Advertisement

கங்கைக்காக போராடிய ஆர்வலர் காலமானார்

புதுடில்லி: கங்கை நதியை சுத்தப்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த சமூக ஆர்வலர் ஜிடி அகர்வால் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 87.

கங்கை நதியை தூய்மைபடுத்த வேண்டும் எனக்கூறி, அகர்வால், ஜூன் 22 முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். போராட்டம் 109 நாட்களை கடந்த நிலையில், நேற்று உடல்நிலை மோசமடைந்தது. இதனையடுத்து அவர் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போராட்ட காலத்தில், தேன் கலந்த தண்ணீரை அருந்தி வந்த அவர், 2 நாட்களுக்கு முன்னர் தண்ணீர் அருந்துவதையும் கைவிட்டார். இன்று(அக்.,11) மாரடைப்பு காரணமாக உயிர் பிரிந்தது.


ஜிடி அகர்வால், சுவாமி ஞானஸ்வரூப் சனாந்த் என்றும் அழைக்கப்பட்டார். ஐஐடி பேராசிரியராக பணியாற்றிய அவர், நதிகளுக்காக பல போராட்டம் நடத்தியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • nanthuji -

    ॐ.. தன் வாழ்வின் இறுதி நாட்களில் கூட, தளராமல் போராடி, கங்கை அன்னையின் பாதங்களில் சரணடைந்த, அய்யாவின் ஆத்மா சாந்தி பெறட்டும்.. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்..

  • Sudarsanr - Muscat,ஓமன்

    அன்னாரின் ஆத்மா ஷாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்..ஓம் ஷாந்தி...

  • கோகுல்,மதுரை -

    ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திகிறேன்.

Advertisement