Advertisement

டில்லியில் அபாய அளவை எட்டிய காற்று மாசு

புதுடில்லி: தீபாவளி நாளில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி மக்கள் பட்டாசு வெடித்ததால், டில்லியில் காற்று மாசு அபாய அளவை எட்டியுள்ளது.


காலக்கெடு நிர்ணயம்டில்லியில் காற்று மாசு மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மாசை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, டில்லியில், தீபாவளி பண்டிகை அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியிருந்தது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது.


தடையை மீறிஆனால், மக்கள் இதனை பொருட்படுத்தாமல் குறிப்பிட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களிலும் பட்டாசுகளை வெடித்தனர். மயூர் விஹார் எக்ஸ்டென்சன், லஜ்பத்நகர், ஐபி எக்ஸ்டென்சன், துவாரகா, நொய்டா, ஜஹாங்கிர்பூர் போன்ற பகுதிகளில் தடையை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதனால், டில்லியில் காற்று மாசு அபாயகரமான அளவை எட்டியுள்ளது. ஆனந்த் விஹார், ஜஹாங்கிர்புரி போன்ற பகுதிகளில் காற்று மாசு மோசமாக இருந்தது.

மோசம்இன்று(நவ.,8) காலை 6 மணி நிலவரப்படி, டில்லியில், காற்று மாசு அளவு குறியீடு 805 ஆக இருந்தது. இந்த குறியீடானது, ஆனந்த் விஹாரில் 999 ஆகவும், அமெரிக்க தூதரகம், சாணக்யாபுரியில் 459 ஆகவும், மேஜர் தயான் சந்த் மைதானம் பகுதியிலும் 999 ஆக பதிவானது. டில்லியில், நேற்று இரவு 7 மணியளவில் காற்று மாசு குறியீடு 286 ஆகவும், 8 மணிக்கு 405 ஆகவும், 9 மணிக்கு 514 ஆகவும் பதிவாகியிருந்தது.


நடவடிக்கைடில்லியில் தடையை மீறி பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்ட போலீசார், இது தொடர்புடைய நபர்கள் மீது கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.


கைதுஇதனிடையே, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக டில்லியில், 40 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (10)

 • Bharath - Pennsylvania,யூ.எஸ்.ஏ

  இந்தியாவில் இருக்கும் அணைத்து வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாடு செய்தாலே போதும். காற்று மாசு அடையாது. மாநகராட்சி பேருந்து, ஆட்டோ, லார்ரி சாலைகளில் பார்த்ததுண்டோ? அவை காக்கும் புகை. தேவை இல்லாமல் தீபாவளி பண்டிகையை ஏன் குறை கூற வேண்டும்? புத்தாண்டு என்று ஜனவரி மதம் எதற்கு பட்டாசு?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  போர்க்கால அடிப்படையில் முக்கால் வாசி அலுவலகங்களை முன்னூறு கிலோ மீட்டர் தாண்டி மாற்றுங்கள்

 • Ram - ottawa,கனடா

  Judges who talk about air pollution by crackers should come by public transport to court, as their cars are polluting air daily. Their cumulative effect over the year is much bigger compared to the pollution due to crackers.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  வேடிக்கை வினோதம் பட்டாசு வெடிப்பதற்கு 2 நாட்கள் முன்னேயே வந்த விட்டதே டில்லியில் காற்று மாசு அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக?? ஆகவே பட்டாசு வெடிப்பதனால் காற்று மாசு அதிகமாகவில்லை. அது ஏற்கனவே அபாய கட்டத்தில் தான் உள்ளது. இது காற்று மாசு குளிர்காலமானதால் மேலே போவதில்லை காற்று அடர்த்தியில் காரணமாக, இரண்டாவது அங்கு சுற்றியுள்ள ராஜஸ்தான், சண்டிகர், பஞ்சாப் வயலில் கதிர் அறுத்த பிறகு எஞ்சிய பொருட்களை இருப்பதனால் வருவது தான் இந்த காற்று மாசு. இந்த விழிப்புணர்வுக்கு ஏன் அவர்கள் காது கொடுக்கவில்லை என்று தான் தெரியவில்லை. இதையே இயற்கை உரமாக ஆக்கலாமே, எரிக்காமல்.

 • Nethiadi - Chennai ,இந்தியா

  நரகாசுரன் செத்ததுக்கு பண்டிகை சேரீங்க அதுலேயும் ஒரு நியாயம் வேணாமா?பட்டாசு கொளுத்திதான் அவர் இருந்ததே கொண்டாடணுமா??

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  மக்கள் திருந்தாத வரை மாற்றம் என்பது சாத்தியம் இல்லை .

 • வேலங்குடியான் - Karaikudi,இந்தியா

  உச்சநீதிமன்றம் தலைநகரத்தை புகைநகரமா ஆக விட்டுட்டு தமிழ்நாட்டுக்கு எதுக்கு வெட்டி கட்டுப்பாடு???

 • Gulam - Coimbatore,இந்தியா

  படித்தும் அறிவில்லாத மக்கள்.

 • S.BASKARAN - BANGALORE,இந்தியா

  டெல்லி மக்கள் காற்றின் மாசு காரணமாக அவதிப்படுகிறார்கள் என்று நினைத்தால் அவர்களே மேலும் மேலும் மாசு செய்வதை பார்த்தால் கோபம்தான் வருகிறது. கடவுள் தான் இவர்களை காப்பாற்ற வேண்டும்.

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  நல்லா பாருங்கள் டெல்லி இல் வெறும் 40 பேர் தான் கைது பண்ணி இருக்கிறார்கள் தமிழ் நாட்டில் எத்தனை வழக்குகள் கைதுகள் நடை பெற்றன.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement