Advertisement

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் நிருபர் வாக்குவாதம்

வாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகையில், அதிபர் டிரம்ப்பிற்கும் சி.என்.என்., நிருபர் ஜிம் அகோஸ்டாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவருக்கு வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.


வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பின் போது சி.என்.என்., தொலைக்காட்சியின் செய்தியாளர் அகோஸ்டா, அகதிகள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த டிரம்ப், அமெரிக்காவை ஆட்சி செய்ய விடுமாறு செய்தியாளரிடம் கூறினார். இதன் பிறகும் அகோஸ்டோ தொடர்ந்து கேள்வி எழுப்ப முயன்றார். இதனால் கோபம் அடைந்த டிரம்ப், கேள்வி எழுப்பியது போதும்எனக்கூறி, அமருமாறு அகோஸ்டாவை வலியுறுத்தினார். ஆனால் அவர் தொடர்ந்து கேள்வி கேட்க முயன்றதால் ஒரு கட்டத்தில் பதில் அளிக்க மறுத்து டிரம்ப் நகர்ந்து சென்றார். பின்னர் திரும்பி வந்த டிரம்ப் அகோஸ்டாவை பார்த்து மக்களின் எதிரி என்று விமர்சித்தார்.


இதனை தொடர்ந்து அதிபரின் செய்தியாளர் சந்ததிப்புகளுக்கு அகோஸ்டாவுக்கு அளிக்கப்பட்டு வந்த அனுமதி ரத்து செய்யப்பட்டது.இது தொடர்பாக, வெள்ளை மாளிகை செயலாளர் சாரா சண்டர்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ஜிம் அகோஸ்டா தன்னை தடுக்க முயன்ற வெள்ளை மாளிகை பெண் ஊழியர் மீது கை வைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.இதனை மறுத்துள்ள அகோஸ்டா, தன் கையிலிருந்து மைக்கை பறிக்க முயன்ற ஊழியரை தடுத்ததாக பதிலளித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (26)

 • tamil - coonoor,இந்தியா

  அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு அங்கே அதிபரையும் கேள்வி கேட்க முடியும், நமது நாட்டில் முடியுமா, சந்திக்கவே முடியாது, அப்படியிருக்க கேள்வி எங்கே கேட்பது, இது தான் நவீன இந்தியாவில் இன்றைய நிலை,

 • rajan - erode,இந்தியா

  அமெரிக்காவில் அதிபரை எதிர்த்து பேசியவருக்கு தடை மட்டுமே. பிஜேபி ஆட்சியில் தேச துரோக வழக்கு,

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  ஊடகங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் எல்லா விதத்திலும் மட்டம் தட்டுவார்கள்.. இதை தான் 'சாப்ட் வார் 'என்பார்கள்..உதாரணத்திற்கு இப்போ நடந்த அமரிக்க தேர்தலில் ஊடகங்கள் டிரம்பை ஆதரிக்கவில்லை..எல்லா வழிகளிலும் மட்டம் தட்டினார்கள்..தேர்தல் முடிவுகளை டெமசரட்டிகளை பசசை நிறத்திலும் , ரிபப்லிக்கர்களை சிகப்பு நிறத்திலும் போட்டார்கள்..சிகப்பு நிறம் மனிதர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் நிறம்..அதோடு அந்த நிறத்தை பார்த்தாலே மக்கள் பயப்படுவார்கள்..இப்படி டிரம்பை படாத படுத்துகிறார்கள்..இதனால் இந்த தேர்தலில் ரிபப்ளிகன் தோல்வியை தழுவினார்கள்..செனெட்டில் மட்டும் தக்க வைத்து உள்ளார்கள்..கவர்னர்கள். அசெம்பெளியில் தோற்றார்கள்.இது தான் பேனா வாளை விட அதிகம் சக்தி வாய்ந்தத்து என்பார்கள்..பொருளாதாரத்தில் நோபல் பரிசு .பெற்ற ஒரு மேதை சொல்கிறார் அமெரிக்கா டிரம்பால் சரிவடைகிறது..இதை சரிக்கட்ட அவர்கள் 50 ஆண்டுகள் போராடவேண்டும் என்கிறார்..அமெரிக்காவின் டிரம்ப் பதவிக்கு வந்ததது மற்ற நாடுகளுக்கு ஒரு பாடமாக இருக்கணும் என்கிறார்..காழ்ப்பு உணர்ச்சி, , துவேசம்,, தான் என்ற அகந்தை,எல்லாம் எனக்குதான் .போன்ற சித்தாந்தங்களை போற்றினால் சமூகம் உடைந்து விடும்..இப்போ அமெரிக்கவில் அது தான் நடக்கிறது.. இந்தியாவும் பிஜேபியால் அந்த திசையை நோக்கி போகிறது..மக்கள் விழிப்பு பெற வேண்டும்..

 • ggg - india,இந்தியா

  at boochimarunthu ambal siva vishnu have all expressed their anger. A perfectly evolved human on earth, even a mahan also expresses anger at times. reasons differ. But his sincere spiritual practice will not leave him. life after life it will drag him towards god until he or she merge with God, a permanent happiness, either after death or while being in body. It is santana dharmam. It was the wide objective of India before any invasion

 • joy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அக்கோஸ்டா ஒரு ஆண்டி அமெரிக்கன்

 • And - India,இந்தியா

  இந்த உலகம் மனோ மயமானது என்கிறார் ரமணர். அதை தெரிந்தோ தெரியாமலோ maximum perception வண்டி ஓட்டுவது America.

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  இதற்கெல்லாம் பயந்து தான் மஸ்தான் இதுவரைக்கும் வாரா வாரம் மங்கி பாத் செய்வாரேயொழிய ப்ரீஸ் மீட் வைக்கவேமாட்டார் அவ்வளவு தைரியம், இவருக்கும் கோமளவல்லிக்கும் பிரஸ் மீட் என்றால் பயம் பயம் பயம் தான்

 • JSS - Nassau,பெர்முடா

  இந்தியாவில் பேட்டி என்பது ஒருவித விளையாட்டு. சீரியஸ் kelvi கேட்கமாட்டார்கள் சீரியஸ் பதிலும் தரமாட்டார்கள்

 • rain - india,இந்தியா

  One journalist recently said being neutral is difficult. of course it is. You have to be a spiritual, religious person for the mind to get close to divinity in you. then only you can handle favourable unfavourable like dislike known person unknown person etc matters with neutral view. else you will seek outside support for your view

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பெண் என்றாலே வில்லங்கம்தான்

 • ARUN.POINT. BLANK -

  ippo breaking news thupaaki soodu.. yaarunu theriya Varum ..

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  இதெல்லாம் ஜெயாவிடம் ஒருவன் செய்திருந்தால் அவன் மர்மமான முறையில் காணாமலே போயிருப்பான்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  பிழைக்கத் தெரியாத டிரம்ப். நம்ம கட்டுமரக் குடும்பத்தார் போல ஜால்றா நிருபரிடம் முன்கூட்டியே கேள்விகளை சொல்லிக் கொடுத்து அதற்கு தானே பதிலும் சொல்லும் கேள்வியும் நானே பதிலும் நானே பிரியாணிக்கூட்டம் நடத்தினால்தான் அரசியல் வியாதிக்கு அழகு.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  காசுக்கு ஏவிவிடப்படும் ஏவல் பத்திரிக்கையாளர்கள் அங்கே விட இங்கு பாரதத்தில் மிக அதிகம். காசேதான் கடவுளடா என வாங்கின காசுக்கு அபவாதமாய் அபத்தமான கேள்விகேட்பார்கள் . திருப்திகரமாக பதில்சொனாலும் விடமாட்டார்கள் அந்த அர்பன் நக்ஸல்போன்ற விடாக்கண்டன்கள். மற்ற நேர்மையான நிருபர்களையும் கேள்விகேட்க விடமாட்டார்கள் . அவர்களது நோக்கமே நிருபர் கூட்டத்தையே அர்த்தமில்லாமலடித்து பேட்டியளிக்கும் வி. ஐ பி. ஐ நோகடிப்பது தான். இதனை நன்கறிந்துதான் இந்த காசுக்கு கேள்வி கேட்கும் கூட்டங்களை மோதி தவிர்க்கிறார். ஒரு பிரதமரின் நேரம் வீணாவது நாட்டுக்கு நல்லதல்லவே . (நேர்மையான நிருபர்கள் மன்னிக்கவும்). தவறு 1%கூட அவருடையதல்ல.

 • Vere - India,இந்தியா

  America is a media managed country. India is trying to evolve like that one....

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  நம் பிரதமர் மோடிஜி இதற்குத்தான் பத்திரிகையாளர்களையே சந்திப்பதில்லை

 • Bhaskaran - Chennai,இந்தியா

  நம்ம ஊர் கருணாநிதி மாதிரி செய்தியாளர்களிடம் நடந்துகொண்டு இருக்கிறார் டிரம்ப்

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  மோடி இதனால தான் பயந்து பத்திரிகை யாளர் சந்திப்பை நடத்துவது இல்லை . அமெரிக்க ஜனாதிபதியை கூட கேள்வி கேட்க முடியும் , ஆனால் ஏழை தாயின் மகன் என்று சொல்பவரிடம் ஒரு கேள்வி கேட்க முடியாது .

 • அப்பாவி - coimbatore,இந்தியா

  இந்தியாவில் புகைப்படம் எடுக்கும் இடையில் வந்தாலே நடவடிக்கை எடுக்கப்படும்

 • Natesan Narayanan - Sydeny,ஆஸ்திரேலியா

  நான் தொலைக்காட்சியில் பார்த்தேன் . வெள்ளை மளிகை பெண் சி ன் ன் நிருபரிடம் மைக்கை பிடுங்க முயன்றார் , இவர் பிடுங்க விடவில்லை . இது தான் நடந்தது . ட்ரும்ப் தன் பதவிக்கி தகுந்த மாதிரி நடந்துகொள்ள வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement