Advertisement

மல்லையாவின் லண்டன் வீடு பறிமுதல்?

புதுடில்லி : வங்கி கடனை திரும்ப செலுத்தாத, தொழில் அதிபர் விஜய் மல்லையாவின், லண்டன் வீட்டை ஜப்தி செய்யும் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.

கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்தவர், விஜய் மல்லையா. இவர், பொதுத்துறை வங்கிகளில், பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல், வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனில், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்துள்ள மல்லையாவை, நாடு கடத்தும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

அவருக்கு சொந்தமான நிறுவனம் பெற்ற கடனை திரும்ப செலுத்தாததால், மல்லையாவுக்கு சொந்தமான, லண்டன் வீட்டை பறிமுதல் செய்து, கடன் தொகையை ஈடு செய்யும் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. இதையடுத்து, லண்டன் வீட்டை மீட்க, தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் பெறும் முயற்சியில், மல்லையா ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டு பண பரிவர்த்தனையில் ஈடுபட்ட வழக்கில், மல்லையாவுக்கு சொந்தமான, பெங்களூரில் உள்ள சொத்துகளை முடக்க, பெங்களூரு மாஜிஸ்திரேட் கோர்ட் நீதிபதி, தீபக் ஷெராவத், போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து (10)

 • பாரதன். - ,

  இந்தியாவிலேயே இருக்கும் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், மாறன் சகோதரர்கள், இவர்களையே ஒன்றும் செய்ய முடியாத போது இங்கிலாந்திற்கு ஓடிப்போன இவரை என்ன செய்து விடமுடியும்?

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  இவன் விஷயத்தில் அரசு தீவிரமாக இருக்கிறது. சுட்டு தள்ளியிருக்கமுடியும் இந்திய உளவுத்துறையால் என்றோ. சட்டத்திற்கு மதிப்பளித்து சட்டரீதியாகவே இவனை நாடு கடத்தி வந்து இந்திய நீதிமன்றங்கள் வாயிலாக தண்டனை பெற்று தருவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விசாரணைகள் வழக்குகள் அரசின் தீவிரம் என்று எல்லாம் சரியான திசையிலேயே செல்கிறது. தற்போதைய அரசு நீடித்தால் இவன் மட்டும் அல்ல ஏமாற்றி விட்டு தப்பித்து விட்டு ஓடிய அனைவருமே நாட்டிற்கு இழுத்து வரப்பட்டு கொடுமையான தண்டனைகள் நிச்சயம் கிடைக்கவும் ஏமாற்றிய பணத்தை மீட்கவும் நிச்சயம் வலி செய்வார்கள். இவன் வழக்கு செல்லும் திசையை உற்று கவனித்து பாருங்கள் ஒன்று தெரியும், முந்தைய ஆட்சியாளர்கள் இவன் போன்ற பலரை பின்னாலிருந்து தப்புவித்து அவர்கள் பணத்தை கொள்ளை அடிக்க உதவியது நாகு தெரியும். இன்று எடுப்பது போன்ற நடவடிக்கைகளை அன்றே கூட அந்த அரசு எடுத்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் போபோர்ஸ் ஊழல் போபால் ஊழல் என்று அனைத்து வகையிலும் ஊழல் நடக்கவில்லை என்று நிரூபித்து கொண்டார்கள் தப்புவிக்கப்பட்டார்கள். தலைமை கை சுத்தமாக இருந்தால் நல்ல நேர்மையான அதிகாரிகள் நிச்சயம் நல்ல நடவடிக்கை எடுப்பார்கள். நல்ல அதிகாரிகள் பிரதமரை தனியாக சந்தித்து பேசவும் பிரதமரின் நேரடி ஆலோசனை மற்றும் ஆதரவை பெறவும் இன்று தாராளமாக முடிகிறது இடையில் தடுப்பதற்கு யாரும் இல்லை என்று சொல்கிறார்கள் உயர் அதிகாரிகள். தனது வெளிநாட்டு பயணத்தின்போது பல அதிகாரிகளை அவர் உடன் அழைத்து செல்கிறார். அவர்களை விமானத்தில் நேரம் ஒதுக்கி தனது தனி அறையில் சந்தித்து பேசுகிறாராம். இது போன்றல்லாவா இருக்க வேண்டும் பிரதமர். எத்துணையோ குற்ற சாட்டுக்களை அல்ல வேசிசுகிறார்கள் எதிர் கட்சியினர். ஏதாவது ஒரு குற்றசாட்டை நமது பிரதமர் மீது சொல்லட்டும் பார்க்கலாம். ஆதாரம் அல்லது கொஞ்சமாவது சந்தேக்கியும் வகையிலாவது இருக்கட்டுமே. குற்றச்சாட்டுக்கள் உண்மையா பொய்யா என்பதை நமது உள்ளுணர்வே சொல்லிவிடும். இவர் மீது நம் உள்ளுணர்வு நல்லவர் என்று தான் சொல்கிறதே அன்றி மறந்தும் தவறாக எண்ண இடமில்லையே.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  This action seems to be like " Chennaiel Mazhai Paidhal Delhiel Kudai Pidippaduu" pole .

 • Saravanan - Chennai,இந்தியா

  இங்கு பாசிச ஆட்சி நடப்பதால் ஓடி விட்டார். மீண்டும் சோனியா தலைமையில் ஆட்சி அமைந்தால், திரும்ப வந்து பல கோடி ரூபாய் கடன் வாங்கி மலிவு விலையில் டின் பீர் கொடுப்பர். எல்லா "குடி" மகன்களும் இவருக்கு ஆதரவு தாரீர்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தலையை விட்டு விட்டு வாலை பிடிப்பதில் நமது ஆட்கள் கில்லாடிகள்

" "
Advertisement