Advertisement

ரன்வீர்ஷா நிறுவனத்தில் சிலைகள் பறிமுதல்

சென்னை: ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் கோயில் விழாக்களின் போது, தேர்களில் பயன்படுத்தப்படும் பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலகங்களில் நடந்த சோதனையில், 200க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது தோழி கிரண் ராவுக்கு சொந்தமான இடங்களிலும் சிலைகள் கிடைத்தன. இதனையடுத்து, இருவரும் நேரில் ஆஜராக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், இருவரும் தலைமறைவாகினர். தொடர்ந்து, இருவரும் முன் ஜாமின் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர்.


இந்நிலையில், சென்னை, கிண்டியில் உள்ள ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான ஆடை ஏற்றுமதி அலுவலகத்தில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், ஏ.டி.எஸ்.பி., ராஜாராம் தலைமையில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோயில் விழாக்களில் பயன்படுத்தப்படும் பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் அதிகாரிகள் கூறுகையில், ரன்வீர்ஷாவை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது கைப்பற்றப்பட்ட சுவாமி ஊர்வல சிலைகள்,300 ஆண்டுகளுக்கு முந்தையவையாக இருக்கும். ரன்வீர்ஷாவிடம் கைப்பற்ற சிகைளுக்கு எந்த ஆவணங்களும் இல்லை. சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    மு க வின் வழிதோன்றலோ

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    இது போன்றவர்களை உடனடியாக உண்மையைக் கண்டறியும் சாதனத்தின் வாயிலாக வீடியோவில் பதிவு செய்தால் போதுமே எதற்க்காக இப்படி பல மாதங்கள் ஆண்டுகள் அரசு செலவில் இவர்களுக்கு உணவு, பாதுகாப்பு ,,,, மேலும் தங்க மாணிக்கம் சீக்கிரத்தில் ஓய்வு என்ற செய்தியும் வருகிறது, பிறகு ??? ஆகவே சீக்கிரமாக எந்த ஒரு நிகழ்வையும் முடிக்க அவனை செய்தால் மட்டுமே நல்லது,நேர்மையானவர்கள் மற்றும் நல்லவர்களுக்கு பதவி நீட்டிப்பு கண்டிப்பாக இருக்காது, இல்லையென்றால் டிவி சீரியல்தான் , வந்தே மாதரம்

  • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

    சிலைதான் பிடித்துஇருக்கிறீர்கள் ரன்வீரிஷாவ் எப்பொழுது பிடிப்பீர்கள் வெளி நாடு போய் விட்டாரோ என்னமோ

Advertisement