Advertisement

கண் அறுவை சிகிச்சை மாஸ்கோவிற்கு ஒளிபரப்பு

சென்னை: எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் நடைபெறும், கண்புரைநோய் அறுவை சிகிச்சை, நேரடி யாக, இணையதளம்வாயிலாக, மாஸ்கோவிற்கு ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சி, நேற்று துவங்கப்பட்டது.எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் நடக்கும், கண்புரைநோய் மற்றும் ஒளி விலகல் அறுவை சிகிச்சையை, இணைய தளம் வாயிலாக, ரஷ்யாவின் தலைநகரமான, மாஸ்கோவிற்கு, நேரடியாக ஒளிப்பரப்பும் நிகழ்ச்சியை, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், அமைச்சர், விஜயபாஸ்கர் பேசியதாவது:எழும்பூர் அரசு கண் மருத்துவமனை, 200 ஆண்டுகள் பழமையானது. இங்கு, 2015ல், நவீன கண் பரிசோதனை துறை துவக்கப்பட்டது.கண் பார்வை இழப்பிற்கு காரணமான, கண்புரை நோய் அறுவை சிகிச்சையை, மாஸ்கோ ஹெல்ம் ஹால்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து, 2.60 லட்சம் பேருக்கு செய்யப்பட்டுள்ளது.அனைத்து ரஷ்ய கண் டாக்டர்கள் மன்றத்தின், 11வது ஆண்டு விழாவையொட்டி, கண் புரை நோய் மற்றும் ஒளி விலகல் அறுவை சிகிச்சையை, நேரடியாக, மாஸ்கோவிற்கு ஒளிபரப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், ரஷ்ய கூட்டமைப்பின் துாதர் அலேக் என்.அவ்தேவ், மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ, சென்னை அரசு மருத்துவக்கல்லுாரி டீன் ஜெயந்தி, எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குனர், ஆனந்தபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
" "
Advertisement