Advertisement

சென்னையில் இன்று

சென்னை: சென்னை, வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடக்கும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க, இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, வேலைவாய்ப்பு துறை ஆணையர், பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து, கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இன்று காலை, 10:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை, தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளன.இந்த முகாமில், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் பங்கேற்கலாம்.முகாமில் கலந்து கொள்ளும், 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 500க்கும் மேற்பட்ட நபர்களை வேலைக்கு எடுக்க உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
" "
Advertisement