dinamalar telegram
Advertisement

தீபாவளியில் நல்ல தகவல் : யோகி ஆதித்யநாத்

Share
Tamil News
லக்னோ : உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், தீபாவளியன்று, அயோத்திக்கு சென்று, சரயு நதியில் நீராடி, ராமபிரானை வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டும் தீபாவளியன்று, அயோத்திக்கு, யோகி ஆதித்யநாத் செல்கிறார். அயோத்தி வழக்கை உடனே விசாரிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்தது பற்றி யோகி கூறுகையில், 'தாமதப்படுத்தப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும்' என்றார். இந்நிலையில், உ.பி, மாநில, பா.ஜ., தலைவர் மகேந்திர நாத் பாண்டே கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான நல்ல தகவலை, தீபாவளியன்று முதல்வர் அறிவிப்பார். அங்கு, ராமாயணம் தொடர்பான அருங்காட்சியகம், சிற்ப மற்றும் ஓவிய கூடங்களை, முதல்வர் துவக்கி வைக்கிறார். அத்துடன், 330 கோடி ரூபாய் செலவில், சரயு நதிக்கரையில், 118 அடி உயர பீடத்தில், 328 அடி உயர, ராமர் சிலை அமைப்பது பற்றியும், முதல்வர் அறிவிப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (12)

 • சீனு. கூடுவாஞ்சேரி. - ,

  ஆக்ஸிஜன் இல்லை குழந்தைகள் இறக்கிறார்கள். தமிழகத்தில் நிறைய ஆக்ஸிஜன் இருக்கிறதே. பின்பு டெங்குவிலும் பன்றிக்காய்ச்சலிலும் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் போதே எப்படி நூற்றுக்கணக்கான இறப்பு ஏற்படுகிறது. உபியை இத்தனை ஆண்டுகளாக ஊழல் காங்கிரஸ் ஆட்சி செய்து மிகவும் பின் தங்கிய மாநிலமாக விட்டு விட்டது. எளிதில் சரி செய்வது கடினம். யோகி ஒன்றும் கடவுள் அல்ல. உடனே சரி செய்ய.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  வேற பொழப்பே இல்லாதவனுங்க கையில் ஆட்சியை கொடுத்தால் இப்படித்தான்...

 • Suman - Mayiladuthurai ,இந்தியா

  எல்லோரும் போற்றும் மதிக்கப்படும் ஒரு உண்மையான இந்து. வாழ்த்துக்கள், இப்பொழுதுதான் மக்களுக்கு இந்து சமயத்தின் மேல் நம்பிக்கை வருகிறது. தன் மதத்தை பற்றி தெறிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். நன்றி

 • tamil - coonoor,இந்தியா

  உ.பி மாநிலம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன, அந்த மாநிலத்தை முன்னுக்கு கொண்டுவருவதற்கு எந்த திட்டமும் இல்லை, ஆக்சிஜன் இல்லாமல் ஏராளமான குழந்தைகள் செத்து மடிந்தன உருப்படியான ஆஸ்பத்திரி கட்ட எந்த திட்டமும் இல்லை, இப்போதும் ராமரையே நினைத்துக்கொண்டு இருந்தால் எப்படி உறுப்பிடமுடியும், பக்தி என்பது ஒருவனின் தனிப்பட்ட உணர்வு, அது அனைவரின் மனதிலும் நிறைந்து இருக்கிறது, அதற்கு ராமருக்கு சிலை வைத்தும், கோயிலை கட்டியும் தான் மெய்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை, இருக்கிற கோயில்களை நல்ல முறையில் பராமரித்தால் அது ஆண்டவனுக்கு செய்யும் தொண்டு,

 • arun veli - chennai,இந்தியா

  ஏன்...இன்னொரு சிலை வைக்க போறீங்களா... முடியல உங்க அக்க போர்... ஒழுங்கா வெடி வெடிக்க உடுங்க...அது போதும்

Advertisement