Advertisement

பாலியல் புகார்கள்: விசாரணை நடத்த முடிவு

புதுடில்லி: பாலியல் தொல்லைகள் தொடர்பாக டுவிட்டர் மூலம் பெண்கள் தெரிவித்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

டுவிட்டரில் '#MeToo' என்ற ஹேஸ்டேக் மூலம் , பல பெண்கள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதில் பல பிரபலங்கள் சிக்கியுள்ளனர். பாலிவுட் நடிகர் நானா படேகர், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்ட பலர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.


இந்நிலையில், இந்த புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த குழுவில் மூத்த நீதிபதிகள், சட்ட நிபுணர்கள் இடம்பெறுவார்கள் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து (74)

 • RM -

  Lot of laws are there to protect the ladies.But to get justice practically very difficult. complaints,evidence,enquiry, unnecessary comments,society accptence,hire lawyers,spending time in court, years together case process are the practical facts. So the social media is a good option atleast immediate attetion.awareness among people.

 • RM -

  Lot of laws are there to protect the ladies. But to get justice practically very difficult. complaints, evidence, enquiry, unnecessary comments, society accptence, hire lawyers, spending time in court, years together case process are the practical facts. So the social media is a good option atleast immediate attention. awareness among people.

 • sumutha - chennai - Chennai,இந்தியா

  இதுபோல காலம் கடந்து ஏன் பெண்கள் சொல்ல முன்வருகிறார்கள்? யோசிப்போம். இது போல ஆண்களுக்கும் நடந்திருக்க வாய்ப்பிருக்குமல்லவா? பாலியல் தொந்தரவு என்கிறார்களே அது ஒரு உடல் சார்ந்த வேட்கை. அது பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் இயற்க்கை அளித்திருக்கும் ஒரு இன விருத்திக்கான இயற்கையான தூண்டல். அதை மிருகங்கள் இயல்பாகவோ அல்லது தன இனம் சார்ந்த ஆண்பாலை சேர்ந்த மற்றொரு விலங்கோடு மூர்க்கமாக சண்டையிட்டோ இச்சையை தீர்த்து கொள்ளும் ஆனால் மனிதர்களுக்கு ஆறறிவு என்பதை இயற்கையோ ஆண்டவனோ கொடுத்திருப்பதால் அதை பயன்படுத்தி காலகாலமாக நமது மனித முன்னோர்களால் மாற்றங்கள் செய்து நெறி படுத்தப்பட்டு வாழ்க்கையை நேர்மையாகவும் ஒழுக்கத்துடனும் வாழ நமக்கு சொல்லப்பட்டு அதன்படி வாழ நாம் அறிவுறுத்தப்பட்டோம். திருமணம்,சம்பிரதாயம், சடங்குகள் என்பது போன்ற வாழ்வியல் இலக்கணங்கள் அதற்காகவே வகுக்கப்பட்டன.ஆனால் என்ன நடக்கிறது. கையில் பணம் சேர்ந்தால் ஆணாகட்டும் பெண்ணாகட்டும் ஆடும் ஆட்டம்தான் என்ன? .இதனுடன் பதவியும் சேர்ந்து கொண்டால் வெறித்தனந்தான் (கொஞ்சம் பேர் விதி விலக்காக இருக்கலாம்) தங்கள் பிறந்தஊரில் அடக்க ஒடுக்கமாக வாழ்ந்த வளர்ந்த ஆண்களும் பெண்களும் வேலைகிடைத்து பெருநகரங்களுக்கு வந்து தங்க ஆரம்பித்ததும். அவர்களின் அனைத்து கட்டுக்களையும் அவிழ்த்து தூக்கி கடாசிவிட்டுட்டு எந்த நிலையை ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள் என அவர்களை அவர்களே சீர்தூக்கி பார்த்துக்கொண்டார்களானால் நிறைய சமுதாய மாற்றங்களும் முன்னேற்றங்களும் வர அவர்கள் உந்துதலாக இருப்பார்கள். முதலில் இந்த பப்களை இழுத்து மூட சொல்லுங்கள். நாட்டிற்குள் டாஸ்மாக்கில் தன்னால் முன்னேற முடியவில்லயே என தன மேல் கழிவிரக்கம் கொண்ட தமிழன் சீரழிகின்றான் என்றால் நன்றாக படித்து தான் நினைத்தே பார்க்க முடியாத சம்பளம் கையில் கிடைத்ததும் அதை தன் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், சமூகம் முன்னேற என்ன செய்யலாம் என சிந்தித்து அதற்க்கான செயலில் இறங்கினால் இந்த இளைய சமுதாயம் நாட்டிற்கே வழிகாட்டியாக திகழும். ஆனால் அவர்கள் பப்புகளுக்குள் தங்களை வலிய திணித்துக்கொண்டு தங்களை சீரழித்து கொள்கிறார்கள். இதனால் சமுதாய முன்னேற்றமும் தடைபடுகிறது. இந்த பாலியல் வேட்கைகளும் இப்படித்தான் தீர்த்து கொள்ளப்படுகிறது. பாலுறவில் ஈடுபடும் இருவரும் (அவர்கள் ஒருவருக்கொருவர் சம்மந்தமில்லையென்றாலும்) மனமிசைந்து ஏற்றுக்கொள்வதால் அது அப்போது வெளியே வருவதில்லை . அதுவே தொடரும்போது கருத்து முரண்பாடு ஏற்பட்டால் பத்து வருடங்களாக அவன் என்னை சீரழித்தான் என தயக்கமின்றி பொதுவெளியில் குற்றச்சாட்டாக வைக்கிறார்கள். திரைத்துறையை எடுத்துக்கொண்டால் அத்துறையை சார்ந்த ஊடகத்தை சேர்ந்த ஒருவர் இப்போது சமூக ஊடகத்தில் வெளியான பிரச்சினை குறித்த ஒரு டிவி விவாதத்தில் பகிரங்கமாக திரைத்துறையில் தொண்ணூறு விழுக்காடு பாலியல் உறவுகள் வற்புறுத்தி ஏற்றுக்கொள்ள வைக்கப்படுகிறார்கள் என குற்றம் சாட்டி இருந்தார். இப்போது இதை சமூகத்தில் வெளிப்படுத்துவது என்பது இதை சொல்ல தைரியம் வந்ததாக எடுத்துக்கொள்வதை விட சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் அவர்களை களங்கப்படுத்தினால் போதுமானது என அவர்களுக்குள் அவர்களாகவே சமாதானம் செய்து கொண்டதாகவே இருக்கும். ஊடகத்தில் ஆரம்பம் முதலே கோலோச்சிக்கொண்டிருக்கும் ஒரு டிவி உயரதிகாரி மீது குற்றச்சாட்டு சொல்லப்பட்டு சட்டத்தின் முன் அவர் நிற்கவைக்கப்பட்டதும் ஞாபகம் வருகிறது. இதுபோன்ற சமூக அவலங்களுக்கு முக்கியமான ஒரு காரணம் சுய ஒழுக்கம் சுய கட்டுப்பாடு முற்றிலும் சீரழிந்து விட்டதால் ஆகும். தன்னொழுக்கத்தை ஒவ்வொருவரும் கடைபிடிக்க தொடங்கினாலே போதும் இத்தகைய அவலங்கள் நிகழாமல் தடுக்கலாம். இன்றைய இளம் தலைமுறை பெற்றர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தன்னொழுக்கத்தையும் ஊட்டி வளருங்கள். இளம் தலைமுறையினரும் சிந்தித்து மனம் மாறத்துவங்குங்கள். வருங்காலம் வளமிக்கதாக அமையும். நன்றி.

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  ஸ்டாலின் ஏன் இந்த முத்துவிற்கு வக்காலத்து வாங்கவில்லை தெரியுமா ? அப்படி வாங்கினால் ஸ்டாலினின் பாலியலீலைகளைப்பற்றி தோண்டியெடுக்கப்படுமென்ற பயத்தில் ஸ்டாலின் பயந்து அடக்கிவாசிக்கிறார்

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  இந்த முத்துவிற்கு கொடுத்த விருதுகளையெல்லாம் திரும்பபெறவேண்டுமென்பது மக்களின் வேண்டுகோள் ,

" "
Advertisement