Advertisement

சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல் : 5 பேர் பலி

தாண்டேவாடா: சத்தீஸ்கர் மாவட்டம் தாண்டேவாடா மாவட்டத்தில், நக்சலைட்கள் நடத்திய குண்டுவெடிப்பு சம்பவத்தில் 1 சிஐஎஸ்எப் வீரர் வீரமரணம் அடைந்தார். பொது மக்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களில் டிரைவர், கண்டக்டர் மற்றும் கிளீனர் என தெரியவந்துள்ளது.


தாண்டேவாடாவின் பசெலி என்ற இடத்தில் சம்பவம் நடந்தது. மார்க்கெட்டிற்கு சென்று விட்டு திரும்பிய சிஐஎஸ்எப் வீரர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து அந்த பகுதியில் வீரர்கள் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.



கடந்த 9 நாட்களில் மாவோயிஸ்ட்கள் நடத்தும் 2வது தாக்குதல் இதுவாகும். கடந்த அக்.,30ல் நடந்த தாக்குதலில் 2 வீரர்கள் மற்றும் தூர்தர்சன் ஒளிப்பதிவாளர் உயிரிழந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

  • tamil - coonoor,இந்தியா

    நக்சலைட்கள் விஷயத்தில் அவர்களை கட்டுப்படுத்துவது அரசுக்கு சவாலான வேலை தான், காங்கிரஸ் ஆட்சியிலும் நடந்தது, இப்போதும் தொடர்கிறது, நிலைமையின் உண்மை தன்மையை உணராமல் அன்று மோடி அவர்கள் காங்கிரஸ் அரசை குறை கூறினார், தான் ஆட்சிக்கு வந்தால் அனைத்தையும் ஒழிப்பேன் என்றார், பிரச்சனையின் ஆழத்தை தற்போது புரிந்திருப்பார், அதற்கு ஏற்றாற்போல நடவடிக்கை எடுத்தால் நன்று

  • krishnan - Chennai,இந்தியா

    மோடியால் வறுமைக்கு தள்ளப்பட்டவர்கள் நக்ஸல்களாக மாற வாய்ப்பு அதிகம்.

  • ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா

    இதல்லாம் ஏதும் புதுசு இல்லையே ..ஒரு விபத்துமாதுரி நினைச்சுகிட்டு போங்கவேண்டியதுதான். இது அரசுக்கும் -நக்சைல்க்கும் அதிகாரத்துக்கு நடக்கும் போட்டி . வைறுவளர்க்க வேலைக்கு சென்றவர்களுக்கு மரணம் என செய்வது

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    அவங்க பக்கம் யாரும் சாகலையா

  • Muruga Vel - Chennai,இந்தியா

    இந்த மாதிரி வருத்தம் நிறைந்த செய்திகளுக்கு சுந்தரம் குவைத்திலிருந்து நக்கலாக எழுதுவது வருத்தமாக irukku

  • Muruga Vel - Chennai,இந்தியா

    ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் …

  • சுந்தரம் - Kuwait,குவைத்

    தீபாவளி அன்னிக்கு அறுபது பேரு சரண்டர் ஆயிட்டாங்க அது பாஜக சாதனைன்னு ரொம்ப பேரு கருத்து எழுதி இருந்தாங்க. எனக்கென்னமோ அப்படி சரண்டர் ஆனவங்க தகவல் தெரிவிப்பாளராக ஆயிட்டாங்களோன்னு சந்தேகமா இருக்கு.

  • சுந்தரம் - Kuwait,குவைத்

    உடனடியாக நக்ஸல்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement