Advertisement

ஆய்வு:ரயில்வே அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள்:உளுந்துார்பேட்டை வரை ரயில் பாதை நீட்டிக்க வாய்ப்ப்பு

உளுந்துார்பேட்டை:கள்ளக்குறிச்சியில் இருந்து உளுந்துார்பேட்டை வரை ரயில் பாதையை நீடிப்பு செய்ய சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்த தென்னக ரயில்வே அதிகாரிகள் எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்களிடம் ஆலோசனை நடத்தினர்.விருத்தாசலத்தில் இருந்து சின்னசேலம், சேலம் வரை ரயில்கள் சென்று வருகின்றன. சின்னசேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி வரை ரயில்வே பாதை அமைக்க ஆய்வு செய்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் துவங்கப்பட்டு நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகளில் துறை அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர்.இதனிடையே கள்ளக்குறிச்சியில் இருந்து உளுந்துார்பேட்டை வரை ரயில் பாதையை நீடிப்பு செய்ய சாத்திய கூறுகள் குறித்து சென்னை தென்னக ரயில்வே உதவி தலைமை பொறியாளர் சங்கரநாராயணன் தலைமையில் முதன்மை போக்குவரத்து அதிகாரி விஜயபிரசாத், உதவி பொறியாளர் ஜீவநாயகம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.உளுந்துார்பேட்டையில் திருவெண்ணெய்நல்லுார் ரோடு, நகர் ரயில்வே நிலையத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள், எம்.எல்.ஏ., குமரகுரு எம்.பி.,க்கள் ராஜேந்திரன், காமராஜ் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது ஒன்றிய செயலாளர்கள் மணிராஜ், செண்பகவேல், ராஜசேகர், நகர செயலாளர்கள் துரை, சுப்பு, முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம், கூட்டுறவு சங்க தலைவர்கள் சம்பத்ஐயர், சாந்திமதியழகன், உதயக்குமார், பாண்டியன், செல்வராஜ், துணை தலைவர்கள் ஜீவானந்தம், ஜெயராமன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement