Load Image
dinamalar telegram
Advertisement

பேரிடர் பாதிப்பை தவிர்க்கும் முயற்சி: சமூக சேவையில் 13 டன் மண் அகற்றம்

Tamil News
ADVERTISEMENT
குன்னுார்:குன்னுாரில் உள்ள கல்வெட்டுக்கள் சீரமைக்கும் பணியில் தன்னார்வ அமைப்பினர் களத்தில் இறங்கியுள்ளனர்; முதல் கட்டமாக 'மோர்ஸ்கார்டன்' பகுதியில், மழைநீர் கால்வாயில் இருந்து, 13 டன் மண் அகற்றி சாதனை செய்தனர்.குன்னுார் பகுதிகளில் நீரோடைகள், ஆறுகள் மறிக்கப்பட்டு பல இடங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இதனால், நீரோடைகளில் செல்ல வேண்டிய மழைநீர் தடம் மாறி மாற்றுப்பாதையில் செல்வதால், மண்சரிவு, நிலச்சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 'கிளீன் குன்னுார்' அமைப்பின் சார்பில், மழைநீர் கால்வாய் மற்றும் 'கல்வெட்டு'களில் ஏற்பட்ட அடைப்புகளை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அனுமதியுடன், அகற்றும் பணிகள் துவக்கப்பட்டது. முதற்கட்டமாக, குன்னுார் ஓட்டுப்பட்டறை மோர்ஸ் கார்டன் அருகே, 60 அடி நீளமுள்ள கால்வாய், 30 அடியுள்ள கல்வெட்டு ஆகியவற்றில் இருந்த, 13 டன் மண், கற்கள், குப்பை ஆகியவற்றை, 26 பேர் கொண்ட குழுவினர் நான்கு நாட்களில் அகற்றினர்.
சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பொதுமக்களும் உதவிகளை செய்தனர். நகராட்சி ஊழியர்களும் குப்பைகளை அகற்றவும், மண், கற்களை எடுத்து அருகில் இருந்த பூங்காவில் கொட்டி சமன்படுத்தவும் உதவி செய்தனர்.'கிளீன் குன்னுார்' அமைப்பின் நிறுவனர் சமந்தா மற்றும் தன்னார்வலர் வசந்தன் ஆகியோர் கூறுகையில்,''கல்வெட்டின் அருகே, மழைநீர் தடம் மாறி செல்வதால், இங்குள்ள பிரமாண்ட தடுப்புச்சுவர் இடியும் அபாயம் இருந்ததுடன் அருகில் உள்ள வீடுகளும் பாதிக்கும் சூழ்நிலை இருந்தது. இந்த கல்வெட்டில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக மண் அகற்றப்படாமல் இருந்துள்ளது.
தற்போது, மண் அகற்றப்பட்டதால், இனி மழை நீர் சந்திரா காலனி அருகேயுள்ள ஓடையில் கலக்கும்,'' என்றனர்.தொடர்ந்து வாரந்தோறும், சனி, ஞாயிறு தினங்களில், ஓல்டு ஊட்டி சாலை, மவுன்ட்ரோடு, சிம்ஸ்பார்க், பெட்போர்டு பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய் மற்றும் 'கல்வெட்டு'கள் சீரமைக்கும் பணிகள் நடக்க உள்ளன.மக்கள் கூறுகையில், 'மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன், எந்தவித எதிர்பார்ப்புமின்றி பொதுமக்களாக அனைவரும் பங்கேற்று இது போன்ற பணிகளை மேற்கொண்டால், குன்னுாரில் பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க முடியும்' என்றனர்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement