Advertisement

தித்லி புயல்: ஆந்திராவில் 8 பேர் பலி

விஜயநகரம்: தித்லி புயலுக்கு ஆந்திராவில் 8 பேர் உயிரிழந்தனர்.


வங்கக் கடலில், சென்னைக்கு தென் கிழக்கில் உருவான தித்லி என்ற பெயரிடப்பட்ட அதிதீவிர புயல், நேற்று (அக்.,10) மாலை, ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கு இடையே, 200 கி.மீ., துாரத்தில் மையம் கொண்டிருந்தது.
ஆந்திராவின் விசாகப்பட்டினம், விஜய நகரம், ஸ்ரீகாகுளம், ஒடிசாவின் கஜபதி, கஞ்சம், குர்தா, நயாகார் மற்றும் புரி ஆகிய மாவட்டங்களில், கடும் பாதிப்பு ஏற்படும் என, ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. புயல், மணிக்கு, 14 கி.மீ., வேகத்தில் நகர்ந்து, இன்று அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் ஆந்திரா - ஒடிசா இடையே கரையை கடந்தது.


புயல் காரணமாக, ஸ்ரீகாகுளம் மற்றும் விஜயநகரத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இரு மாவட்டங்களிலும் மின் இணைப்பு மற்றும் தொலைதொடர்பு சாதனங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. கடற்கரையோரத்தில் உள்ள கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement