Advertisement

இந்தியாவின் முடிவு பலன் தராது: அமெரிக்கா

வாஷிங்டன்: ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு, இந்தியாவுக்கு பலன் தராது என அமெரிக்கா கூறியுள்ளது.


ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. நவம்பர் மாதத்திற்கு பின், அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. இதனையும் மீறி, ஈரானிடம் இருந்து நவம்பர் மாதத்திற்கு பின்னரும் கச்சா எண்ணெய் இறக்குமதியை தொடர இந்தியா முடிவு செய்துள்ளது.


இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, அமெரிக்கா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹீதர் நவுரட் கூறுகையில், இந்தியாவின் முயற்சி பலன் அளிக்காது. ஈரான் மீதான தடை நவ., 4 முதல் அமலுக்கு வருகிறது. இந்த தடை தொடர்பாக, எங்களது கூட்டணி மற்றும் நட்பு நாடுகளுடன் பேசி வருகிறோம். அப்போது, எங்களின் கொள்கைகள் குறித்து தெளிவாக எடுத்து கூறியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து (38)

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அமெரிக்க வுடன் இருந்தால் பலன் தருமா...

 • D. Abraham Pradeep - Madurai,இந்தியா

  Good and Wise Decision taken by Our Government.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  நம் தேசத்திற்கு எது நல்லதோ அதை தான் நாம் செய்யமடுத்தியும் செய்ய வேண்டும். அமெரிக்கா சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும். வேண்டுமானால் அவர்கள் நம்மை வந்து கெஞ்சட்டும். ஈரானிலிருந்து எந்த பொருளையும் வாங்காதீர்கள் நாங்கள் அவர்கள் மீது பொருளாதார தடை விதித்திருக்கிறோம், எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று டில்லி நோக்கி அவர்கள் பலமுறை வந்து கெஞ்சட்டும். இவர்கள் யார் நம்மை மிரட்டுவதற்கு. வட கொரியாவே இவர்களை மிரட்டியது அதற்கு பயந்தவர்கள் தான் இவர்கள். இரான் நமது பழங்காலம் தொட்டே நட்பு நாடு. சௌராஷ்டிரியர்கள் பெர்சியர்கள் நம்முடன் வணிக தொடர்புகளை கொண்டவர்கள். ஈரானும் ஈராக்கும் பாண்டிய காலம் தொட்டு நம்முடன் வணிக தொடர்பில் இருப்பவர்கள். அமெரிக்காவின் வரலாறு முன்னூறு ஆண்டுகள் கூட கிடையாது. ஈரான் ரசிய ஜப்பான் என்று நாம் நமது நட்பை மேம்படுத்தி கொள்ளவேண்டும். ஈரானில் நாம் நிறைய முதலீடு செய்திருக்கிறோம். இன்னும்செய்யவேண்டும். தஜிகிஸ்தானில் நமது விமான படை தளம் எப்போதும் தயாராக அமைத்து வைத்திருப்பதை போல இரண்டிலும் நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். நமது வான்படை ஏவுகணை தளங்களை அங்கே நிறுவ வேண்டும். அவர்களுடன் இணைந்து அவர்களின் ராணுவ பாதுகாப்பை நாம் ஏற்கலாம். அவர்களின் பெட்ரோல் வளத்தை நாம் பெற்று அதை உலகம் முழுதும் விற்கலாம். ஏவுகணைகள் தூரத்தை அதிகரிக்க வேண்டும். அமெரிக்காவை தாண்டி செல்லும் அளவிற்கு அதிகரிப்போம். அணுஆயுதங்களை பெருக்குவோம். டிப்ளமேடிக் ஆகா நாம் நடந்து கொண்டாலும், சில விஷயங்களில் எதிரிகளும் நண்பர்களும் நாம் எவளவு உயர்ந்த அளவில் இருக்கிறோம் என்று தெரிந்து கொள்ளவேண்டும். இந்தியாவின் யுத்தம் என்று ஒன்று வந்தால் அது இந்திய எல்லைக்கு அப்பால் தான் இருக்கும் என்று நமது பிரதமர்கள் சொன்னது நினைவில் வைக்க வேண்டும். கெஞ்சுவது கொஞ்சுவது என்றெல்லாம் கிடையாது. நம்முடைய பெரும்பாலான செலவுகள் எரிபொருள் தான் அதுமட்டும் குணிந்த விலைக்கு கிடைத்தால் உள்நாட்டு உற்பத்தி பல மடங்கு பெருகும். ஏற்றுமதியில் அனைவருக்கும் சவால் விடுவோம். நமது அந்நிய செலாவணியை அறுபது சதவீதத்திற்கு மேல் பெட்ரோலிய பொருட்களையே என்று செல்கிறது. நாம் நமது பெட்ரோலிய தேவைகள் அனைத்தையும் ஈரானில் இருந்து தாராளமாக பெற்று கொள்ளலாமே. அவர்களிடம் அது அதிக அளவில் இருக்கிறதே. அப்படி இருக்க எதற்காக சவூதி மற்றும் அமெரிக்க சார்புடைய நாடுகளிலிருந்து பெற்று கொள்ளவேண்டும். நாம் வாங்கும் பெட்ரோல்களை சவூதி அரசிடமிருந்து அறவே நிறுத்தி கொண்டால் யாருக்கு நஷ்டம். அவர்களின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு விற்கப்படாமல் இருக்கும் பெருமளவு அந்நிய செலாவணி கிடைக்காது. நம்மை போன்ற வேறு கஸ்டமர்கள் அவர்களுக்கு கிடைப்பது குதிரை கொம்பு. அவர்கள் விலை குறைக்க மாட்டார்களாம், டாலரில் டான் வாங்க வேண்டுமாம். நாம் ஏன் அவர்களிடம் வாங்க வேண்டும். ஈரானில் இருந்து வாங்கி கொள்கிறோம். அவர்களுக்கு நமது பொருட்களை ஏற்றுமதி செய்து கொள்வோம். எத்துணையோ ஆட்டோ மொபைல் பொருட்கள் உணவு பொருட்கள் அவர்களுக்கு தேவை படுகிறது. ஏற்றுமதி செய்வோம். உள்நாட்டு கட்டமைப்பில் நமது நிபுணத்துவம் தேவையான அளவில் தாராளமாக இருக்கிறது. அமெரிக்காவிலிருந்து ஐ போன் விலை உயர்ந்த பொழுது போக்கு சாதனங்கள் வேண்டாம். மருத்துவ கருவிகளை அமெரிக்க நிறுவனங்களை மட்டுமே நம்பி இருக்கவேண்டிய அவசியமில்லை. ஜப்பானின் கருவிகள் அவர்களை விட சிறந்தது. ஹிட்டாச்சி மருத்துவ கருவிகள் மிட்சுபிஷி கருவிகள் அமெரிக்க கருவிகளை விட பல மடங்கு உயர்ந்தது. அமெரிக்காவிடம் வணிகம் செய்து அவர்கள் நட்புடன் நாம் இருப்பதற்காகவும் நமது மென் பொருள் ஏற்றுமதிக்காகவும் நாம் அவர்களிடம் இருந்து நிரைய வாங்குகிறோ, உண்மையில் அவர்கள் வெறும் வியாபாரிகள் தான். உற்பத்தியாளர்கள் அல்ல. வெளிநாடுகளில் சிறப்பாக உற்பத்தியாகும் பொருட்களை அவர்கள் வாங்கி விற்கிறார்கள். ஜெர்மனின் கார்களை விடவா அமெரிக்காவின் போர்ட் செவர்லே உயர்ந்தது. ஜப்பான் உடன் வியாபாரத்தை பல மடங்கு பெருக்கி கொள்வோம். ரசியாவுடன் ராணுவ ஒப்பந்தம், ஜேர்மன், பிரான்ஸ் போன்றோருடன் விமானம் பீரங்கிகள் வாங்கி கொள்வோம். இரானிடம் எரிபொருள் முழுவதையும் வாங்குவோம். நட்பு ஆடுகளுக்கு ஏவுகணைகள் விற்போம். அமெரிக்காவே உங்களுக்கு எங்களுடன் வியாபாரம் செய்வதற்கு விருப்பமில்லை என்றால் தாராளமாக உங்கள் விருப்பத்தை நோக்கி சென்று கொள்ளுங்கள். நாங்கள் எங்களுடன் வியாபாரம் நட்புறவு கொள்வோரிடம் தொடர்ந்து வணிக தொடர்புகளை மேம்படுத்தி கொள்கிறோம். இது சரியான தருணம். நாம் அவர்களை ஒதுங்குபவர்களை ஒதுக்கி வைக்க. உலகளாவிய வகையில் அவர்கள் மீது ஒரு வெறுப்பும் எரிச்சலும் பல நாடுகளுக்கு இருக்கிறது. அவர்கள் தேசத்திலேயே கூட தற்போதைய அதிபர் மீது ஆதரவு குறைந்திருக்கிறது. அரபு தேசங்கள் சந்தேகத்துடன் வேறு வழியின்றி அவர்கள் சொல்வதை கேட்கிறார்கள். என்றாலும் மிக பெரிய கூட்டணியாக இருந்த அவர்கள் இன்னமும் பாலஸ்தீன விஷயத்தை மறக்கவில்லை. ஜெருசலேம் அமெரிக்க அங்கீகரித்து விட்டது அதை வைத்தே அவர்கள் மீது அந்த பதிமூன்று அரசு கூட்டணி எரிச்சல் கொண்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அமெரிக்காவை ஒதுக்கி நன்கு திட்டமிட்டால் வேகமான வளர்ச்சி பெறலாம் என்பது உண்மை. அதை செய்து பார்க்க விரும்பவில்லை என்பதால் அவர்கள் ஆட்டம் போடுகிறார்கள். நாடுகளை வேறுபடுத்தி வைத்தே அவர்கள் ஆதாயம் அடைகிறார்கள். ஆபத்து காலங்களில் அமெரிக்கர்கள் நமக்கு உதவியதே இல்லை. ஏழாம் படையை நமக்கு எதிராக நகர்த்தியது, சீன யுத்தத்தின் பொது நமக்கு வெடி மருட்ந்துக்கள் சப்ளை செய்வதற்கு மறுத்தது. அமெரிக்க வங்கியின் கேரண்டீ இருந்தால் மட்டுமே தருவோம் என்று தாமத படுத்தியது என்று பல இகழ்வுகள். ஒரு சிறிய தேசம் கியூபா லெபனான் எல்லாம் கூட அவர்களை தைரியமாக எதிர்த்தார்கள், வியட்நாம் நேரடியாகவே அவர்களை யுத்தத்தில் வென்றது. ஈரான் உடன் அவர்களுக்கு பயம் தான் காரணம் தெளிவான காரணங்களை அவர்கள் தரவே இல்லை. யாரும் அதை பற்றி கேட்காததால் அவர்கள் சாதகமாக வைத்து கொண்டார்கள். எரிவாயுவை குறைந்த விலையில் நாம் கொணரலாம் தட்டுபாடில்லாமல். குழாய் இணைப்பு மூலமாக சில வருடங்களில் வீடு தோறும் வந்து சேரவேண்டியதிருக்கிறது. பெட்ரோல் குழாய்கள் பாதிக்கப்பட்டு சில வருடங்களில் அவைகள் நம் தேசம் வந்தடைய வேண்டிய நிலையில் இருக்கிறது. நிரைய என்னை கிணறுகளை நாம் அங்கே குத்தகைக்கு எடுத்திருக்கிறோம். துறைமுகங்களை அங்கே நிறுவி இருக்கிறோம். நமது முப்படைகளையும் அங்கே நிறுத்தி கொள்வதற்கு ஆதரவு தருகிறார்கள் அன்போடு வரவேற்பு நல்குகிறார்கள். கல்வி நிறுவனங்களை அங்கே தாராளமாக நடத்துவதற்கும் தொழிற்கூடங்களை இயக்குவதற்கும் அனுமதி இருக்கிறது. அரேபியர்களிலேயே புத்திசாலிகள் ஈரானியர்கள் தான். இன்று அவர்கள் ஒரு மதத்திற்கு என்று கட்டயப்படுத்தி மாற்றி வைக்கப்பட்டாலும் அவர்களின் செயல்பாடுகள் பண்டைய கலாச்சாரத்தின் அடிப்படையிலேயே இருக்கின்றன. அமெரிக்க டொலர் தவிர்த்து பாண்டா மாற்று முறையில் நாம் அவர்களுடன் வியாபாரம் செய்து கொள்ளலாம். நிறைய வேலைவாய்ப்புகள் நமக்கு கிடைக்கும். நமது இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அங்கே உருவாகும். எளிது. அவர்களிடம் எரிபொருளை பெற்று கொடு அவர்களின் மிக பெரிய நிலப்பரப்பை முழுதும் நிர்மாணிக்கலாம். துபாய், குவைத் போன்ற வளைகுடா தேசங்களை இந்த நிலைமைக்கு வளர்த்தியது கட்டுமான பணிகளில் பிரமிக்க வைத்தது இந்திய கட்டுமான தொழிலார்களே. ஈரானின் நில பரப்பு பெரியது. அதை நிர்மாணிக்கிற பெரியளவு வாய்ப்பு நமக்கு கிடைக்கும். எரிபொருட்களால் நமது வளம் பெருகும். எலெக்ட்ரோனிக் பொருட்களுக்கு அமெரிக்காவை நாம் 1995 பிறகு தான் நாடினோம். WTO ஒப்பந்தத்திற்கு பிறகே உலக மயமாக்கல் என்ற பெயரில். அதற்கு முன்பு ஜப்பானின் சோனி சனியோ போன்ற கம்பனிகளும் பிலிப்ஸ் BPL மட்டுமே இருந்தன. அமெரிக்காவின் எந்த பொருட்களும் இல்லாத நிலை. கோலா கம்பனியை விரட்டினோம். ஹோண்டோ வரவேற்றோம். அமெரிக்க கம்பனிகள் வந்த பிறகு சொலிடேர், ஒனிடா, இக்கோட், EC டிவி கெல்டரோன் என்று எத்துணையோ மாநில அரசின் எலெக்ட்ரோனிக் கம்பனிகள் காணாமல் பொய் விட்டன. HMT சிறப்பான நிறுவனம் அதுவும் மறைகிறது. அமெரிக்காவின் கம்பனிகள் தொடர்புகளால் நமக்கு லாபம் பெரிதும் இல்லை. சீனாவிற்கு பயந்து ஒன்றும் நாம் அமெரிக்காவின் ஆதரவை நாட வேண்டியதில்லை. வாழும் காலத்திற்கு சிறப்பாக வாழ்வோம். யுத்தம் என்று வாழ்தல் வீரம் காண்பிப்போம். நமது அணு ஆயுதங்கள் பேசட்டும். அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியின் பாடல்கள் உணரூட்டப்படவேண்டும். அரசியல் வாதிகள் அஞ்ச கூடாது. கொள்ளும் ஆயுதங்கள் கொள்வதற்கு தான் பயன்படவேண்டும். மிரட்டுவோரை துச்சமென தூக்கி எறிவோம். நாரி வளம் போனாலென்ன இடம் போனாலென்ன என்று இருக்ககூராது. ஊளையிடவே கூடத அளவிற்கு சுட வேண்டும்.

 • Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ

  அமெரிக்காவில் இன்றைய நிலவர படி டாக்டர்ஸ் என்ஜினீர்ஸ் கம்ப்யூட்டர் ஸ்பேசியலிஸ்ட் மாறும் தொழில் அதிபர்கள் என இந்தியர்கள் நிரம்பி வழிகின்றனர். இன்றைய நிலவரப்படி 25 சதவீதம் அமரிக்கா இந்தியர்கள் கையில். அமெரிக்கா மெதுவாக இந்தியநாட்டின் கையில் தான். அமெரிக்கா அதிபர் மெதுவாக இந்தியர்கள் கையில் விழவேண்டியது தான் அமெரிக்காவாழ் இந்தியாவை இனி ஒன்றும் செய்ய முடியாது.

 • ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) - கரூர்,இந்தியா

  இந்தியா இந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்...அமெரிக்கா இல்லை ஆண்டவனே வந்தாலும் இந்தியா தன் முடிவில் இருந்து மாறக்கூடாது... அமெரிக்கா நம் மீது பொருளாதார தடை விதித்தால் நாமும் அமெரிக்கா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்...நிச்சயம் நஷ்டம் அமெரிக்காவிற்க்குத்தான்...

" "
Advertisement