Advertisement

முதல்வர் பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவு

சென்னை: முதல்வர் பழனிசாமி மீதான டெண்டர்முறைகேடு புகாரை சிபிஐக்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வழக்குநெடுஞ்சாலை துறையில், சாலைகள் அமைக்க மற்றும் பராமரிக்க, 'டெண்டர்' வழங்கியதில், முறைகேடு நடந்துள்ளதாக, முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, லஞ்ச ஒழிப்பு துறையில், திமுக.,வின் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்தார். பின், உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

முகாந்திரம்இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளார். மேலும், வழக்கு ஆவணங்களை, ஒரு வாரத்தில் சிபிஐயிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒப்படைக்க வேண்டும். ஆரம்ப கட்ட விசாரணையை 3 மாதத்தில் சிபிஐ முடிக்க வேண்டும். இதில் முகாந்திரம் இருந்தால் முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (54)

 • Appavi Tamilan - Chennai,இந்தியா

  எடுபுடி மைண்ட் வாய்ஸ். நாம கொள்ளை அடிக்கறதை மட்டும் விசாரிக்கறாங்க.ஆனால் பாஜக ஆட்சில அடிக்கற கூட்டு கொள்ளையை மட்டும் ஏன் விசாரிக்க மாட்டேங்கறாங்க. இனிமேல் நாம் கொள்ளை அடிச்சா அந்த கட்சி மாதிரியே பெரிய நிறுவனங்களோடு சேர்ந்து கொள்ளை அடிக்கணும். அப்போதான் அவங்க நமக்கு பணபலமா இருந்து வழக்கு வராம பாத்துக்குவாங்க. பாஜக அரசுக்கு அடிமையா இருந்தும், அவங்க கொள்ளை அடிக்கற டெக்னிக் நமக்கு புரியாம போய்டுச்சே...

 • rajan. - kerala,இந்தியா

  ஆகா இனி அந்த சிபிஐ புகுந்து பழனி முருகனை மறுபடியும் மொட்டை அடிச்சுடுமோ. போங்கப்பா எல்லோருமா ஒண்ணா போயி அந்த ஆயாம்மா சம்மதியிலே போயி குந்திகினு தியானம் பண்ணுங்க.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  ஏற்கனவே சி பி ஐ யின் கைகள் அளவுக்குமீறிய வழக்குக்களால் நிறைந்துள்ளது .கையில் இருக்கும் வழக்குகளை முடிக்கவே பத்து வருஷமாகும். பின்னர் இந்த வழக்கையும் அவர்களிடம் கொடுக்க உத்தரவிடுவதின் நோக்கம்?

 • venkatan - Puducherry,இந்தியா

  எரிகின்ற கொள்ளியிலே எந்த கொள்ளி உசத்தி. வாழ்க ஜனநாயகம்.வளர்க எங்கள் திராவிட பொன்னாடு.+வடக்கிலுள்ள கூட்டாளிகளும்.மக்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் வேற சீரியஸ் மேட்டர் இல்லீங்கோய்.

 • suresh - chennai,இந்தியா

  அரசியல்வாதிகளின் இது போன்ற ஊழல்களை காணும் போது,,,,மனம் வெம்புகிறது,,,,, பொதுவாகவே சொல்கிறேன்,,,அனைத்து அரசியல் கட்சிகளும் இப்படியே பயணிக்கிறது,,,,நான் எனது தெருவில் நடக்கும் வேளையில் ஏன் இப்படி தெரு இருக்கிறது என அதை மாற்ற ,,,,தூய்மையான பசுமையான அழகான ஓர் தெருவாக மாற்ற சிறு முயற்சி மேற்கொள்ள.... எனது சேமிப்பில் சிறுதொகையை செலவிட முயற்சித்து அதை மாற்ற முற்பட்ட போது....செலவு கைமீறி சென்றது,,,முடிக்க வேண்டிய கட்டாயம்,,,,கடன் வாங்க வேண்டிய சூழல்,,,,கொண்டு சென்ற தங்கம்,,,,நான் கேட்ட தொகையை அடமான நிறுவனத்தால் கொடுக்க முடியவில்லை,,,,,என் மனைவி தான் அணிந்து இருந்த வளையலை கொடுத்து அந்த தொகையை ஈடு செய்தார்,,,அவர் அந்த வளையலை கழற்றிய போது ,,,,,என் மனம் கொண்ட வலியை...என் மனமே மட்டுமே அறியும்,,,,இதை நான் ஏன் குறிப்பிடுறேன் என்றால்,,,,சேவை என வந்த பின்பு ,,,,உங்கள் சேமிப்பை அடகு வைக்க வேண்டாம்,,,,மக்கள் தங்கள் வாக்குகளால் உங்களுக்கு அளித்த அரசு கஜானாவை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்யலாமே,,,,,கஜானாவை சூறையாடி சேர்க்கும் பணம்,,,,என்ன செய்யும் ? வசதி,,,,பொருள்,,,,ஆடம்பரம்,,,,,இதுவா வாழ்க்கை,,,, ?????? இருப்பதை பகிர்ந்து ...கிடைத்ததை சேவையாக ....பிறர்க்கு கொடுக்கும் ஆனந்தமே சந்தோசம்,,,,கிடைத்த ஆயுளில் கோடிகளை வைத்து புரள்வதை விட,,,கடை கோடியாய் வாழ்ந்து,,,, கிடைத்ததை கடை கோடி மக்களுக்கு கொடுத்து உதவலாமே,

Advertisement