dinamalar telegram
Advertisement

நிலக்கோட்டையில் முட்டி மோதும் முக்கிய கட்சிகள்

Share
திண்டுக்கல் மாவட்டத்தின் நிலக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க.,உறுப்பினராக வென்றதங்கத்துரை தகுதியிழப்பு செய்யப்பட்டதால் தொகுதி காலியாக உள்ளது.இத் தொகுதி 1952, 57 ல் இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்து, 1962 தேர்தல் முதல் ஒற்றை உறுப்பினர் தொகுதியானது. இது தாழ்த்தப்பட்டோருக்கான தனித்தொகுதி. நிலக்கோட்டை, வத்தலக்குண்டு ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்கள், 40 கிராம ஊராட்சிகள், நிலக்கோட்டை, அம்மையநாயக்கனுார், வத்தலக்குண்டு, சேவுகம்பட்டி, பட்டிவீரன்பட்டி ஆகிய பேரூராட்சிகளை உள்ளடக்கியது.தொகுதி பிரச்னைவிவசாயம் நிறைந்த இத்தொகுதியில் பொன்னம்மாள் எம்.எல்.ஏ.,வாக இருந்த காலகட்டத்தில் மாணவர் விடுதிகள், சிப்காட் தொழிற்சாலை போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. தி.மு.க., காலத்தில் 58 கிராம கால்வாய் திட்டம் உருவாகியுள்ளது. 22 ஆண்டுகளில் சமீபத்தில்தான் இதில் முன்னோட்டமாக தண்ணீர் விடப்பட்டது. சிப்காட்டில் பல தொழிற்சாலைகள் இருப்பினும், இப்பகுதியினர் குறிப்பிடும்படியாக வேலை கிடைத்ததாக தெரியவில்லை. இதனால் தொகுதியில் பிரச்னைகள் பெருகிக் கொண்டே போகிறது.நிலக்கோட்டை ஒன்றியத்தில் மூன்று அணைகள் மூலம் பாசனம் கிடைக்கிறது என்றாலும், வைகை ஆற்றுப் படுகை உள்ள 25,000 ஏக்கரில் மட்டுமே தற்போது நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதி கண்மாய்களுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீர் வரத்து இல்லை. பணப்பயிரான கரும்பு முற்றிலும் அழிந்து விட்டது. பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை மூடப்பட்டு விட்டது. வாழை குறைந்து வருகிறது. ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்வதால் நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கும் கீழே போய்விட்டது. மற்றொரு ஒன்றியம் வத்தலக்குண்டு. 10 ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.3 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் திட்டம், வத்தலக்குண்டு பேரூராட்சிக்கு துவங்கப்பட்ட வைகை அணை கூட்டு குடிநீர் திட்டமும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இப்படி பல்வேறு பிரச்னைகள் மண்டிக் கிடக்கும் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்தால் போட்டியிடவும் பலர் தீவிரமாக முயற்சிக்கின்றனர். கூட்டணி குறித்த குழப்பநிலை இருந்தாலும் சில கட்சிகளில்தான் இந்த தீவிரம் உள்ளது.தொகுதி நிலவரம்இத்தொகுதியில் ஆரம்ப கட்டத்தில் காங்., வேட்பாளர்களும், தி.மு.க., துவங்கி நடந்த தேர்தல்களில் 2 முறை தி.மு.க.,வும், எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க., துவங்கியதிலிருந்து 2016 தேர்தல் வரை அ.தி.மு.க.,வின் கோட்டையாகவும் இருந்துள்ளது. 1996ல் அ.தி.மு.க., மீது ஏற்பட்ட வெறுப்பால் தி.மு.க., கூட்டணியில் ஏ.எஸ். பொன்னம்மாள் வெற்றி பெற்றார்.தற்போது அ.தி.மு.க.,வின் இந்த கோட்டையில் அ.ம.மு.க.,வால் 'ஓட்டை' விழுந்துள்ளது என்பதே நிஜம். வெற்றியை நிர்ணயிக்கும் பகுதிகளான வைகை ஆற்றின் தென்பகுதியில் உள்ளவர்கள் இரட்டை இலை சின்னத்திற்காக ஓட்டளிப்பவர்கள். அ.ம.மு.க.,வில் பெரும்பாலோர் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இருப்பதே 'ஓட்டை' விழுந்ததற்கான காரணம்.தி.மு.க.,வில் பல தேர்தல்களில் இத்தொகுதியை கூட்டணிக் கட்சிக்கே ஒதுக்கியது. 1984க்குப் பின் கடந்த 2016 தேர்தலில்தான் தி.மு.க., போட்டியிட்டது. இக்கட்சியைச் சேர்ந்த பலர் பொதுத் தேர்தலின் போது மற்ற தொகுதிகளுக்கு வேைல செய்யச் செல்வதாலும், அ.தி.மு.க.,வைவிட 'வைட்டமின்' வினிேயாகம் குறைந்ததாலும் கடந்த முறை தோல்வியை தழுவியது. இடைத்தேர்தல் வந்தால் கடின உழைப்புடன், தொகுதி வாக்காளர்களை 'நன்கு கவனித்தால்' வெற்றியை ருசிக்கலாம் என தி.மு.க.,வினரே கூறும் அளவுக்கு நிலைமை உள்ளது.தாழ்த்தப்பட்டோர் அதிக சதவீதத்தில் இருப்பதால் இடைத் தேர்தலில் அவர்களே வெற்றியாளர்களை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளனர். அ.ம.மு.க.,விற்கு அ.தி.மு.க.,வின் ஓட்டுக்களை பிரிக்கும் அளவிற்குத்தான் ஓட்டு வங்கி உள்ளது. வெற்றிக்கான வாய்ப்பு அவர்களுக்கும் கடினமானதாகத்தான் இருக்கும். இருப்பினும் இந்த 3 கட்சிகளுடன், காங்கிரசும் இங்கு போட்டியிடலாம் என்று கருதுகிறது.அ.தி.மு.க.,வில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் 3 பேர் மற்றும் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பாலசுப்பிரமணி, தி.மு.க.,வில் கடந்த முறை தோல்வியடைந்த அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் நாகராஜன், அ.ம.மு.க.,வில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்க துரை, காங்.,கில் ஜான்சிராணி ஆகியோர் சீட் கேட்கும் மன நிலையில் உள்ளனர்.நிலக்கோட்டை தொகுதி வாக்காளர்கள் விபரம்ஆண் :1,10,683பெண்: 1,12,856பிறர்: 5, மொத்தம் 2,23,544.-ஆண்டு எம்.எல்.ஏ., கட்சி1952- அய்யனார், முத்துத்தேவர்- காங்.,1957- சந்திரசேகரன், பொன்னம்மாள் -காங்.,1962- அப்துல்அஜீஸ் -காங்.,1967- ஏ. முனியாண்டி- தி.மு.க.,1971- ஏ. முனியாண்டி -தி.மு.க.,1977 -ஏ. பால்ச்சாமி- அ.தி.மு.க.,1980- ஏ.எஸ். பொன்னம்மாள் -சுயே.,1984- ஏ. பால்ச்சாமி- அ.தி.மு.க.,1989- ஏ.எஸ். பொன்னம்மாள் -காங்.,1991- ஏ.எஸ். பொன்னம்மாள்- காங்.,1996- ஏ.எஸ். பொன்னம்மாள் -த.மா.கா.,2001 -கு. அன்பழகன்- அ.தி.மு.க.,2006- எஸ். தேன்மொழி- அ.தி.மு.க.,2011- ஏ. ராமசாமி -புதிய தமிழகம்2016- ஆர். தங்கதுரை (தகுதி நீக்கம்)
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement