Advertisement

திறந்தவெளி கழிப்பிடமான வேப்பனஹள்ளி பஸ் ஸ்டாண்ட்

கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளியில், கடந்த, ஆறு ஆண்டுகளுக்கு முன், புது பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்ட போது, அனைத்து தொலை தூர பஸ்கள் மற்றும் வேப்பனஹள்ளியை சுற்றியுள்ள மலை கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும், இந்த பஸ் ஸ்டாண்டுக்குள் சென்று வந்தன. கடந்த சில ஆண்டுகளாக பஸ்கள் அனைத்தும் வேப்பனஹள்ளி பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாமல் பிரதான சாலையில் பயணிகளை இறக்கி விட்டு செல்வதால், எப்போதும் இந்த பஸ் ஸ்டாண்டு வெறிச்சோடி காணப்படுகிறது. இதை பயன்படுத்தி கொள்ளும் சிலர், திறந்த வெளி கழிப்பிடமாக பஸ் ஸ்டாண்டை மாற்றியுள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement