Advertisement

எழுத்தாளர் கலாப்ரியாவுக்கு விருது

திருநெல்வேலி: எழுத்தாளர் கலாப்ரியாவுக்கு, 68, நெல்லை பல்கலையின் 'மனோன்மணியம் சுந்தரனார் விருது' இன்று வழங்கப்பட்டது. .
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை சார்பில் தமிழில் கலை, பண்பாடு, இலக்கியம், மொழி ஆகியவற்றில் சிறந்து விளங்குவோரை தேர்வு செய்து இந்த விருது வழங்கப்படுகிறது.2014ல் முதன்முதலாக பேராசிரியர் இளையபெருமாள், சீனி விஸ்வநாதனுக்கு இணைந்து வழங்கப்பட்டது. 2015ல் தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன், 2016ல் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான விருதுக்கு கலாப்ரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது இயற்பெயர் சோமசுந்தரம். நெல்லை மாவட்டம் கடையநல்லுார் அருகே இடைக்காலில் வசிக்கிறார். வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.தமிழக அரசின் கலைமாமணி விருது, ஜெயகாந்தன் விருது, கண்ணதாசன் விருது, திருப்பூர்தமிழ்ச்சங்க விருது, சென்னை புத்தக கண்காட்சி அமைப்பாளர்களின் கருணாநிதி பொற்கிழி விருது பெற்றுள்ளார். 'வேனல்' என்ற நாவலை சமீபத்தில் எழுதினார். இன்று நெல்லை பல்கலை வளாகத்தில் நடந்த விழாவில் விருதுடன் ஒரு லட்சம் ரூபாய், பட்டயச்சான்றிதழை தென்காசி ஜவஹர் வழங்கி வாழ்த்தி பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    நமது நெல்லை சீமையின் மற்றொரு மகுடத்துக்கு நல்வாழ்த்துக்கள்

Advertisement