வாசகர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள விழைகிறேன். முட்டை கண்ணாடி போட்ட அரசியல் வாதிகளை நம்பலாமா நம்பக்கூடாதா?

 • rajan. - kerala,இந்தியா

  ஏம்பா கல்லாப்பெட்டி உன் வருமானவரி கணக்கையே உருப்படியா படிவத்தில் நிரப்ப தெரியல உனக்கு. நீ போயி என்ன புதுசா பூ சுத்துற. நாட்டின் மொத்த பொருளாதாரத்தையும் கூட்டா சேர்ந்து ஏப்பம் விட்டு விட்டு மக்களை படுகுழியில் தள்ளிவிட்டு நானும் உ.பொ. நிபுணன் என பீலா உட்டுக்கிட்டு திரியுற நீ. உனக்கெல்லாம் வேற பொழைப்பே இல்லையோ. ஆம் உன்னை தான் எவனும் எங்கேயும் உள்ள ஏத்த மாட்டங்களே.

 • rajan. - kerala,இந்தியா

 • ஆப்பு -

  ப.சி க்கு விவரமே பத்தலை. அவுருதான் 15 லட்சம் போடறேனு சொல்லவே இல்லியே..அவ்வளவு கருப்புப் பணத்தையும் கைப்பத்துவோம்னாரு... கைப்பத்திட்டாரு...அதை நம்ம கிட்டே குடுக்க அவருக்கு பைத்தியமா? அவரும் உங்கள மாதிரிதான்....காசுல கெட்டி...நீங்க நாட்டுக்கோட்டை வியாபாரி... அவுரு குஜராத் பிசினஸ்மேன். ஆனா, மக்கள் எல்லா இடத்திலும் ஒண்ணுதான்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  நீர் நிதியமைச்சராக இருந்து மக்களுக்கு என்ன நன்மைசெய்தீர் முதலில் அதை சொல்லும்

 • JSS - Nassau,பெர்முடா

  உங்கள் ஆட்சி எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியது. gariibi hatao என்ன ஆயிற்று?

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா

  அட... கறுப்புப் பணத்தை எல்லாம் வெள்ளையா மாத்திட்டீங்களா.....??? அது எப்படி....??? மோடி சப்போர்ட் இல்லாம பண்ணியிருக்க முடியாதே.....??

 • Muruga Vel - Chennai,இந்தியா

  பாவம் பசி

 • ஆப்பு -

  ப.சி.யையும், காங்கிரசையும் எனக்கு பிடிக்காதென்றாலும், அவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. நோட்பந்தி வரும் முன்னேயே, கருப்புப் பணம் டாலர், யூரோ, பவுண்டாக மாற்றப்பட்டு வெளிநாடு சென்றுவிட்டது. இதில் பாதிக்கப் பட்டவர்கள் நாயாய் அலைக்கழிக்கப் பட்ட பொதுமக்கள், மற்றும் அயல்நாடுகளில் வாழ் இந்தியர்கள். எனக்கு மட்டும் 60000 ரூவா நஷ்டம். பொதுமக்களின் வயத்தெரிச்சல் சாபமாக திரும்ப வரும்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வாக்குறுதியா ...அப்பிடி என்றால் என்ன சாமி

 • கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா

  உங்களிடம் இருக்கும் 500,1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்துவிட்டு.... புதிய 500,மற்றும் 2000 நோட்டுகளை பெற்றுக் கொள்ளுங்கள் அப்படினு சொன்னா.... கொடுத்து மாத்தீட்டு இவர்கள் வேறு வேலையை பார்க்க போக வேண்டியது தானே.... அது ஏன் ஏதோ திதி கொடுக்கிற மாதிரி தேதி பார்த்து ஒப்பாரி வச்சுக்கிட்டு இருக்காங்க..... தேள் கொட்டுனா திருடர் எப்படி கத்துவார் ன்னு, நம்ம ப. சி. யை பார்த்து தெரிந்துகொள்ளலாம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement